வெஜ் இட்லி

தேதி: June 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

முட்டைக்கோஸ் - 100 கிராம்
காரட் - 100 கிராம்
இட்லி - 7
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
கொத்தமல்லித் தழை - சிறிது
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

இட்லியை சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸ் மற்றும் காரட் துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு முட்டைக்கோஸ், காரட் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் இட்லியை போட்டு நன்கு பிரட்டவும். தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
மிகவும் எளிதாக செய்யக்கூடிய வெஜிடபிள் இட்லி ரெடி. இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. இதயவாணி மகாராஜன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதயவாணி மேடம்,
vegetable இட்லி பார்க்கவே அருமையா இருக்கு
எளிதான முறையில் தந்து இருக்கீங்க மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இதயவாணி ...இனிமையாக இருக்கிறது உங்க இட்லி ரெசிப்பி....
உங்க பெயரும்கூடத்தான்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்த ரெசிப்பி மிகவும் பயனுள்ளதாக இருக்கிற்து. மலை நேரத்திற்க்கு ஏற்ற சத்தான டிபன். இது போல மேன்மேலும் பல ரெசிப்பிகளை கொடுக்க வேண்டும்

கவிதா

இதயவாணி நலமா..?
பார்க்கும் போதே ரொமப நல்ல இருக்கு உங்களின் வெஜ் இட்லி.
சத்தானதும் கூட.வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Super receipe. I try this receipe Yesterday . Really very tasty. My child's ate this. Please give another receipe.

Thank you,

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.