ஈஸி கிட்ஸ் வெஜிடபிள் சூப்

தேதி: June 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

பீன்ஸ் - 2
காரட் - 1
பேபி உருளை - 1
பச்சை பட்டாணி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - ஒரு பல்
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி


 

காய்கறிகள் அனைத்தையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை காய்கறிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
காய்கறி கலவையுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 3 விசில் வந்ததும் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
இறுதியாக மிளகு தூள் தூவி இறக்கவும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு இட்லி தோசை சாதத்தில் சேர்த்து கொடுக்கலாம்.
இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக திருமதி. சங்கரி வஸந்த் அவர்கள் செய்து காட்டியுள்ளார்.

காய்கறிகளை குக்கரில் வேக வைத்ததனால் சாதத்தில் சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் சங்கரி எப்படி இருக்கீங்க நல்ல குறிப்பு நான் இதே போல் நெய்யில் தாளித்து என் குழந்தைகளுக்கு கொடுப்பேன். சீரகம்,மிளகு தூள் சேர்த்ததில்லை இனி இதே போல செய்து பார்க்கிறேன். உங்க குழந்தையும் க்யூட்டா இருக்கிறாள்.

நலம். நீங்கள் நலமா? சந்தோஷமாக இருக்கின்றது உங்கள் பின்னூட்டத்தை படிப்பதற்கு. மிளகு தூள் குழந்தைகளுக்கு சேர்ப்பது மிகவும் நல்லது. செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தாருங்கள்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

சங்கரி மேடம்,
உங்க குறிப்பு நன்றாக இருக்கிறது
மேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

i have 8 months baby. can i give this to her ?

ஹாய் சங்கரி,

எந்த வயது குழந்தைக்கு இந்த சூப் குடுக்கலாம்? 1.5 வயது குழந்தைக்கு குடுக்கலாமா?

லேட்டா பதிலளிப்பதற்கு sorry.நான் கவணிக்கவில்லை. நீங்கள் உங்கள் குழந்தைக்கு தாராளமாக கொடுக்களாம். நான் 7 மாதத்தில் இருந்தே என் குழந்தைக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

sorry for late reply. நீங்கள் சாதம் 6மாதத்தில் இருந்தே கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்கணா 7 மாதத்தில் இருந்தே இந்த சூப் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்ப்பது தான் ரொம்ப நல்லதுன்னு Dr சொல்றாங்க. சாதத்தின் அளவை குறைத்து கொண்டு காய்கறிகளின் அளவை கூட்டி கொள்ள வேண்டும்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்