அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

ஹாய் க்ரேஸ்ரவி!
நாம ரொம்ப பக்கத்தில்தான் இருக்கோம். நீங்க சொல்லும் காய்கறி தோட்டம் நான் ஒருமுறை போயிருக்கேன்.
எங்க பில்டிங் எதிரில்தான் இருக்கு. உங்களுக்கு பாட்டுக்ளாஸ் எடுக்கும் அனுராதா மேடம் தெரியுமா?
9த் 10த்க்கு மேத்ஸ் ட்யூசன் எடுக்கும் பிஷ்ஷி மேடம் தெரியுமா?
எங்க பில்டிங் கண்டுபிடிக்க ஒரு க்ளூ தர்றேன். கண்டுபிடிச்சிட்டா இங்கு சொல்லவேண்டாம்.
எங்க பில்டிங் இருக்கும் லைனில் ஒரு கார்னரில் மெடிக்கல் ஷாப் இருக்கு. இன்னொரு கார்னரில் லாண்டரி இருக்கு. இதுதான் முதல் க்ளூ! நீங்களும் இதேபோல் ஏதாவது க்ளூ தரவும்.
நாங்க மதினா ஸ்டோரில்தான் மளிகை,காய்கறி சாமான்கள் வாங்குவோம் (டோர்டெலிவரி).
முன்பெல்லாம் அடிக்கடி ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து 100 ஃபில்ஸ் ஷாப் போவேன்.
இப்ப இந்நாட்டு ஸ்கூல் பசங்க ரொம்ப அட்டகாசம் பண்றாங்க.
போறவங்க, வரவங்களை அடித்து கையில் கிடைப்பதை பிடுங்குவதும்னு வெளியில் போகும் ஆசையே போய்டிச்சு.
எப்பவும் எங்க பில்டிங் காம்பவுன்டில்தான் உட்கார்ந்துப்பாங்க.(க்ளூ நம்பர் 2).
மீதி பிறகு!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!
நாங்க ஜூன் 22ம்தேதி இந்தியா கிளம்புகிறோம். அதனால் எல்லார்க்கிட்டயும் பேச முடியலை.
ஷாப்பிங், பேக்கிங், வீடு க்ளீனிங் என்று நிறைய வேலைகள் இருக்கு.
நாளையிலிருந்து மகனும்,மகளும் 12 மணிக்கே ஸ்கூல்விட்டு வந்திடுவாங்க.(வெயில் அதிகமாய் இருப்பதால்)
17ம்தேதிவரை ஸ்கூல் இருக்கு. அதனால் அறுசுவைப்பக்கம் வரும் நேரம் குறைந்துவிடும்.
மீண்டும் பிறகு சந்திக்கலாம்!

ஹாய் ப்ரியா!
வெகேஷன் முடிந்து செப்டம்பர் 15ம்தேதிபோல் வருவோம். பசங்களுக்கு ஸ்கூல் செப்டம்பர் 18 என்று நினைக்கிறேன். உங்க பாஸ்போர்ட் பிரச்னை பற்றி எனக்கு எதுவும் தெரியலை.
தெரிந்தால் சொல்கிறேன்.
ஆனா, நீங்க இங்ககூட உங்க கணவர் பெயரை சேர்த்துக்கலாம்னு நினைக்கிறேன்.
இதுவிஷயமாய் என் கணவர்கிட்ட கேட்டு பார்த்திட்டு மெயில் அனுப்பறேன்.
மேரேஜ் சர்டிஃபிகேட் இங்கு இருக்கா?

Hi Priya,

I met the same situation here. First you should add your husband name in your passport then only u can take ur baby's passport. get more details from indian empassy . but it is must. dont get delay .

ரொம்ப நன்றி அக்கா, நானும் டெலிவரிக்காக.ஜுலை முதலில் ஊருக்கு போகிறேன்

வாழ்க வளமுடன்

ஹாய் கீதா நீங்க இங்க உங்க ஹஷ் பெயர் இங்கு(kuwait)சேர்த்தீர்களா? அல்லது இந்தியாவில் சேர்த்தீர்களா? எவ்வளவு நாள் எடுத்தார்கள். என் marriage certificate நான் வைத்து உள்ளேன்.

வாழ்க வளமுடன்

hi priya i am also in hawally st.tunis. i think we r very near.are you pregnant? how many month now ? y not u deliver here? bcoz i am also pregnant 6 th month. i am planning to deliver here.i dnt knw about any rules in sabah hospital .can anyone tell me plz.

nalifa எப்படி இருக்கிங்க எனக்கு 6மாதம் எனக்கு முதல் குழந்தை அதனால் வளைகாப்பு எல்லாம் பண்ண வீட்டில் எல்லாம் ஆசை எனக்கும் ஊருக்கு போய் எல்லாரையும் பார்க்க ஆசை முதலில் பக்கத்தில் clinic file open பன்னினால் அதற்கு அப்புறம் அவங்களே சபா refer பன்னுவாங்க சொல்லுவாங்க நீங்க ஒருத்தராவது எனக்கு பக்கத்தில் இருக்கிங்க எனக்கு சந்சோஷமா இருக்கு நீங்க house wife? tell about ur self.

வாழ்க வளமுடன்

ஹாய் சாய் கீதா! உங்க வீட்டு வழியா நெறைய முறை போயிருகோம். இவ்வளவு ஏன்? 2 வாரத்துக்கு முன்னாடி அங்க ஒரு பில்டிங்கல கிரௌண்ட் ப்ளோர் வீடு ஒன்னு காலியா இருக்குனு பாக்க வந்தோம் ஆனா அது ரொம்ப சின்னது. அந்த கிரௌண்ட் தலத்தில் நிறைய தமிழ் குடும்பம் இருப்பதுபோல் தெரிந்தது. 2 வாரத்துக்கு ஒருமுறை நாங்கள் கீரை தோட்டம் வருவோம் எப்போது என்மகளுக்கு லீவ் ஆரம்பித்துவிட்டது. அதனால் எங்கயும் போகமுடிவதில்லை. உங்க பில்டிங் ஒரு க்ளு தரட்டுமா?(ரெட் வண்ணம் தானே!)

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

பிரியா அக்கான்னு தாராளமா சொல்லலாம். முதலில் பாஸ்போர்ட் இல் கணவர் பெயர் இல்லாமல் இங்கே வருவதற்கு எப்படி விசா எடுத்தீர்கள்?
இப்போது நீங்கள் ஊருக்கு போனவுடனே பெயர்மாற்றம் செய்ய பாஸ்போர்ட் ஆபீஸ் போய் விசாரிக்கவும். பின்னர் குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கான பாஸ்போர்ட் எடுக்கவும். ஆனால் உங்கள் பாஸ்போர்ட் கணவர் பெயர் கட்டாயம் இணைக்க வேண்டும்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்