மலபார் நெய்சோறு

தேதி: July 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (11 votes)

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை - தலா 10


 

பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
அவை பொரிந்து வரும்போது முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் உப்பு மற்றும் களைந்து ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
கொதி நன்கு வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்தால் சாதம் நன்கு பொலபொலவென்று வெந்து இருக்கும்.
சுவையான, மணமான மலபார் நெய்சோறு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்கள்.

இதனை தயிர் பச்சடி, மலபார் காரக்குழம்பு, கிராவிகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அனைவரும் சாப்பிட கூடியது. மிகவும் சத்தானது. எளிதாகவும், ரிச்சாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாளைக்கு செஞ்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன்.ஏசியான மெத்தட் தான்.என் விருப்ப பட்டியலில் சேத்துட்டேன்.
ஒரு விசில் மட்டும் போதுமா?
இஞ்சியும், கொத்தமல்லியும் தேவை இல்லையா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க என்ன எல்லா இடத்துலேயும் இருக்கீங்க, எங்கே பாத்தாலும் எப்ப பாத்தாலும் உங்க பதிவாத்தான், இருக்கு யாரோ யாஹூ சாட்டிங்க் கூப்பிட்டாங்களே அங்கே போகலையா? ஆனா உங்கள பாக்கும்போது நல்ல சுறு சுறுப்பான பொன்னு மாதிரி தெரியுது. வெரிகுட்
அன்புடன்
ஆஷிக்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அமீனா மேடம்,
இதற்கு இஞ்சி,கொத்தமல்லி தேவை இல்லை
அதிக மசாலா,கரம் சேர்க்காத உணவு இது
ஓணம் சதயாவில் கண்டிப்பாக இது இருக்கும் செய்து பாருங்கள்உங்கள் பாஸ்மதி அரிசிக்கு ஏற்றவாறு வையுங்க

தங்கள் வருகைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உமா அக்கா,

பார்க்கவே நல்லா இருக்கு, நானும் என் விருப்ப பட்டியல்ல சேர்த்துடேன். சீக்கிரம் செய்து பார்த்துட்டு பின்னூட்டம் அனுப்பரேன்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

தேவகி மேடம்,
நான் உமா இல்லை
நான் கவிதா கண்டிப்பாக செய்து பாருங்கள் உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இன்னைக்கு இத தான் செய்தேன். சும்மா சொல்ல கூடாது. என் பக்கத்து வீட்டில மட்டும் நீங்க இருந்துற்ந்தா கண்டிப்பா உங்க கைக்கு மோதிரம் போட்டுர்ப்பேன். குக்கர் யூஸ் பண்ணல(குக்கர் முறை,நீர் அளவு தெரியாததால்). அளவான நீர் ஊற்றி தம்மில் போட்டேன். தாளிச்சா கூட சூப்பர் காம்மினேஷன். தேங்க்ஸ் கவிதா...........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சாரி கவிதா,

தப்பா எழுதிட்டேன் பெயரை, ஆனால் குறிப்பு Super.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

plz tell me how much water should i add for a cup of rice ,coz i culdnt cook basmathi rice perfectly in cooker it comes out very bad

அமீனா மேடம்,
ரொம்ப நன்றி
நீங்க செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தந்ததற்கு
நான் இதுவரை தால்ச்சா கூட ட்ரை பண்ணதில்லை இனிமே ட்ரை பண்றேன்

என்றும் அன்புடன்,
கவிதா

தேவகி மேடம்,
சாரி எல்லாம் எதுக்குங்க
பரவாயில்லை நீங்க வந்து பின்னூட்டம் தந்ததே சந்தோசம்

என்றும் அன்புடன்,
கவிதா

விவின் அவர்களுக்கு,
நீங்கள் use செய்யும் பாஸ்மதி அரிசி பிராண்டில் closed pan cooking க்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் என்று போட்டு இருப்பாங்க அதை பாருங்க
இல்லையென்றால் 1 கப் அரிசிக்கு 1 3 /4 கப் தண்ணீர் சேருங்கள் போதும் செய்து பாருங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இவ்வளவு ஈஸியா செய்துடுற மாதிரி ஒரு நெய் சோறா? பார்க்கவே சாப்பிடலாம் போல இருக்கு. நெய் சோறு செய்றதுலாம் கஷ்டம்னு நினைச்சுட்டு இருந்தேன். செய்துட்டு சொல்றேன் மேடம்.

