ஹெல்தி கஞ்சி

தேதி: June 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (9 votes)

 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 6
பச்சை பட்டாணி - சிறிதளவு
அரிசி - 3/4 கப்
தக்காளி - பாதி பழம்
பச்சை மிளகாய் - 2
பாசிப்பருப்பு, கிட்னி பீன்ஸ், black eye பீன்ஸ் - 1 /4 கப் மூன்றும் சேர்த்து
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 2 தேக்கரண்டி(துருவியது)
உப்பு - தேவையான அளவு
சீரகம், வெந்தயம்(சேர்த்து)- அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - தேவையான அளவு


 

வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். புதினா கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
பருப்பு வகைகளை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸியில் அரிசியை போட்டு பொடித்துக் கொள்ளவும்.
அதைப் போல் பருப்பு வகைகளையும் பொடித்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அதிகம் வதங்காமல் இருக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பச்சைமிளகாய், கடலை பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் புதினா, கொத்தமல்லி மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
அதில் 5 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.(அரிசி பருப்பு பொடி சேர்த்து 1 கப் அளவு இருக்க வேண்டும்) தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் அரிசி, பருப்பு பொடி சேர்த்து, கட்டி ஆகாமல் கிளறிக் கொண்டே சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவல், தக்காளி, உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விடவும்.
ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து தேவையென்றால் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான ஹெல்தி கஞ்சி ரெடி. டயட்டில் இல்லாதவர்கள் உளுந்து வடை, சமோசாவுடனும் சாப்பிடலாம். காய்கறி பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம். இதில் மட்டன் கொத்துக்கறி, சிக்கனை சிறுத்துண்டுகளாக வெட்டியும் சேர்க்கலாம். ஸ்வீட் கார்ன் பிடித்தவர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சல், சளி, கர்ப்பமாக இருக்கும் போதும் வாய்க்கு ரொம்ப ருசியா இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

உங்க ஹெல்தி கஞ்சி வித்தியாசமாக இரூக்கு.எனக்கு ஒர் பவுல் அப்படியே.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்திரா ஒண்ணும் சொல்ல முடியலை...எப்படிங்க இப்படில்லாம்...!!!

நல்ல குறிப்பு..வாழ்த்துக்கள்....இந்த கஞ்சிக்கு பச்சரிசியா/புழுங்கலரிசியா ?

எதுன்னு சொல்லுங்களேன்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் ரிஜ்வானா எப்படி இருக்கீங்க..?
நல்ல சத்தான குறிப்புதான் கொடுத்து இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

இளவரசி இது ரிஜ்வானா கொடுத்த குறிப்பு.நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆசியாmam assalamu alaikum நல்லா இருக்கிங்களாஉங்களுடைய பாராட்டை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.அடுத்தமுறை செய்யும் போது நிச்சயம் உங்களுக்காக ஒரு பவுலில் எடுத்து வைக்கிறேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

இளவரசி நல்லா இருக்கிங்களா. நான் சேர்த்து இருப்பது புழுங்கல் அரிசி பச்சைஅரிசியிலும் நல்லா இருக்கும்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அப்சரா நன்றி உங்கள் பாராட்டிற்கு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சாரிங்க...இந்திரான்னு டைப் பண்ணிட்டேன்..நல்லாயிருக்கேன்....உங்கள் குறிப்பு நல்லா இருக்குங்க...உங்க பதிலுக்கு நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் ரிஸ்வானா மேடம்
உங்கள் குறிப்பு அருமையாக இருந்தது நேற்று என் மகளுக்கு செய்து தந்தேன்
விரும்பி சாப்பிட்டாள் நிறைய குறிப்பு தாங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரிஸ்வானா எப்படி இருக்கீங்க? இந்த ரெசிப்பி வெளியான அன்னைக்கே செஞ்சி பார்த்துட்டு வந்து பின்னூட்டம் கொடுக்கனும் நினைச்சேன் முடியல. போட்டோவல ராஜ்மா மாதிரி இருக்கு. இந்த ராஜ்மாவ வறுத்து பொடி பண்ணி வேகவைக்கும் போது சீக்கிரம் வெந்துவிடுமா. இந்த வாரம் கண்டிப்பா ஹெல்தி கஞ்சிய செஞ்சி பார்க்க போறேன்.

கவிதா உங்க பொண்ணுக்கு பிடித்து இருந்ததா சந்தோஷம்பா ,நன்றி செய்து பார்த்து.பின்னூட்டம் அனுப்பியமைக்கு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

வினோஜா நான் நல்லா இருக்கேன்.//போட்டோவல ராஜ்மா மாதிரி இருக்கு// ராஜ்மாவேதான். நல்லா வெந்துவிடும் பயம் வேண்டாம்.பருப்புகளை அரைக்கும்போது கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்புங்கள்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

நல்ல குறிப்பு