முருங்கைக்கீரை பொரியல்

தேதி: June 26, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

முருங்கைக்கீரை - 1 கட்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 1 முழுசு
உப்பு
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை [விரும்பினால்]
தேங்காய் துருவல் [விரும்பினால்]
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6


 

கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, சின்ன வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
பின் உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க விடவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து லேசாக வதக்கி ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் கீரை சேர்த்து மூடி வேக விடவும்.
கீரை வெந்ததும் விரும்பினால் வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை கொரகொரப்பாக பொடித்து 2 அல்லது 3 தேக்கரண்டி சேர்த்து எடுக்கவும்.
தேங்காய் பிடிக்கும் என்றால் வேர்கடலை உடன் தேங்காய் துருவல் அல்லது வெறும் தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி சேர்த்து எடுக்கலாம்.


முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனி!கடையில் முருங்கை இலையை கண்டவுடன் வாங்கி வந்து விட்டேன். எப்படி சமைப்பது என தெரியாமல் இருந்தேன்.உங்கள் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சமைத்து வீட்டில் பாராட்டையும் பெற்றேன்.நன்றி, பாராட்டுகின்றேன்.
அன்புடன் ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி... நல்லா வந்ததா? மிக்க நன்றி. எனக்கும் முன்பெல்லாம் முருங்கை சமைக்க தெரியாது, ஆனா ரொம்ப பிடிக்கும். இம்முறை அம்மா கூட இருப்பதால் சொல்லி தந்தார். அதை வைத்து சில முறை செய்து பார்த்து அதன் பின் தான் இங்கு கொடுத்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,
ரொம்ப அருமையான குறிப்பு
எனக்கு இங்கே முருங்கை கீரை கிடைப்பதே இல்லை என் அம்மாவும் இப்படி தான் செய்வாங்க மேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா... மிக்க நன்றி :). எனக்கும் இங்க இருந்து போயிட்டா கீரை கிடைக்காது :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

anbulla vanitha murrungaikeeai porriyalil siru marraam.

keeraikku thaliththa pinnal keeraiyai pootu vathaki pathi sundiyathum

thangaai thuruvaliyum pootu nangu vathaki piragu keerai nanaium alavirku m

mattum thaniir uoori vagavidavum. piragu keerai alavu parthu uppu poodavum

nangu sundiyathum errakkavum.

anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்பு பூங்கோதை... நீங்கள் சொன்ன முறையில் தான் முன்பெல்லாம் அம்மா செய்துவந்தார்கள். ஆனால் தேங்காய் சேர்க்க மாட்டோம். கீரை மிகவும் குழைந்த மாதிரி ஒரு உணர்வு. பின் மாமி சொன்னபடி மாற்றி இப்படி செய்து வருகிறார். நிச்சயம் நீங்க சொன்ன மாதிர் தேங்காய் சேர்த்தும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi your recipe is wonderful and it is very easy to cook. keep uploading ya.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா