இறால் புளிக்குழம்பு

தேதி: June 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

வெண்டைக்காய் - 7
இறால் - 15
சிறிய தக்காளி - 3
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 3
வடவம் - ஒரு தேக்கரண்டி
புளி - சின்ன எலுமிச்சை அளவு
தேங்காய் விழுது - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய புளியில் மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கப் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும்.
புளி கரைசலுடன் தேங்காய் விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு, தக்காளி போட்டு கலந்துக் கொள்ளவும். தக்காளியை நன்கு கைகளால் நசுக்கி விட்டு பிசைந்து விடவும்.
புளி கலவையுடன் தட்டி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம் போட்டு இறால் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
வெறும் பாத்திரத்தில் வெண்டைக்காயை போட்டு கருகவிடாமல் இரண்டு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் கரைத்து வைத்திருக்கும் புளி கலவையை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு நிமிடம் கழித்து வெண்டைக்காயை போட்டு மூடி விடவும்.
8 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான வெண்டைக்காய் இறால் புளிக்குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நிஷா மேடம்,
நல்ல குறிப்பு
வெண்டைக்காய் புளி குழம்பு பார்க்கவே சூப்பராக இருக்கு
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் நிஷா, எப்படி இருக்கீங்க?
நானும் இப்படி தான் செய்வேன்,வெண்டைக்காய் இல்லையென்றால் கத்திரிக்காய்,முருங்கைக்காய்யுடனும் செய்வதுண்டு.
அன்புடன்
ஹலிலா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)