தேங்காய் சேர்க்காமல்

இட்டியப்பதிற்கு தேங்காய் சேர்க்காமல் ஒரு பக்க உணவு செய்முறை கிடைக்குமா?

செய்யலாம். முதலில் எலுமிச்சை. இடியபத்தை செய்து வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாதத்திற்கு செய்வது போல் தாளிக்கவும். அதாவது வாணலியில் எண்ணெய் விட்டு காயிந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலை பருப்பு போடவும் நன்கு சிவந்ததும் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் பொடி, கருவபிலை போடவும். லேசாக கொதித்ததும் இறக்கவும். அத்துடன் இடியபத்தை சேர்த்து கிளறவும். எலுமிச்சை இடியப்பம் தயார்.இரண்டாவது புளி இடியப்பம் அதேபோல் புளிகாச்சல் சேர்த்தும் செய்யலாம்.

அன்புடன்,
வெண்ணிலா.

மிளகு மற்றும் சீரகத்தை நெய்யில் வறுத்து பொடி மிக்ஸியில் செய்து இடியாப்பத்தை உதிர்த்துவிட்டு இந்த பொடியை கலந்து சாப்பிடவும்.

அப்புறம் அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெஙாயம் ஆகியவற்றை தாளித்து இடியாப்பத்தை உதிர்த்து போடவும்.

கறிவேப்பிலையை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து அதனுடன் கடுகு, மிளகாய் வற்றல் , க.பருப்பு தாளித்து இடியாப்பத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.
அன்புடன் ராதா

இடியாப்பம், வெல்லப்பாகு வைத்துக் கூட செய்யலாம், அது இனிப்பாக இருக்கும், பின், எள் இடியாப்பம் செய்யலாம்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்