6 month vacination

டியர் ஆல்,
எப்படி இர்ருகிரீர்கள். உங்கள் அனைவருடைய அல்லோசனைகும் மிக்க நன்றி. நான் இன்று குழந்த்கு 6 month vacination போட்டு விட்டிட்டு வந்தேன். வெயிட் 5 .800 மட்டும் தான் உள்ளது. பிறந்த வெயிட் 3 .08 தான். டாக்டர் பரவாயில்லை என்று கூறினார். ப்ளீஸ் உங்களுடைய அறிவுரையை கூறுங்களேன். என்னக்கு கொஞ்சம் திடுப்தியாக இறுகும்.
அன்புடன்,
இப்படிக்கு பிரியா.

priya neenga kulanthaiku enna sapadu kudukrenga pa?

சுகமா இருக்கீங்களா?
நான் அறுசுவை தளத்திற்கு புதுசு.எனக்கும் ஒரு பெண் குழந்தை தான்.இப்போ 6 மாதம் முடிஞ்சுது.இரண்டு வாரத்திற்கு முன்ன தான் ஊசி போட்டோம்.குழந்தைக்கு 4 வது மாதத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமா சாப்பாடு கொடுக்க பழக்கிட்டேன்.அவளோட டொக்டர் மற்றும் மிட்வைப் சொன்ன suggestions வைச்சு தான் சாப்பாடு கொடுக்கிறேன்.

இப்ப 6 மாதம் என்கிறதால ஒரு நாளைக்கு 3 தடவை சாப்பாடு கொடுக்கலாம்.காலையில் தாய்ப்பாலை கொடுக்கலாம்.நண்பகலுக்கு கரட், உருளைக்கிழங்கு, சுக்கினி போன்ற காய்கறிகளை அவித்து கிரைண்ட் பண்ணி கொடுக்கலாம்.கூடவே விரும்பினால் சிக்கன் அல்லது இளங்கன்று இறைச்சியையும் நன்கு அவித்து காய்கறியுடன் கிரைண்ட் பண்ணிக்கொடுக்கலாம்.வாரத்திற்கு இரு தடவை முட்டையின் மஞ்சட்கரு சேர்த்துக்கொள்ளலாம்.

மதியம் 3 ,4 மணிக்கு வாழை, பெயார்ஸ் மற்றும் அப்பிள் போன்ற பழங்களை அவித்து மசித்து கொடுக்கலாம்.அல்லது பேபிஸ்க்கு உரிய யோகர்ட் கொடுக்கலாம்.

மாலை 6 மணியளவில் பேபிஸ்கு உரிய பிஸ்கட் அல்லது பேபி டெஸர்ட் ஏதாவது கொடுக்கலாம். இடையிடையே குழந்தைக்கு போதியளவு தாய்ப்பால் கொடுங்க.நீரும் பருக்குங்க.

நான் என்னோட குழந்தைக்கு கொடுப்பதையே உங்களுக்கும் சொல்லியிருக்கிறேன்.உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு நம்புறேன்.

hope ur baby will gain weight and make you happy..

மேலும் சில பதிவுகள்