கிட்ஸ் பீன்ஸ் பொரியல்

தேதி: June 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

பொடியாக அரிந்த பீன்ஸ் - 250 கிராம்
பச்சை பருப்பு - கால் கப்
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, சீரகம், எண்ணெய் - தாளிக்க
துருவிய தேங்காய் - சிறிதளவு(தேவை பட்டால்)
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டிரண்டாக கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் பச்சை பருப்பை சேர்த்து லேசாக வதக்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பருப்பு அரை வேக்காடு வெந்ததும் நறுக்கின பீன்ஸையும் உப்பையும் சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
தண்ணீர் வற்றி பருப்பு மற்றும் பீன்ஸ் வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான, சத்தான பீன்ஸ் பொரியல் தயார். வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம்.

நிறைய தண்ணீர் சேர்த்தால் பொரியல் சுவை, நிறம் மாறிவிடும். ப்ரெஞ்சு பீன்ஸ் சேர்த்தால், தண்ணீர் பருப்பு வேக மட்டும் சேர்த்தாலே போதும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா! கிட்ஸ் பீன்ஸ் பொரியல் நல்ல ரேசப்பி.செய்முறையும் சுலபமாக இருக்கின்றது.
நான் பீன்சில், கறிதான் சமைத்துள்ளேன் . உங்கள் முறை எனக்கு புதிது. செய்து பார்த்து விட்டு மீண்டும் வருகின்றேன்.
அன்புடன் ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி மேடம்,
கண்டிப்பாக செய்து பாருங்க மேடம்
உங்க வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பீன்ஸ்பொரியல் டிஃபரண்டாக இருந்தது செய்வது இதுவே முதல் முறை
நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

வாழு, வாழவிடு..