மட்டன் பக்கோடா

தேதி: May 27, 2010

பரிமாறும் அளவு: 2 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

மட்டன் - 7or8 சின்ன துண்டுகள்
வெங்காயம்- 1/2
இஞ்சி பூண்டு - 1/2tsp
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- பொரிப்பதற்கு


 

*குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
*பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி,1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4or5 விசில் விடவும்.
*கறிவெந்தவுடன்.தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.
*பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும்.தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
*மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.
*எண்ணேய் பொரிப்பதற்கு காயவைத்து பொரித்து எடுக்கவும்.
*சுவையான மட்டன் பக்கோடா ரெடி.


உப்பு மிளகாய்தூள் எல்லாம் instant mixல் இருக்கும் பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நான் அருசுவைக்கு புதுசு. குறிப்புகளை எப்படி அனுப்புவது என்று சொல்லவும். உங்கள் மட்டன் பக்கோடா மிகவும் அருமை

Ella Pughazhum Iraivanukke

http://www.arusuvai.com/tamil/node/14765
இந்த லின்க் ல போய் பாருங்க. எல்லா தகவலும் இருக்கும்.

arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்:)

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா