நிக்கோபாரில் நிலநடுக்கம்

கிட்டத்திட்ட இராத்திரி ஒரு மணி இருக்கும். சிஸ்டம்ல ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். திடீர்னு நான் உட்கார்ந்து இருக்கிற சேர் கீழே போற மாதிரி ஒரு ஃபீலிங். தலை சுத்த ஆரம்பிச்சுது. உடனே நிலநடுக்கம்தான் நினைவுக்கு வந்துச்சு. மேசை, கம்ப்யூட்டர் எல்லாம் ஆடுதான்னு பார்த்தேன். எல்லாம் அப்படியே இருக்கு. சேர்ல படுத்த மாதிரி நல்லா சாஞ்சு உட்கார்ந்து இருந்ததால, கீழே விழுற மாதிரி என்னால நல்லா உணர முடிஞ்சுச்சு.

உடனே usgs.gov சைட்டை ஓபன் பண்ணிட்டேன். அதுல ரீஸண்டா எதுவும் ரெக்கார்ட் ஆயிருக்கான்னு பார்த்தா, எதுவும் ஆகலை. 7 மணி போல சுபத்ரா பக்கம் சின்னதா ஒரு நிலநடுக்கம் ரெக்கார்ட் ஆயிருந்துச்சு. அப்ப வேற ஏதோ காரணத்தால தலைசுத்தல் வந்திருக்கும் போலன்னு விட்டுட்டேன். அதுக்கப்புறம் கீழே போய் பார்த்தா, வீட்டுக்கார அம்மாவும் முழிச்சுதான் இருந்தாங்க, அவங்ககிட்டே என் அனுபவத்தை சொல்லிக்கிட்டு இருந்தேன். இந்த மாதிரி தலைசுத்தல் எனக்கு வந்ததே இல்லை. நான் நிலநடுக்கமா இருக்கும்னு உங்களை எல்லாம் கூப்பிட்டுட்டு வீட்டுக்கு வெளியில போகலாமான்னு நினைச்சேன்னு எல்லாம் சொல்லிட்டு, அப்புறம் பசிக்குதேன்னு தோசை ஊத்தி சாப்பிட்டுட்டு(:-) மறுபடியும் மேலே வந்தேன். அந்த சைட் அப்படியே ஓபனாகி இருந்துச்சு. க்ளோஸ் பண்றதுக்கு முன்னே ஒரு டைம் ரெப்ரஷ் பண்ணுவோமேன்னு பண்ணி பார்த்தா, மேப் ல ஒரு பெரிய கட்டம் இருந்துச்சு.. கிளிக் பண்ணி பார்த்தா.. நிகோபார் பக்கத்துல 7.7 ரிக்டர் நிலநடுக்கம் காட்டுனுச்சு.. ஆஹாஹா.. நமக்கு வந்த தலைச்சுத்தல் இதனாலத்தான்னு ஓடிப் போய் டி.வி யை ஆன் பண்ணி பார்த்தா, எல்லா சேனல்லயும் ப்ளாஷ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு. சென்னையில எல்லா இடங்கள்லயும் லேசான அதிர்வு இருந்திருக்குன்னு..

வரிசையா நம்ம சகோதர, சகோதரிக்கு போன் பண்ணி கேட்டா, எல்லாம் நல்ல தூக்கத்துல இருக்காங்க.. 'அப்படியா!' ங்கிறாங்க.. கடற்கரை ஓரம் இருக்கிற நம்ம மீனவ நண்பர்களுக்கு போன் பண்ணி கேட்டா, அங்கேயும் இதே கதைதான். எல்லாரும் நல்ல தூக்கத்துல இருக்காங்க. இத்தனைக்கும் இந்தியாவுக்கு சுனாமி வார்னிங் கொடுத்து இருக்காங்க. சுனாமி வார்னிங் கொடுத்தும், ஏன் கடலோர மக்களுக்கு எந்த செய்தியும் போய் சேரலைங்கிறது பரிசீலிக்கப்பட வேண்டிய விசயம். 2004 சுனாமியில அதிகம் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம்தான். அப்போ சுனாமி பற்றி யாருக்குமே தெரியாது. இப்போ அப்படியில்லை. இந்த மாதிரி நேரங்கள்ல சரியான எச்சரிக்கை கொடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் எதாவது செஞ்சு இருக்கணும். சுனாமி வரலைங்கிறது அடுத்தபட்சம். வந்திருந்தால்..? ஏன் இவ்வளவு அலட்சியம்னு தெரியலை.. மனித உயிர்களுக்கு நாம கொடுக்கிற மதிப்பு எந்த அளவுன்னு இந்த மாதிரி அலட்சியப் போக்கிலத்தான் தெரிய வருது. :-(

சகோதரி கவிசிவா அவர்களுக்கு,

இந்தோனேசியாவில நிலநடுக்கத்தோட அதிர்வுகள் இருந்ததா?

அட்மின் அண்ணா எங்களுக்கு எதுவும் தெரியவில்லை நல்ல தூக்கம் :). இப்போதான் லோக்கல் சேனல்கள் போட்டுப் பார்க்கிறேன். எந்த சேனலிலும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் இருந்ததாக போடவில்லை. இந்திய கடல்பகுதியில் 7.7ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக மட்டுமே ஃப்ளாஷ் நியூஸ் ஓடுகிறது. இந்தோனேஷியாவுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

அக்கறைக்கு மிகவும் நன்றி அட்மின் அண்ணா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க ஆன்லைன்ல இருந்ததை பார்த்தேன். அதனாலத்தான் கேட்டேன். :-)

மேலும் சில பதிவுகள்