எனது சமையலறை - இமா

இமாவின் சமையலறை


இது 'என்' சமையலறை அல்ல. எங்கள் சமையலறை. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் (சமயங்களில் என் பிள்ளைகளின் தோழர்களுக்கும்) பொதுவான சமையல் இடம். இதனால் எதையும் நான் நினைத்தது போல் இடம் மாற்ற முடிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் அது அதற்கு என்று குறிப்பிட்ட இடம் இருக்கும். அவரவர் தன் தன் நேரத்தில் சமைத்துக் கொள்வோம். கூட்டுச் சமையலும் நடக்கும். ஆனால், எந்தப் பாத்திரத்தில் என்ன சமைக்கலாம், என்ன சமைக்கக் கூடாது என்பதற்கு எழுதப்படாத விதிகள் அமுலில் உள்ளன. ;)

வீடு கட்டப் பட்டது 1996 ல். வாடகைக்கு விடும் நோக்கில் மட்டும் கட்டப்பட்ட வீடு. 4M x 4M அளவானது. வரவேற்பு அறையையும், சமையலறையையும், படுக்கையறைகளையும் பிரிக்கும் விதமாக இரண்டு கதவுகள் உள்ளன. வீட்டை வாங்கிய சிறிது காலத்தில், இடப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், சமையல் மேடையில் தண்ணீர் குழாயின் மேலாக இந்த அலமாரியை அமைத்துக் கொண்டோம். என் கணவரும் பிள்ளைகளுமாக இதனை அமைத்துக் கொடுத்தார்கள்.

my kitchen
 

மேசைகள் பயன்படுத்த வேண்டி இருப்பதால் எப்போதாவது எடுக்க வேண்டிய பொருட்கள் மட்டும் இதனுள் இருக்கின்றன. வலது புறம் கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களும் நத்தார் காலங்களில் பயன்படுத்தும் பாத்திரங்கள், டவல், ஏப்ரன் போன்றவையும் இருக்கும். மேலே உள்ள இரண்டு நடுப் பிரிவுகளிலும் கேக் அலங்காரத்துக்கான விசேட பொருட்களும், சில விசேட சமையல் உபகரணங்களும் உள்ளன. இடது பக்கம் முழுவதாக மின்சார சமையல் உபகரணங்கள் வைத்து இருப்போம். அடித்தட்டு ரைஸ்குக்கர் & டீப்ஃப்ரையர் வைக்கக் கூடிய விதமான அளவில் அமைந்துள்ளது. நாங்களே அமைத்துக் கொண்டதால் இடம் சிறிதும் வீணாகாதவாறு அமைப்பு இருக்கிறது.

my kitchen
 

இந்த அலமாரி அமைத்ததில் சமையல் மேடை அளவு சிறிதாகி விட்டது. அதற்கு ஈடு செய்யும் விதமாக மைக்ரோவேவ் குக்கரை ஒரு மேடை அமைத்து ஏற்றி வைத்து இருக்கிறோம். ஸ்டவ் எலிமன்ட்களை இதுபோல் மூடி வைப்பது சமையல் உள்ளே சிதறுவதை தவிர்க்கிறது. இதனால் அடுத்த தடவை பயன்படுத்தும் போது எரிந்த வாடை வருவதும் தவிர்க்கப்படுகிறது. அனாவசியமாகச் சுத்தம் செய்யும் வேலையும் மிச்சம். பார்க்கவும் அழகாக சுத்தமாக இருக்கிறது.

my kitchen
 
மேலதிகமாக இடம் தேவைப்பட்டால் ஒரு இழுப்பறையை இப்படிப் பலகை போட்டுப் பயன்படுத்திக் கொள்வோம்.
my kitchen
 

சமையலறையை அடுத்து சாப்பாட்டு இடம். வலது பக்கம் குளிரூட்டியும், பான்ட்ரி கப்போர்டும் மட்டும் வைப்பது போல இடம் இருக்கிறது. மறு பக்கம் கூடம்.

my kitchen
 

கப்போர்ட் உள்ளேயும் மேலதிகமாகச் சில தட்டுகள் சேர்த்திருக்கிறோம். எங்கள் சமையலறையில் மேசைகள் கதவுகள் எல்லாம் வெண்மையாக இருப்பதுவும் பலகைகள், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் தட்டையாக இருப்பதுவும் எனக்கு மிகவும் பிடித்த விடயம். கறை படிந்தால் சட்டென்று தெரிந்து விடும். சுத்தம் செய்வது சுலபம்.

my kitchen
 

Comments

looking very good. Thanks

புது வரவா? ;) நல்வரவு.
கருத்துக்கு மிக்க நன்றி. ;)

‍- இமா க்றிஸ்

Super kitchen. Epadi ivalo alaga vachurkenga. Mudhala maintainceku kandipa ungaluku oru great salute kodukanum. Aduthu intha matiri kitchen amaika plan potathum super.palir velai atractiona iruku.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

;) பாராட்டுக்கு மிக்க நன்றி சங்கீதா. என் சமையலறையைத் தூசு தட்டி விட்டிருக்கிறீங்க. அதற்கும் நன்றிகள்.

