மொச்சைக்கொட்டை சுண்டல் | arusuvai


மொச்சைக்கொட்டை சுண்டல்

food image
வழங்கியவர் : Vani Vasu
தேதி : திங்கள், 28/06/2010 - 13:24
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • மொச்சை - 2 கப் (ஊற வைத்து வேக வைத்தது)
 • வெங்காயம் - 1 சின்னது
 • தக்காளி - 1/2 சின்னது
 • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 • தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - சிறிது
 • கறிவேப்பிலை
 • உப்பு
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • தேங்காய் - சிறிதாக நறுக்கியது 1/4 கப்
 • கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

 

 • வேக வைத்த மொச்சையுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
 • வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 • இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
 • பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • இதில் மொச்சை, நறுக்கிய தேங்காய் சேர்த்து தூள் பச்சை வாசம் போய் தண்ணீர் இல்லாமல் வரும்வரை அடுப்பில் வைத்து கிளறி எடுக்கவும்.இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..வனிதா மேடம்,

வனிதா மேடம்,
சுண்டல் செய்யும் போது வெங்காயம் சேர்த்து செய்ததே இல்லை கண்டிப்பாக முயற்சி செய்து பார்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா

கவிதா... ரொம்ப கொஞ்சமா தான் சேர்ப்போம். நிறைய கொண்டைகடலை சுண்டல் குறிப்புகள்ல சேர்ப்பாங்க. செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா