Breech position - Advice me

எனக்கு இப்போ 34 வரம் ஆகி விட்டது குழந்தை Breech Position இருக்கு என்று சொல்லுறாங்க..ஆபரேஷன் பண்ணனும் என்று சொல்லுறாங்க....குழந்தை திரும்ப சான்ஸ் இருக்கா...இதில் போல் அனுபவம் இருந்தால் எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்.....

ஹாய் மீனு ,நலமா? கவலை படாதிங்க இப்போ உங்களுக்கு 34 வாரம் தான் ஆகுது .36 வது வாரதிலத்தான் சரியாய் சொல்ல முடியும் ,இன்னும் 2 வாரம் உள்ளது. அதற்குள் பல மாற்றங்கள் வரலாம் . 34 வது வாரத்தில் குழந்தையின் சுழற்ச்சி
மிக குறைவாகவே இருக்கும் . பயப்பிடாமல் தெயிரியமாக எது வந்தாலும் சமாளிக்கும் மன துணிவுடன் இருங்க

Thanks for ur kind words lutha

God is love

Hai Meenu எப்படி இருக்கிங்க எனக்கும் breech baby தான் ஆபரேஷன் தான் ஆச்சு breech baby நார்மலா பொறக்கறதுக்கான சான்ஸஸ் ரொம்ப கம்மி அதனால தான் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிடுறாங்க ஆனா குழந்தை தலை திரும்புவதற்க்கு சில உடற்பயிற்சிகள் உண்டு அதை நீங்கள் உங்கள் doctorஐ கேளுங்கள். இதையே நினைத்து கவலைபடாதிங்க உங்க குட்டி மகனோ/மகளோ நல்ல படியா பொறப்பாங்க உங்களுக்காக நான் pray பண்ணிக்கிறேன்.

Keep smiling....

எனக்கு இரண்டு குழந்தைகள்..இரண்டுமே..டெலிவரிக்கு முன் breech position
தான்..முதல் குழந்தைக்கு டாக்டர்ஸ் ECV(External Cephalic Version) செய்தும்
டெலிவெரியின்போது அதே breech position தான்..அதனால் சிசேரியன்..2வது குழந்தைக்கும் அதுபோல்தான் ஆனது....

என்னுடைய அனுபவத்தில் பெரும்பாலும் breech position என்றால் அநேகமாக சிசேரியனாகத்தான் இருக்கும்...ஆனால் கவலைபடாதீர்கள்..ஒருவேளை
ECV முறையில் doctors ட்ரை பண்ணி நார்மலாகவும் வாய்ப்பு உள்ளது..

எனக்கு டாக்டர்ஸ் சொன்னது எனது utrus அமைப்புக்கு எப்போதும் breech position-dhaan aagum என்று...உங்களின் utrus அமைப்பில் நார்மலுக்கும் சாத்தியம் இருக்கலாம்...தைரியமாக இருங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களுடைய ஆறுதலான வார்த்தைக்கு மிக்க நன்றி ........நல்லபடியா குழந்தை பிறந்தால் போதும்....

God is love

உங்களுடைய ஆறுதலான வார்த்தைக்கு மிக்க நன்றி ........நல்லபடியா குழந்தை பிறந்தால் போதும்....Aroul and elu

God is love

ஹாய் மீனு ,

சிஷேரியன் ஆயிடுமோன்னு பயப்படாதீங்கப்பா. இப்போ நார்மல் டெலிவரிக்கு சான்ஸ் இருக்கும்போதே சில பேர் சிஷேரியன் பண்ணிக்கிறாங்க. முனே நாள்ல வீட்டுக்கு வந்திரலாம்.

நல்லா வழி வரும்போது தலை திரும்பும்னு சொல்லுவாங்க. அரைமணிக்கு ஒருதடவை 500ml தண்ணீர் குடிங்கப்பா. நல்லா சாப்பிடுங்க. பால் நிறையா குடிங்க, ஆரோக்கியமான குழந்தைப் பிறக்க வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

எனக்கு ஓரு உதவி சகோதரிகளே..எனக்கு நேத்து எடுத்த ஸ்கேன் லா இப்புடி வந்து இருக்கு changing lie breech. Presentation at present ethu normal ha

All is well

மேலும் சில பதிவுகள்