ப்ளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு ஹேர் க்ளிப் செய்வது எப்படி?

தேதி: June 14, 2010

4
Average: 3.7 (26 votes)

 

ப்ளாஸ்டிக் பாட்டில் - ஒன்று
ஐஸ்க்ரீம் குச்சி - 2
வெல்வெட் துணி - கருப்பு, சிவப்பு
பெவிக்கால்
கத்திரிக்கோல்
சிறிய பூக்கள்
மணிகள்
க்லிட்டர்ஸ்

 

முதலில் ஹேர் க்ளிப் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாட்டிலில் சமமாக உள்ள நடுப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சமமான இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் ஒரு துண்டின் அளவிற்கு ஏற்ப சிவப்பு நிற வெல்வெட் துணியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் வெல்வெட் துணியை அந்த பாட்டில் துண்டில் பெவிக்கால் தடவி ஒட்டவும். சுலபமாக இருக்க முதலில் ஓரங்களை மடித்து வைத்து நான்கு ஓரங்களிலும் ஸ்டேப்ஃபளர் பின் போட்டுக் கொள்ளவும்.
அதன் பின்னர் க்ளிப்பில் ஐஸ்க்ரீம் குச்சியை சொருக, இரண்டு எதிரெதிர் முனைகளிலும் கத்தி அல்லது ப்ளேடை வைத்து குச்சியை உள்ளே நுழைக்கும் அளவிற்கு துளைகள் போட்டுக் கொள்ளவும்.
இப்போது ஹேர் க்ளிப்பை பூக்கள் மற்றும் க்லிட்டர்ஸ் வைத்து அலங்கரிக்கவும். ஐஸ்க்ரீம் குச்சியை கருப்பு நிற பெயிண்ட் அடித்து சிறிது நேரம் காய விடவும்.
இதைப் போலவே கருப்பு நிற வெல்வெட் துணியை ஒட்டி வெள்ளை நிற பூக்கள் மற்றும் ஸ்டோன்களை வைத்து அலங்கரித்துக் கொள்ளவும். இந்த அழகிய ஹேர் க்ளிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் பத்மா, ரேவதி

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு.

Don't Worry Be Happy.

பாட்டில் வைத்து கிளிப் கூட செய்யலாமா? அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

miga nandraga ulladu.Arumaiyana yosanai.

nisarbanu

miga nandraga ulladu.Arumaiyana yosanai.

nisarbanu

அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது.

பாராட்டுக்கள்..:-

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் பத்மா & ரேவதி,

கலக்கல் குறிப்பு. கைவினை பிடித்திருக்கிறது.

ஆளுக்கொன்று கூந்தலில் தொங்க விட்டுக் கொண்டால் யாரும் ஆபீஸ் சுவரில் 'வால் ஹேங்கிங்' என்று சொல்ல மாட்டாங்க. ;) நல்ல ஐடியாதான் பிடிச்சு இருக்கிறீங்க. பாராட்டுக்கள். வாழ்க, வளர்க அறுசுவை டீம். ;)

எனக்கு ஒரு டவுட்... ஆபீஸ்ல ஃபான்டா கோக் எல்லாம் கேஸ் கணக்கில் வாங்கி வைத்து இருப்பீங்களோ!!

‍- இமா க்றிஸ்

எப்படீ இதெல்லாம்?! ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் ரீசைக்ளிங் பணி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பத்மா , ரேவதி ரொம்ப அருமை.
நல்ல யோசனை.
பாட்டில் வளைந்து உள்ள பகுதி கழுத்தில் குத்தாதா?
வாழ்த்துக்கள், செம்மையாக அறுசுவையை கவனித்துக் கொள்வதும் இல்லாமல்.
வித விதமாக கை வேலையும் செய்து அசத்துறீங்க.

ஜலீலா

Jaleelakamal

எப்படியா இப்படிலாம் யோசிக்கறீங்க!!! இது மாதிரி ஐடியா குடுக்கவே தனி திறமை வேணும். கலக்குங்க. ரொம்ப சூப்பர்!!! நாங்கலாம் உங்ககிட்ட நிக்க கூட முடியாது :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க நல்லா இருக்கு

அட, பாட்டிலை வைத்து ஹேர் க்ளிப்பா?!! பிரமாதமான ஐடியாவா இருக்கே?! செய்முறையும் ஈஸியா, பார்க்க ரொம்ப அழகா இருக்கு இந்த க்ளிப். வாழ்த்துக்கள் பத்மா & ரேவதி!

அன்புடன்
சுஸ்ரீ

பாட்டில் கி்ளிப் சுப்பர்.எப்படி இப்படியெல்லாம்.

ஜெயலெஷ்மி, கவிதா, பானு, இளவரசி, கவிசிவா, சுஸ்ரீ, சஹ்லா, இமா, வனிதா, நஸ்ரீன்கனி, ஜலீலா அனைவரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி.
ஜலீலா மேடம் துணி வெட்டும் போது சரியாக பாட்டிலின் அளவிற்கு வெட்டாமல் எக்ஸ்ட்ராவா கொஞ்சம் துணி இரண்டு பக்கங்களிலும் சேர்த்தே வெட்ட வேண்டும். பாட்டிலின் அளவிற்கு ஒட்டி இரண்டு ஓரங்களிலும் மீதம் இருக்கும் துணியை கூர்மையான பகுதியையும் மூடியப்படி தான் ஒட்ட வேண்டும். அதனால் குத்தும் என்ற பயம் வேண்டாம்.
***நாங்கலாம் உங்ககிட்ட நிக்க கூட முடியாது :(*** வனிதா ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் இருக்க கூடாது.

பத்மா & ரேவதி... நிஜமா தான் சொன்னேங்க. உங்க அளவுக்கு எனக்கு creativity கிடையாது. நீங்க செய்யும் எல்லாமே சும்மா தூக்கி போடும் பொருளை பயன்படுத்தி என்பது தான் ஸ்பெஷல். :) Simply Super.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமை...... நல்ல ஐடியா ....

Its Really very nice

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

super