பட்டர்ஃப்ளை வால் ஹேங்கிங்

தேதி: June 28, 2010

4
Average: 3.9 (11 votes)

 

அட்டை
சாட் பேப்பர்
வெல்வெட் துணி மெரூன் மற்றும் கறுப்புநிறம்
உல்லன் நூல்
கோல்டுநிற சம்கி
கோல்டுநிற சம்கி தூள்
மெல்லிய கம்பி
கம்
பெவிக்கால்
ரிப்பன் லேஸ்
ஸ்டோன்
கிலிட்டர்ஸ்

 

பட்டர்ஃப்ளை வால் ஹேங்கிங் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் பேப்பரில் பட்டர்ஃப்ளையின் உருவம் மற்றும் உடல் பகுதியை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனை சிறிது தடிமனான அட்டையில் வைத்து வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதேப்போல் மூன்று பட்டர்ஃப்ளை செய்துக் கொள்ளவும்.
கறுப்பு வெல்வெட் துணியை பட்டர்ஃப்ளையின் வடிவத்திற்கு நறுக்கி வைக்கவும். இதனை வெட்டி வைத்திருக்கும் அட்டையில் பெவிக்கால் தடவி ஒட்டவும்.
பிறகு விரும்பிய நிறங்களில் உல்லன் நூலை எடுத்து வெல்வெட் துணி ஒட்டிய அட்டையில் படத்தில் உள்ளது போல் ஒட்டிக் கொள்ளவும்.
பட்டர்ஃப்ளையின் உடல் போன்று வெட்டி வைத்திருக்கும் அட்டையில் கம் தடவி கொண்டு அதன் மேல் கோல்டுநிற சம்கி தூளை தூவிக் கொள்ளவும். நன்கு காய்ந்ததும் பட்டர்ஃப்ளையின் இரண்டு இறக்கையில் நடுவில் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டவும்.
பின்னர் மூன்று பட்டர்ஃப்ளையையும் விரும்பிய நிற ஸ்டோன்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
மெல்லிய கோல்நிற கம்பியை உணர் கொம்புகள் போல் வளைத்து வைத்துக் கொள்ளவும். இந்த உணர் கொம்புகளை பட்டர்ஃப்ளையின் தலை பகுதியின் பின்பக்கம் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
அட்டையை படத்திலுள்ள டிசைன் போல் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த அட்டையின் டிசைன் போலவே வெல்வெட் துணியையும் நறுக்கி எடுத்துக் கொண்டு அட்டையில் பெவிக்கால் தடவி ஒட்டி நன்கு காயவிடவும். பிறகு கோல்டுநிற கிலிட்டர்ஸ் மற்றும் சம்கி கொண்டு அந்த அட்டையை அலங்கரிக்கவும்.
2 1/2 அடி அளவுள்ள ரிப்பன் லேஸை எடுத்துக் கொள்ளவும். இதனை சமமான இரண்டு துண்டாக மடக்கிக் கொண்டு அதன் மேல் முனையை சிறிது இடைவெளிவிட்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அந்த முடிச்சுக் கீழ் படத்திலுள்ள வெல்வெட் துணி ஒட்டிய அட்டையை முதலில் ஒட்டிக் கொள்ளவும். அதன் கீழ் சிறிது இடைவெளிவிட்டு ஸ்டோன்கள் ஒட்டிய பட்டர்ஃப்ளை ஒட்டவும்.
அதற்கு கீழ் மீதமுள்ள இரண்டு பட்டர்ஃப்ளையும், வெல்வெட் துணி ஒட்டிய அட்டையையும் ஒரே அளவாக இடைவெளிவிட்டு ஒட்டி முடிக்கவும். எளிதாக செய்யக்கூடிய பட்டர்ஃப்ளை வால் ஹேங்கிங் தயார். இந்த வால் ஹேங்கிங் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் செல்வி. பத்மா, ரேவதி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

//செய்து காட்டியவர்கள் செல்வி. பத்மா, ரேவதி.// ;) செண்பகா கூட்டுச் சேரவில்லையா? ;)
செய்வதற்குச் சுலபமாக அதே சமயம் மிகமிக அழகாக இருக்கிறது இந்த 'வால் ஹேங்கிங்' குறிப்பு. உங்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் கலைப் பயணம். ;)

‍- இமா க்றிஸ்

பத்மா மற்றும் ரேவதி மேடம்,
ரொம்ப அழகாக இருக்கு உங்க வால் ஹன்கிங்
மேலும் பல நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிகவும் அழகாக இருக்கிறது. கண்டிப்பாக என் வீட்டில் செய்ய உள்ளேன். நன்றி

its very nice and easy. ithu pola innum pala kuruppugal thara valthukiren

kavi

அழகா இருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரேவதி, பத்மா... வழக்கம் போல் அசத்தலா இருக்குங்க. இன்னும் நிறைய வால் ஹேங்கிங் செய்து மறக்காம ஆபீஸ் ரூம்'லயே மாட்டுங்க. அண்ணா'கு அதெல்லாம் பார்த்தா தான் சந்தோஷமா இருக்காம். :) சரியா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;)

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta