கிட்ஸ் கேப்ஸிகேரட் ரைஸ்

தேதி: June 7, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
பொடியாக நறுக்கின குடைமிளகாய் - அரை கப்
பொடியாக நறுக்கின கேரட் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
வறுத்து பொடிக்க:
வேர்கடலை - ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் - ஒன்று(விருப்பப்பட்டால்)
கடுகு - தாளிக்க


 

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் நான்கையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின கேரட்டை ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதே போல் நறுக்கின குடைமிளகாயை ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வேர்கடலையை போட்டு வறுக்கவும். ஓரளவு வறுபட்டதும் அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாயை போட்டு வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வேக வைத்த காய்களை போட்டு உப்பு சேர்த்து வதக்கி விட்டு அதில் வடித்த சாதத்தை கொட்டி மென்மையாக கிளறவும்.
கடைசியாக பொடியை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.
சுவையான கேப்ஸிகம் ரைஸ் ரெடி. இதில் விருப்பப்பட்டால் பச்சைபட்டாணி சேர்க்கலாம். கோவைக்காயிலும் இதே போல் செய்யலாம்.கோவைக்காய் என்றால் அவனில் அதிக நேரம் வேக வைக்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi uinkada recipe pathan nalla rukkuthu friday than sethupaakkanum,thanks.

என் குறிப்பை தவறாமல் வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் நன்றி :-)

அனுஷா,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பார்க்கவே நல்ல கலர் கலரா இருக்கு. மைக்ரோவேவ் அவன் இல்லைனா வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதோடு கேரட் கேப்சிகம் போட்டு வதக்கிகலாமா மேடம். கேப்சிகம், ரைஸ் எல்லாமே இருக்கு அதான் செய்ய தான் கேட்டேன்.

மேடம் வேண்டாமே பேர் சொல்லியே கூப்பிடுங்க....தோழிகளுக்குள் மரியாதை அவசியமில்லை..உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..
நான் அவனில் வேகவைத்ததற்கு காரணங்கள்:குழையாமல்,சத்து குறையாமல்,நிறம் மாறாமல் அதேநேரம் வெந்திருக்கும்.
நீங்கள் வதக்குமுன் நறுக்கிய காய்களை,கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடித்துவிட்டு,காய்களை தக்காளியுடன் சேர்த்து வதக்குங்கள்.அப்போது சீக்கிரம் வதங்கும்.சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்....
முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கேப்சிகம் ரைஸ் சூப்பர்ப். நல்ல சுவை. நீங்கள் சொன்னப்படியே காய்களை கொதிக்கும் நீரில் போட்டு பின்னர் எடுத்து வதக்கினேன். நன்றி மேடம். ரைஸ் தான் கம்மியா இருந்துச்சு, வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு நேத்து இருந்த சாதத்தை வச்சு செய்துட்டேன், இன்னொரு நாள் இதற்க்காகவே சாதம் வடிச்சு செய்து பார்க்க போறேன். நல்ல குறிப்பு கொடுத்ததுக்கு நன்றி இளவரசி.

செய்து பார்த்தீர்களா..?பிடித்திருந்ததா?மகிழ்ச்சி

தவறாமல் பின்னூட்டம் கொடுத்ததுக்கு நன்றிங்க..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பார்த்தவுடன் இது உங்கள் குறிப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.அருமையாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களின் பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி..

அறுசுவையில் அநேகமாக நாம் பேசி கொள்வது இதில் மட்டும்தான் அல்லவா?..:-)

பிள்ளைகளுக்கு என் அன்பை சொல்லவும்.

அன்புடன்,இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Dear Ela,

Im new for thi site and your honey cake looks very intresting...

I want to try this cake...

but i dont have convection mode at my oven...
mine is grill oven...
please advice, how to make cake in my oven...

I have only glass bowl (cassorloe), i dont get cake tray here...

Can i make cake in glass bowl...
please help...

நான் இந்த Comment cake page போட்டன்...but இது new, so நீங்க சீக்கரமா reply பண்ணூவெங...

PLease reply...

Thanks you so much...
Dhivya
PS; sorry for my spelling mistakes in tamil, im trying to type in tamil first time...so :O)

Be happy, make others happy

அன்பு இளவரசி,
இன்று லன்ச் பாக்ஸிற்கு உங்க கிட்ஸ் காராட் கேப்ஸி ரைஸ் தான் செய்தேன். சுலபமாகவும், ருசியாகவும் ,கண்னை கவரும் வண்ணமிருந்தது. எப்போதும் இந்த பொடிகள் ரெடியாக இருக்கும். இதெ பொடியை புளிசாதத்திற்கும் பயன் படுத்துவேன்.

Save the Energy for the future generation

நன்றிங்க...கோவைக்காய் பொடியா நறுக்கி இதேபோல் செய்து பாருங்க..அதுவும் சுவை நல்லா இருக்கும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி அக்கா நலமா? சமையலில் கலக்குரிங்க வாழ்த்துக்கள் அக்கா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என்னப்பா ..நிறைய அக்கா போட்டு ,என் வயசை கூட்டுறீங்க :(

ப்ளாக் வச்சுருக்கீங்க போல...அப்புறம் நான் கலக்கறேங்கறீங்க...:-)

நல்லாயிருக்கீங்களா?புதுவருசத்தில் இப்பதான் பேசறோம்னு நினைக்கிறேன்..!!!

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தங்கச்சி :-)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கேப்ஸிகேரட் ரைஸ் சூப்பர்ப். என் குழந்தைக்கும் கணவருக்கும் பிடித்திருந்தது. Thanks for giving the nice recipe. Taste is good.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி..நன்றியும் கூட
நீங்களும் நல்ல குறிப்புகளை கொடுக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

hi,

i made yesterday this rice.

it came out well .

i added beans ,carrot and capsicum.

we too ate this. we and my kid enjoyed this.

adding peanut powder is diffferent and tastes good.
thanks,
priya.

இளவரசி மேடம்,

எப்படி இருக்கீங்க? உங்க இந்த ரைஸ் செய்தேன் மிகவும் அருமை, சுவையாய் இருந்தது. அட்மினுக்கு ஒரு படமெடுத்து அனுப்பி இருக்கிறேன். விரைவில் வெளியிடுவாங்க என்று நம்புகிறேன்.

priya,thanks for ur feedback and comments

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

pops,thanks for ur feedback ...:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.