தேதி: June 27, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கம்பு
நொய்யரிசி - 1 பிடி
உப்பு
தயிர்
கம்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும். [பச்சரிசி மாவு பொடிப்பது போல்]
இதை தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.
ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.
அடுத்த நாள் நொய்யரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.
கூழுடன் சாப்பிட சின்ன வெங்காயம், மோர் மிளகாய் வறுத்தது அல்லது மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்து வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும். கூழ் உடம்புக்கு நல்லது, கம்பில் இரும்புச்சத்து அதிகம் உண்டு.
Comments
வனிதா மேடம்,
வனிதா மேடம்,
ரொம்ப அருமையான குறிப்பு
எனக்கு இங்கே கம்பு கிடைக்கும் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன் நீங்களே சொல்லிடீங்க கண்டிப்பாக அடுத்த முறை வாங்கி செய்து விடுகிறேன்
மேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
கவிதா... மிக்க நன்றி. கம்பில் கூழ் செய்யலாம், அடை செய்யலாம், கொழுக்கட்டை கூட செய்யலாம். இன்னும் 2 நாளில் அந்த குறிப்பும் தந்துடுவேன். செய்து பாருங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
வனிதா நல்ல ஹெல்தியான ரெசிப்பி. இந்த ரெசிப்பிக்கு சரியான அளவு சொல்ல முடியுமா? ஒரு பிடி நொய்யரிசிக்கு எவ்வளவு கம்பு சேர்க்கனும்.
வினோஜா
வினோஜா... ஒரு கப் கம்பு மாவு சேருங்க. சரியா வரும். மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா