முடக்கற்றான் கீரை ரசம்

தேதி: June 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முடக்கற்றான் கீரை - 1 பிடி
புளி
உப்பு
கறிவேப்பிலை
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
மிளகாய் வற்றல் - 2


 

கீரையை சுத்தம் செய்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
கீரை கொதித்ததும் கீரையை எடுத்து விட்டு அந்த தண்ணீருடன், புளி சேர்க்கவும்.
இத்துடன் கறிவேப்பிலை, உப்பு, ரசப்பொடி, மிளகாய் வற்றல், நசுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.


வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் வாதத்தை போக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாணி மேடம்,
நல்ல குறிப்பு
உடல் நலத்துக்கு ஏற்ற ரசம்
நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா... மிக்க நன்றி. இது வாணி இல்லை, வனி. :) என் அப்பா'கு மூட்டு வலிக்கு செய்து குடுத்து கத்துகிட்டது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி வனிதா மேடம்
அம்மாக்கு இந்த ரசம் பத்தி சொல்லி இருக்கேன்
நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா