6 years old boy only 12kg weight it is ok?

Hi Friends,
என் பய்யனுக்கு 6 வயது ஆரம்பித்து விட்டது அனால் 13 கிலோ தான் இருக்கான். டாக்டர் சொல்கிறார் சுறுசுறுப்பாக இருந்தால் போதும் என்று. இதுவரைல் 13 கிலோவை தாண்டவே இல்லை. என் பய்யன் மிகவும் சுறுசுறுப்பாக இர்ருபான் அவன்னை control பண்ணவே முடியாது. இர்ருந்தலும் அவனுடைய வெயிட் பற்றி எனக்கு எபோழுதும் கவலை தான். நான் நல்ல ஆரோகியமான உணவு தான் கொடுக்கிறேன் ஆனால் சாப்பிட மிகவும் விருப்பம் இல்லாதவன்.

யாராவது கூறுங்களேன் இந்த வெயிட் சரியானதா என்று.
மிகவும் நன்றி.
பிரியா.

டாக்டரே சொன்னதுக்கு பிறகு ஏன் கவலபடுறீங்க?
ஏதாவது குறை இருந்தா அவங்களே சொல்லிருப்பாங்க. அவனின் சுறுசுறுப்பே உங்களுக்கு பெரிய ப்ளஸ். இந்த மாறி இருக்குற கொழந்தைங்க அடிக்கடி காய்ச்சலில் அவதிபட்டால் தான் பயப்படனும். அவனுக்கு பிடித்த உணவுகளை கொடுங்க. போக போக அவனே அவன் உணவு பழக்கத்தை மாற்றுவான்.

அவனா தனியா கடைக்கு போக ஆரம்பிச்சா அவன் வாங்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டே எடை கூடும். சதை வைக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஊசி,மருந்து கொடுத்துற்றாதீங்க. அது போல் செய்து டீன் ஏஜில் எடை குறைக்க முடியாமல் திணறும் பிள்ளைகள் அதிகம் பார்த்திருக்கிறேன். கவலை கொள்ள வேண்டாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi balapriya,

i dontknow to tell what recipes will increse weight .

u may give avacado and apple milkshake ,if he drinks .

or try banana milkshake .

i got idea from those who replied me .

u can see amina mam's reply in my question.

thanks ,
priya.

மேலும் சில பதிவுகள்