microwave oven -தேர்வு செய்வது எப்படி

அன்புள்ள அறுசுவை தோழியர்களே,
புதிதாக microwave oven வாங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். எந்த brand தரமானது ? எப்படி தேர்வு செய்வது ?எந்த watt capacity சிறந்தது? எப்படி நமது உணவுக்கு ஏற்றபடி தேர்வு செய்வது?உதவுங்கள் உங்களது அனுபவத்தை சொல்லுங்கள்

யாராவது சொல்லுங்க ப்ளீஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா, மன்றத்துல மைக்ரோஅவன் வாங்கறது எப்படினு சில டாபிக் ஆரம்பிச்சு பேசி இருக்காங்க. சமையல் உபகரணங்கள் பகுதில இருக்கு பாருங்க கவிதா, நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும்.

வினோஜா நானும் இததான் சொல்லலாம் என்று இருந்தேன் அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க பரவாயில்லை யாரு சொன்ன என்ன.

கவிதா வினோஜா சொன்னது போல் சமையல் உபகரணங்கள் பகுதியில பாருங்க உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். இன்னும் நம்ம தோழிகள்லாம் வந்து பதில் சொல்லுவாங்க. அந்த பகுதியில் ஒரு த்ரெட்ல செல்வி மேடம் LG oven தான் பெஸ்ட்டுன்னு சொல்லி இருக்காங்க.

வினோஜா ,கௌரி லக்ஷ்மி மிகவும் நன்றி
நானும் பார்த்தேன்

என்றும் அன்புடன்,
கவிதா

நீங்கள் இந்தியாவில் பயன்படுத்துவதற்கா அல்லது யு.எஸ் -லா என்பதைப் பொறுத்தது. இங்க (யு. எஸ்) லன்னா Brand ஒரு பெரிய விசயமே இல்ல. உங்க budget -க்கு ஏற்ற மாதிரி ஏதாவது ஒன்ன தைரியமா வாங்கலாம். எது வாங்கினாலும் 4 - 5 வருசத்துக்கு பிரச்சனையே வராது. வாங்கும் model -ன் review ஐ மட்டும் பார்த்துக்கோங்க. Rotation type வாங்குங்கள். நம்ம ஊருல வாங்குற மாதிரி Grill, convection models இங்க தேவையே இல்லை. சாதாரண countertop போதும். Family size -ஐ பொறுத்து CU Ft -ம் W - ம் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
இஷானி

இஷானி மேடம்,
நான் us இல் தான் இருக்கேன்
இங்கே நிறைய models இருக்கு
எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக இருக்கு உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நாங்கள் இப்போது வைத்திருப்பது GE 1.1 Cu Ft, 1100W Microwave. இதற்கு முன் ஆறு வருடங்களாக Haier 0.9 Cu Ft, 900W Microwave வைத்திருந்தோம். என்னை பொறுத்தவரை இங்கு உபயோகிக்க நீங்கள் இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை. பிடித்த கலரில் பிடித்த model - ஐ தைரியமாக வாங்குங்கள். அல்லது பொறுத்திருங்கள். ஒருவேளை வேறு யாரேனும் உதவலாம்.

அன்புடன்,
இஷானி

Thanks for the helpful information, it was very good for me.

https://bakingreview.com

மேலும் சில பதிவுகள்