அடுத்த தடவை தமிழில் சொல்லுங்க. http://www.arusuvai.com/tamil_help.html
ஒரு வரி என்றால் சமாளித்து விடுவேன். ஆங்கில எழுத்துகள் அளவில் சிறிதாக இருக்கின்றன. நமக்கு இலங்கைத் தமிழ் வேறா! ;) கெஸ் பண்ணச் சிரமமாக இருக்கிறது. (ஒரு வேளை... நீங்கதான் செல்போன்ல தமிழ் தட்ட முடியவில்லை என்று சொன்ன ஆளாக இருக்குமோ!!!!)

‍- இமா க்றிஸ்

Amam emma enal cell phonela tamil uthavi pera mudiya villai.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

very nice kitchen

இமா அம்மா :) உங்க சமையல் அறையை அழகாக சுத்தமா இருக்கு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உங்க சமையலறை நல்ல இருக்கு ......வெண்மை எப்பவுமே அழகு ..

கருத்துக்கு நன்றி சீதா, பிரபா & ஜனனி. ;)

‍- இமா க்றிஸ்

cute kitchen and useful tips..thanks imma...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இமா மேடம் உங்க சமையல் அறை ரொம்ப அழகாக இருக்கு.

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்

அம்மா நா இன்னைக்கு தான் சமையலறை ஒப்பன் பன்னிபார்த்தேன் உங்க‌ சமையலறை அதில் நீங்கள் செய்துள்ள வேலைப்பாடுகள் சூப்பர்

எல்லாம் நன்மைக்கே

இமா அம்மா உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா என கேட்கும் அளவிற்க்கு சூப்பரா இருக்கு சுத்தமாகவும் இருக்கு நான் இன்று தான் பார்த்தேன்

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

@ அனிதா :-) இது போடும் போதே 14 வயது சமையலறைக்கு. இப்போ இனும் 7 கூடி இருக்கிறது. இடையில் தரைக்கு லைனோவை நீக்கி டைல்ஸ் பதித்திருக்கிறோம். அந்த கிச்சன் ரேஞ்ச் இப்போ இல்லை. கீழ்ப்பகுதியில் ஒரு பெரிய அவணும் ஒரு சிறிய ஃபான் ஃபோர்ஸ்ட் அவணும் மேலே காஸ் குக்கர்களும் உள்ள ரேஞ்ச் மாற்றினோம். இவை நடந்தும் 6 வருடங்கள் கடந்துவிட்டன. படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இன்னமும் சமையலறை நல்லநிலையில் தான் இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. அறுசுவைக்காக என்று இல்லாவிட்டால் இப்படி சமையலறையைப் படம் எடுத்து வைக்கத் தோன்றியிராது. அறுசுவைக்கு நன்றி. :-)

உப்பா சர்க்கரையா! எங்கள் வீட்டில் சீனிக்கு முக்கியத்துவம் இல்லை. இப்போ படுத்துவதே இல்லை. கடைசியாக வாங்கியது க்றிஸ்மஸ் கேக் அடிக்கும் போது. அளவோடு வாங்கி முடித்து விட்டேன். இனி ஜூன் அல்லது ஜுலையில்தான் வாங்குவோம். விருந்தினர் கூட சீனி சேர்க்காமல் தானே காப்பி தேநீர் கேட்கிறார்கள்!! :-)

‍- இமா க்றிஸ்

Super amma. Nalla irukku unga kitchen.. Solla varthai ethum varala enaku romba pidichi irukku.. Intha mathiri kitchen iruntha samachikittea irukkalam. Romba clean ha vechikittu irukkinga super amma..

I love my parents...

arusuvai la enaku romba pidicha person a ninga tha amma..

உங்க நாட்டில் சென்னை ல கிடைக்கும் உணவுக்கு தேவையான பொருட்கள் கிடைக்குமா??? அம்மா.. தமிழ்நாட்டு சமையல் உங்களுக்கு சமைக்க தெரியுமா ?????

I love my parents...