ஹாய் கவி எப்படி இருக்கீங்க. இதே போல் நாங்களும் நெய்சோறு செய்வோம் ஆனால் தேங்காய்பால் சேர்த்து செய்வோம். இது தேங்காய் பால் இல்லாமல் இருக்கு இது போலவும் செய்து பார்க்கனும். தேங்காய் பால் சேர்த்து செய்வதால் ட்ராவலில் எடுத்துட்டு போக யோசிக்கனும் ஆனால் இதே போல செய்தால் ட்ராவலில் கூட கொண்டு போகலாம்னு நினைக்கிறேன்.

தேங்காய் பால் சேர்ப்பதால் சுவையும் கூடும் தானே. நான் மறந்தே போய் விட்டேன். கேரளா சமையலில் அதிகம் தேங்காய் சேர்ப்பார்களே நீங்கள் சேர்க்கவில்லையா?

கதிஜா
நானும் தான் தேங்காய் பால் சேர்த்து செய்வேன் ஆனால் அதற்கு பெயர் தேங்காய் சோறு.
தேங்காய் உபயோகிக்காமல் செய்தால் நெய்சோறு. ஆனால் இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான் தேங்காய் மட்டும்.சரி தானா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லக்ஷ்மிஸ்ரீ மேடம்,
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்க வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கதீஜா மேடம்,
இதில் சில பேர் தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க
கண்டிப்பாக நானும் சேர்த்து ட்ரை செய்து பார்க்கிறேன்
உங்க குறிப்புக்கு நன்றி சந்தோஷமா இருக்கு மேடம் நீங்க எனக்கு ஒவ்வொரு முறையும் அருமையான குறிப்பு தந்துகிட்டே இருக்கீங்க

என்றும் அன்புடன்,
கவிதா

அமீனா மேடம்,
நான் இதை என் தோழியிடம் தான் தெரிந்து கொண்டேன்
ஓணம் அன்று சதயாவில் எல்லாமே தேங்காயாக இருக்கும்
அதனால் இதை எளிதாக செய்வாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்

கண்டிப்பாக நீங்க சொன்னதையும் எடுத்துகிறேன் நீங்க சொன்னது சரி தான் மேடம் தேங்காய்பால் சேர்த்து தனியாக வேறொரு சாதம் செய்வாங்க நான் அதையும் ட்ரை செய்து பார்க்கிறேன்

உங்க குறிப்புக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க கூட முதல் தடவையாக பேசுகிறேன். ஆனாலும் உங்களை அறுசுவையில் எல்லா இடத்திலும் காண முடியும் உங்க கூட பேசினதில் சந்தோஷம். நாங்களும் தேங்காய் சோறு செய்வோம். அதில் நெய் சேர்க்க மாட்டோம். நெய் சோறில் தான் தேங்காய் பால், நெய் சேர்ப்போம் இரண்டும் வேறு வேறு சுவையில் இருக்கும்.

ஹாய் கதிஜா..
உங்க கூட பேசியதில் எனக்குமே மிக்க சந்தோஷம். நான் இரண்டும் ஒரே முறையில் தான் செய்வேன். நீங்கள் தேங்காய் சோறு செய்யும் போது சிறிது நெய் விட்டு பாருங்கள் .தனி ருசி கிடைக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா... 2 நாட்கள் முன் எங்க வீட்டில் உங்க மலபார் நெய் சோறு தான். ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அப்போது பதிவிட முடியாமல் போனதால் இன்று போடுறேன். நல்ல குறிப்பு தந்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்
ரொம்ப ரொம்ப நன்றி
நீங்க செய்து பார்த்து விட்டு குறிப்பு தந்தற்கு

என்றும் அன்புடன்,
கவிதா

thankyou kavitha will try tat

கவி ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் ஒரே நெய் சோறு தாளிசாதான். ரொம்ப சூப்பரா இருக்கும்.