இன்ஸ்டன்ட் சில்லி சிக்கன்

தேதி: June 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (16 votes)

 

சிக்கன்(boneless) - 12 துண்டுகள்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சில்லி சிக்கன் மசாலா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி சின்னத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிக்கனை சேர்க்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுது, சில்லி சிக்கன் மசாலா, தேவையென்றால் உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
கறியை நன்கு கிளறி விட்டு திருப்பி போட்டு திரும்பவும் மூடி வைக்கவும்.
சுவையான ஈஸி & இன்ஸ்டன்ட் காரசாரமான சில்லி சிக்கன் ரெடி. எண்ணெயிலிருந்து சிக்கனை எடுத்து தேவையென்றால் டிஸு பேப்பரில் வடிகட்டி பரிமாறலாம். எண்ணெயில் தங்கியுள்ள மசாலாவும் சுவையாக இருக்கும். நான் உபயோகபடுத்தியிருப்பது ஆச்சி சில்லி சிக்கன். இந்த சில்லி சிக்கன் சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது ரொம்ப ஈசி மெத்தேட். பாக்கவே சாப்பிடனும்டு தோனுது. ட்ரை பண்ணிட்டு அப்பரமா சொல்லுறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரிஸ்வானா மேடம்,
ரொம்ப எளிமையான முறையை சொல்லி இருக்கீங்க
கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி ஆமினா&கவிதா உங்கள் பின்னுட்டத்திற்கு செய்து பார்த்து சொல்லுங்கள்.
கவிதா madam எல்லாம் வேண்டாமே பெயர் சொல்லியே கூப்பிடலாம்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

Hai Rizwana,
Nan seidhu parthutu than solren.. really chance illa pa.. very very tasty.. Also very very easy.. Cant beat it.. Really very tasty and very nice .. Thanks for ur recipe

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

சிக்கென் இல்லாதனால நான் button mushroom உபயொகிச்சேன் ரொம்ப நல்லா இருந்தது.வாழ்த்துக்கள்

ALL IZZZZ WELL