இமா அம்மா......
உங்க நாட்டில் தமிழ் தான் பேசுவார்களா??? எனக்கு இதை எந்த இழையில் கேட்பது என்று தெரியவில்லை அதனால்தான் இதில் கேட்டுவிட்டேன்..

I love my parents...

பதில் 1) //Intha mathiri kitchen iruntha samachikittea irukkalam.// :‍) இப்போதெல்லாம் மதியம் தொடங்கி இரவு 8 மணி வரை அந்தப் பக்கம் போகவே முடிவதில்லை. வெயில் முகத்தில் அடிக்கிறது. :) //Romba clean ha vechikittu irukkinga// ம். என் வீடு என்றல்ல‌. வேலையிடத்திலும் எல்லாம் சுத்தமாக‌ இருக்க‌ வேண்டும். நிறையப் பேர் சாரி சொல்லுவாங்க‌.
~~~~~~
பதில் 2) //romba pidicha person// நன்றி.
//உங்க நாட்டில் சென்னை ல கிடைக்கும் உணவுக்கு தேவையான பொருட்கள் கிடைக்குமா???// சென்னையில் மளிகைப் பொருட்கள் வாங்கிய‌ அனுபவம் இல்லை. இங்கு மலையாளிகளின் கடைகள் இருக்கின்றன‌. குஜராத்தி, பம்பாய்க்காரர்களது கடைகள் இருக்கின்றன‌. ஃபிஜி இந்தியர்களது கடைகள் இருக்கின்றன‌. பெரும்பாலானவை கிடைக்கும், நியூசிலாந்து அரசால் தடை செய்யப்பட்ட‌ உணவுகள் (நீண்ட‌ லிஸ்ட் இருக்கு) கிடைக்காது.

//தமிழ்நாட்டு சமையல் உங்களுக்கு சமைக்க தெரியுமா ?// இருக்கவே இருக்கு அறுசுவை. ;) குறிப்பைப் பார்த்து சமைத்திருக்கிறேன். தோசை, அடை என் சொந்த‌ ரெசிபிதான் எப்பொழுதும். பூரி பிடிக்கும். என் ஒரு ஆளுக்காக‌ சமைக்க‌ வேண்டும். அதனால் செய்வது இல்லை. உப்புமா, பச்சடி. கிச்சடி, பகோடா, கேசரி, புளியோதரை, வெண்டி ப்ரை எல்லாம் செய்வேன். இந்திய‌ சட்னிகள் செய்வது உண்டு. பெரும்பாலும் இலங்கைச் சமையல் தான். அது ரத்தத்தில் ஊறியதாயிற்றே! சுலபமாக‌ சமைக்கலாம். :) காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது அதிகம். பிடிக்கும்.
~~~~~~~~~~~
பதில் 3) //உங்க நாட்டில்// !! இலங்கையில் தமிழ் பேசுவோமே! இங்கும் நிறைய‌ தமிழர்கள் இருக்கிறார்கள். ப்ரோக்ராம் எல்லாம் நடக்கும். சின்னவர்களும் தமிழ் பேசுவார்கள்.

‍- இமா க்றிஸ்

வெயில் முகத்தில் அடிக்கிறது./// புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. வெயில் அதிகமாக இருக்கும் என்று..

இரவு 8 மணி வரை/// இரவு 8மணி வரை வெயில் இருக்குமா???

நிறையப் பேர் சாரி சொல்லுவாங்க‌.///ம் சூப்பர்..

பெரும்பாலானவை கிடைக்கும்/// ம்...

நியூசிலாந்து அரசால் தடை செய்யப்பட்ட‌ உணவுகள் (நீண்ட‌ லிஸ்ட் இருக்கு) கிடைக்காது./// ஓ...
இப்படியெல்லாம் கூட இருக்கா?..

இருக்கவே இருக்கு அறுசுவை, குறிப்பைப் பார்த்து சமைத்திருக்கிறேன். /// நானும் அம்மா.. எனக்கு சமைக்க தெரியது..

உப்புமா, பச்சடி. கிச்சடி, பகோடா, கேசரி, புளியோதரை, வெண்டி ப்ரை எல்லாம் செய்வேன்// ஓ... சூப்பர்.. எனக்கே தெரியாது..

காய்கறிகளைப் பச்சையாய் சாப்பிடுவது அதிகம். பிடிக்கும்./// ம்

இலங்கையில் தமிழ் பேசுவோமே! இங்கும் நிறைய‌ தமிழர்கள் இருக்கிறார்கள்./// ஓ..சரிங்க அம்மா..

ரொம்ப நன்றி அம்மா.. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியதற்க்கு...

I love my parents...