தேதி: June 5, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா - 3 கப்
ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - கால் தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
பால் - அரை கப்
சூடான எண்ணெய் / நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மாவை சோடா உப்புடன் கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட்டை போட்டு அதில் அரை கப் மிதமான சூடான தண்ணீரை ஊற்றி மூடி 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஈஸ்ட் பொங்கி வரும்.

சலித்த மாவில் நடுவில் குழி போட்டு முதலில் தயிர் ஊற்றி அதன் மேல் ஈஸ்ட் கலவையை ஊற்றி, அதன் மேல் சர்க்கரை போட்டு சூடான எண்ணெயை ஊற்றி ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.

அதன் மேல் பாலை ஊற்றி உப்பு போட்டு சப்பாத்திக்கு கலப்பது போல் கலந்து மூடி போட்டு 4 முதல் 5 மணிநேரம் வைக்கவும்.(தேவைபட்டால் தண்ணீர் அல்லது பால் அதிகம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)

பிசைந்த வைத்த மாவை 4 முதல் 5 மணிநேரம் கழித்து பார்த்தால் நன்றாக பொங்கி வந்திருக்கும்.

அதில் ஆரஞ்சு பழ அளவு எடுத்து கொஞ்சம் தடிமனான சப்பாத்தியாக இட்டு கொள்ளவும்.

தண்ணீரை கையில் தொட்டு சப்பாத்தியின் மேல் பக்கத்தில் தடவவும். தண்ணீர் தடவிய சப்பாத்தி பக்கம் தோசை கல்லை தொட்டிருக்கும் படி வைத்து மூடி போட்டு 2 நிமிடம் வைக்கவும்.

மூடியை எடுத்து விட்டு தோசை கல்லை தலை கீழாக்கி சப்பாத்தி தீயில் படும்படி காட்டவும்.

ரொட்டி அதுவாக கழன்று வந்து விடும்.

சுவையான ரொட்டி ரெடி. கேப்ஸிகம் ப்ரான்சுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Comments
ரொட்டி
நாணை ஆல்டர் பண்ணி ரொட்டியாக செய்து அசத்திருக்கீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
அட்மினுக்கு நன்றி.
என் இந்த குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.
.
Save the Energy for the future generation
அன்பு ஆசியா
அன்பு ஆசியா,
நாணில் முட்டை சேர்ப்போம். இல்லையா? அதில் வெண்ணெயும் அதிகம் தேவைபடும். இந்த இரண்டும் இதில் கிடையாது. பாராட்டுகளுக்கு நன்றி ஆசியா.
Save the Energy for the future generation
இந்திரா
சூப்பர் குறிப்புங்க..சும்மாவா சொல்வாங்க...அனுபவசாலிகள் குறிப்பு கொடுத்தால் அது அசத்தலாகத்தான் இருக்கும்...!!!!
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இந்திரா
ஹாய் இந்திரா எப்படி இருக்கீங்க..?
தொடர்ந்து அசத்தலான குறிப்பாக கொடுத்து இருக்கீங்க.
எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.முடிந்த போது செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
எனறும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
இளவரசி , அப்சாரா
அன்பு இளவரசி , அப்சாரா ,
உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
Save the Energy for the future generation
roti
உங்களது ரொட்டி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
மிகவும் நன்றி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
இந்திரா
இந்திரா, மிகவும் அழகாக செய்து காட்டியிருக்கிறீர்கள். நான் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். நல்ல ரெசிப்பி.
வாணி
அன்பு கவிதா, வாணி
அன்பு கவிதா,
செய்து பார்த்து பின்னுட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
அன்பு வாணி,
செய்து பாருங்க , ரொம்ப சுலபமாகவும், ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்கும்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Save the Energy for the future generation