ஈஸி ஜூவல் பாக்ஸ்

தேதி: July 3, 2010

5
Average: 4.1 (16 votes)

 

வாட்டர் பாட்டில் - 2
ஜிப்
ப்ளேடு அல்லது கத்திரிக்கோல்
லேஸ்
பெவிக்கால்
ஸ்டாஃப்ளர்
தெர்மாக்கோல்
வெல்வெட் துணி
கருப்பு நிற லைனர்
கிளாஸ் கலர்ஸ் - விரும்பிய நிறங்கள்

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாட்டிலின் அடிப்பாகம் தட்டையாக இல்லாமல் டிசைன் உள்ள பாட்டிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
இரண்டு வாட்டர் பாட்டிலின் அடிப்பாகத்தை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது பாட்டிலின் உள்பக்கம் கருப்பு நிற லைனர் கொண்டு படத்தில் உள்ளது போல் சிறிது இடைவெளிவிட்டு பூ இதழ் வரைந்துக் கொள்ளவும்.
கருப்பு நிற லைனர் காய்ந்ததும் விரும்பியநிற க்ளாஸ் கலரால் வரைந்த ஒவ்வொரு பூவிதழிலும் கலர் கொடுக்கவும். மெதுவாக பாட்டிலை அழுத்தி இதழ் முழுவதும் கலர் பரவும்படி கொடுக்கவும். ஒரு இதழுக்கு க்ளாஸ் கலர் கொடுத்து ஓரளவு காய்ந்ததும் அடுத்த இதழுக்கு கலர் கொடுக்க வேண்டும். கலர் கொடுக்கும் போது பப்புல்ஸ்(bubbles) ஏதேனும் வந்தால் உடனே ஊசி அல்லது குச்சியை வைத்து உடைத்து விடவும்.
இதேப் போல் இரண்டு பாட்டிலின் அடிப்பாகத்திலும் கலர் கொடுத்து நன்றாக காய்ந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஜிப்பை திறந்து அதன் ஒரு பகுதியை பாட்டிலின் வெளிப்பக்கத்தின் முனையில் வைத்து வரிசையாக பாட்டிலை சுற்றிலும் ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். (ஜிப்பை பாட்டிலின் வெளிப்புற சுற்றளவுக்கு தகுந்தாற் போல் வாங்கிக் கொள்ளவும்.)
ஜிப்பின் மற்றொரு பகுதியை மற்றொரு பாட்டிலில் மேற்சொன்ன முறையில் வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். இப்போது ஸ்டாஃப்ளர்பின் செய்த இரண்டு பாட்டிலையும் மூடி திறந்து பார்க்கவும்.
பிறகு பாட்டிலில் வெளிப்பக்கத்தில் ஸ்டாஃப்ளர் பின் செய்த பகுதி தெரியாமல் இருப்பதற்கு அந்த இடத்தில் பெவிக்கால் தடவி சுற்றிலும் லேஸ்ஸை ஒட்டிக் கொள்ளவும்.
தெர்மாக்கோலை பாட்டிலின் உள்பகுதிக்கு பொருந்துமாறு வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும். அதே அளவிற்கு வெல்வெட் துணியையும் வட்ட வடிவமாக நறுக்கி வைக்கவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் தெர்மாக்கோலின் மேல் பக்கத்தில் பெவிக்கால் தடவி இந்த வெல்வெட் துணியை ஒட்டி கொள்ளவும்.
வெல்வெட் துணி ஒட்டிய தெர்மாக்கோலின் நடுவில் மோதிரத்தை சொருகி வைக்கும் அளவிற்கு ஓட்டையிட்டுக் கொள்ளவும். இப்போது பாட்டிலை திறந்து ஏதாவது ஒரு பாட்டிலின் மேல் பக்கத்தில் தெர்மாக்கோலை பொருத்தி வைக்கவும்.
பிறகு அந்த துளையில் மோதிரத்தை சொருகி வைத்துக் கொள்ளவும். மிகவும் சுலபமாக, எளிமையாக செய்யக்கூடிய ஜூவல் பாக்ஸ் ரெடி. உங்கள் கற்பனைத்திறனுக்குகேற்ப இதனை மேலும் அலங்கரித்துக் கொள்ளலாம். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் பத்மா, ரேவதி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கலக்கிட்டீங்க பத்மா & ரேவதி.
இதுக்கு ஆளுக்கு ஒரு மோதிரம் போடவேண்டும்.

‍- இமா க்றிஸ்

நல்லா இருக்கு. இப்படி ஒரு ஆள் வீட்ல இருந்தா போதும். சுற்றுப்புற சூழல் கெட்டு போகாம இருக்கும்.
வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

simply super.

பத்மா&ரேவதி ஜ்வெல் பாக்ஸ் சூப்பரா இருக்கு.
செய்வதும் ஈஸியா இருக்கு.

பத்மா, ரேவதி... இதை பார்த்தப்போவே உங்களுக்கு பதிவு போட ஆசை... கை ஒத்துழைக்கல. இன்றே நிறைய பதிவு போட்டுட்டேன்.... சிறு இடைவெளி விட்டு விட்டு வந்து ஒரு வழியா எல்லாருக்கும் போட்டுட்டேன்னு நினைக்கிறேன். நீங்க இருவரும் நலமா? ஏன் உங்க பதிலே காணோம் குறிப்புகளில்?? சரி... பார்க்க ரொம்ப சூப்பரா இருக்குங்க. வாட்டர் பாட்டிலில் இன்னும் என்னென்ன செய்ய போறீங்கன்னு நான் ஆவலோட பார்த்துட்டு இருக்கேன். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta