பாஸ்மதி ரைஸ்

பாஸ்மதி ரைஸ்ல சமைக்கும் போது ரைஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நீள நீளமாக சமைக்க என்ன செய்ய வேண்டும்.

Please someone help me

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.... அரிசியை நன்றாக ஊறவைத்து சமைக்க வேண்டும்.... வேண்டுமானால் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.... சாதம் தனி தனியாக இருக்கும்......

வித்யா பிரவீன்குமார்... :)

Thanks for ur tip. Let me try and let u know.

sankari

naan india gate basmati rice use seikireen idai ningal adika neram kuuda ura vaikka vendaam 1 glass ricekku 1 3/4 glass thanir serthaal podum.try seiyyungal.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hai Vidhya, Sohara rizwana

நான் இன்னிக்கு பாஸ்மதி rice சமைச்சு பாத்தேன். அரை மணி நேரம் ஊற வைச்சு எண்ணைய் ஊற்றி சமைத்தேன். ஓரளவுக்கு உதிறியாக வந்தது. It is definitely better than what I did previously. கடையில் உள்ளது போல் non-sticky ஆக இன்னும் நிறைய எண்ணைய் ஊற்ற வேண்டுமா ? அல்லது நீரின் அளவை குறைக்க வேண்டுமா?

sankari

ஒரு கப் அரிசிக்கு ஒன்றறை கப் தண்ணி correct-ஆ இருக்கும்..... எண்ணெய் நிறைய விட வேண்டாம்... ஒரு ஸ்பூன் போதும்.... அரிசி கவர் மேலயே தண்ணியோட அளவு குடுத்திருப்பாங்க.... இல்லனா நான் சொன்ன அளவு use பண்ணி பாருங்க......

வித்யா பிரவீன்குமார்... :)

பாஸ்மதி ரைஸ் சமைக்கும் போதி 1 கப் ரைஸ், 2 கப் தண்ணீர் விட்டு, ரைஸ் குக்கரில் சமைக்கவும். சமைத்து முடிந்ததும் முள்ளுக்கரண்டியால் லேசாக கிளறிவிடவும். சூடாக இருக்கும் போதே கிளறி விடவும்.
நான் இப்படித் தான் சமைப்பேன். நல்ல உதிரியாக வரும்.

வாணி

thanks to vidhya and vany
sorry for delay...
தண்ணி 1.5 கப் தான் எடுக்றென்.
முள் கரண்டி use பண்றது நல்ல ஐடியா.
நான் pressure cooker la தான் சமைக்றேன்.

sankari

பாஸ்மதி ரைஸ் சமைக்கும் போது நெய்யில் முதலில் அரிசியை வறுத்து விட்டு அதன் பின் 15 நிமிடம் ஊற வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்தால் உதிர் உதிராகவும் நீளமாகவும் வரும்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்