சிக்கன் சூப்

தேதி: June 7, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (9 votes)

 

வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - ஒன்று
கோழி துண்டுகள்(எலும்புடன்) - 4
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு பின்ச்
உப்பு - தேவையான அளவு
சீரகம், மிளகு - சிறிதளவு


 

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் திறந்து சுப்பை வடிக்கட்டவும்.
சுவையான சிக்கன் சூப் ரெடி. சிக்கன் சூப்பை 8 மாதம் முதல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளி இருமல் சமயத்திலும் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு இன்னும் அதிகமாக மிளகு தூள் சேர்த்தும் கொடுக்கவும். சிக்கனுக்கு பதிலாக மட்டன் எலும்புடன் அல்லது ஈரலிலும் இந்த சூப் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தோழி நேற்று எங்க வீட்டில் உங்க இந்த குறிப்பு தான். ரொம்ப அருமை. சூப்பரா இருந்ததுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்பியமைக்கு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL