எங்க வீட்டில் நான் சும்மா ! உங்க வீட்டில் நீங்க????

எங்க வீட்டில் நான் சும்மா (உப்புக்கு சப்பானி என்ற உணர்வு) ! உங்க வீட்டில் நீங்களும் அப்படியா??????

இங்க எல்லாரும் எதை மனசுல வெச்சுகிட்டு "சும்மா"னு சொல்லிருக்கீங்கன்னு தெரியல. எனக்கு தோணுறதை சொல்லிடறேன். உலகத்தில் பிறந்த எந்த உயிரும் வெட்டி இல்ல. அது அது வந்த கடமையை செய்யுது. ;) நாம சும்மா, உப்புக்கு சப்பானி, நம்மை யாரும் எதுவும் கேட்பதில்லை, கண்டுக்குறதில்லை, வெட்டியா இருக்கோம், நம்மால் பயனில்லை, சம்பாதிக்கலை, நம்மை கேட்டு எதுவும் செய்வதில்லை... இப்படி பல பெண்கள் நினைப்பதுண்டு. ஆனால் அந்த எண்ணமே சில நாட்களில் அவர்களை அப்படி ஆக்கிடும். நாம தான் எல்லாதுலையும் நம்மை இன்வால்வ் பண்ணிக்கணும். அப்போ பாருங்க... நாமளும் பிசி, நம்மை பற்றி மற்றவரும் புரிஞ்சுக்குவாங்க, திறமைகள் வெளி வரும்... இன்னும் நிறைய சொல்லலாம்.

எனக்கு தூங்க நேரம் கிடைப்பதில்லை. வேலை'கும் போகலை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லை. பின்ன எப்படி நேரம் போகுது?? பல விஷயங்களை செய்யுறதால போகுது. :D

அதனால்... அறுசுவை தோழிகள் யாரும் இனி வீட்டில் சும்மா இல்லை. சும்மா இருக்குறதா நினைச்சா, குழந்தைகளோட நேரம் போக்குங்க, அது அவங்களை செதுக்க உதவும். புத்தகம் படிங்க... அது உங்களை செதுக்க உதவும். அறுசுவை'கு குறிப்புகள் அனுப்புங்க, அது மற்றவர்களுக்கு உதவும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சொல்வது சரி தான். நம்மை நாமே ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும். பெண்கள் வேலைக்கு போனாலும், போகாவிட்டாலும் பிஸி தான். வனிதா சொல்வது போல நானும் வேலைக்குப் போவது இல்லை, டிவி என்றாலே வெறுப்பு.

ஆனால் காலை 6 மணிக்கு எழுந்தால் இரவு 10 மணி வரை நேரம் போவதே தெரியாது. ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பேன்.

நேரம் போகாவிட்டால் ஏதாவது எழுதுங்கள், பிள்ளைகளோடு விளையாடுங்கள், காலாற நடக்கலாம். நிறைய இருக்கு. வாழ்க்கையை அனுபவிக்க பழகுங்கள்.
வாணி

வனி,வாணி, நீங்க இருவரும் சொல்வது மிகவும் சரி.இன்த பதிவைப்பார்த்துட்டு, நான் சொல்ல வன்ததை நீங்கள் இருவரும் சொல்லிவிட்டீர்கள்.
இன்னும், சொல்லணும் என்றால், வீடு சுத்தம் செய்யலாம், கணவருக்கும், குழந்தைகளுக்கும் ஏதாவது வித்தியாசமாக ரெசிப்பி செய்ய்து வெக்கலாம்.எனக்கும், தூங்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. இதுதான் வாழ்க்கை.வாணி சொன்னதுபோல் அதை முடிந்தவரை, பாசிடிவ்வாக பார்த்து, அனுபவிப்போமே.

உங்களுக்கு த்யல் தெரியுமா? நானும் சும்மா த்யல் செய்கிரன் you try it.

can anyone help what tamil font I should use in this site and provide a link for the same?.

ரஜீ
எனக்கும் இந்த கவலை 1 1/2 வருடத்துக்கு முன்னால இருந்தது இப்ப இல்லை இந்த நாட்டுக்கு வந்த புதுசுல ஒழுங்கா பேசக்கூட தெரியாது ஏங்husband கூட்டிட்டு போனாதான் வெலி உலகம். குளிர்ல எந்திரித்து வேலையும் செய்ய பிடிக்காது t.vயும் soffaவும்னு ஓடுச்சு நான் pregnand ஆகி 6 மாததுல தனியா வெலியில நடக்க ஆரம்பித்தேன் குழந்தைக்காக உல்லன் ஜாக்கட் பின்ன try பன்னுனேன் அப்பரம் பொன்னுக்கு 1 yearஆனதும் college -laசெந்தேன் இப்ப அருசுவைல சேந்திருக்கேன் இன்னும் நிரைய கத்துக்கனும் (ஒரு முக்கியமான விசயம் இப்ப நிரைய இடங்கல online ல கன்டுபிடிது நான் தான் எங் husband-a வெளியில இழுத்துட்டு போரேன்) இப்படி நீங்கலும் மெதுவா மெதுவா நீங்கலே bisy ஆக்கிக்கங்க தானா bisy ஆகாது நாமதான் ஆக்கனும்

pavam neega. summa irukarathu pariya visayam illa , ana oppuku sappani na romba kastham. nan vittula summa irukaren sollula ana enaku eppavum mariyathai irukum....

Fear that man, who fears not God...

மேலும் சில பதிவுகள்