காரணப் பெயர்கள் - சில குறிப்புகள்

காரணப் பெயர்கள் - சில குறிப்புகள்

அறுசுவை தோழிகளே. இந்த பகுதியில் நமக்கு தெரிந்த சில ஊர்,சுற்றுலா தளம்,பழம்,காய்கறி,கீரை, மளிகை சாமான்,மலர் என எந்த பொருளாகவோ அல்லது விஷயமாகவோ இருந்தாலும் அதற்கான பெயர் காரணத்தை தெரிவிக்கலாம்.

இதை பற்றி சில பாட்டிமார்கள் கூற கேட்டுள்ளேன்.. இந்த அறுசுவையில் பல விஷயங்களில் கைத் தேர்ந்த தோழிகள் நிறைய பேர்கள் உள்ளனர்.அவர்களிடம் இருந்து தேவையான அளவு தகவல் கிடைக்கும் என நம்புகிறேன்.இது நம் குழந்தைகளுக்கு கூட சொல்லிக் கொடுக்கலாம்.இதை பற்றி அவர்கள் தெரிந்து இருப்பது நமக்கு பெருமைதானே.

எனக்கு தெரிந்த நான்கு பொருட்களுக்கு பெயர் காரணம் கூறுகிறேன்..
சீரகம் - சீர் அகம்
நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரும்பங்கு வகித்து நம் அகத்தை (உடலினுள்) சீராக்குகிறது.

வெந்தயம் - வெந்த அயம்
அயம் என்றால் இரும்பு. அதாவது இரும்பு சக்தி அதிகம் கொண்டுது என்பதை தான் வேக வைத்த இரும்பு என கூறுகின்றனர்.அத்தனை நல்ல குணத்தை கொண்டதாம்.

பொன்னாங்கன்னி - பொன் ஆம் காணீர்.
இந்த கீரையை உட்கொள்வதால் மேனியானது பொன்னை போல மிளிரும் என்பதை காணீர் என கூறுகிறனர்.

மொடக்கத்தான் - முடக்கு அறுத்தான்.
இது ஒரு கீரை வகை. நம் உடலில் வாயுவால் ஏற்படும் பிடிப்பையும், மலசிக்கலை போக்குவதிலும் வல்லது. எனவே தான் முடக்கை(தடை) அறுக்கக்கூடியது என இந்த பெயர் காரணம்.

அனைவரின் பங்களிப்பை எதிர்ப்பார்த்து, இன்னும் நிறைய பெயர் காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் நான் மட்டும் அல்ல அனைத்து தோழிகளும்.. ;-)

foot ball பார்த்தீங்களா?..octopus astrology னு நம்ம ஊரு கிளி ஜோசியம் மாதிரி கலக்கிட்டு இருக்காங்க foreign பயபுள்ளைக...
astrology எல்லா ஊருக்குமே பொருந்தும் போலே இல்லையா??but...இந்த prediction நிச்சயம் team players psycologicalaa suffer ஆகலாம் இல்லையா?

Madurai Always Rocks...

ஹாய் ரம்யா,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

உங்கள் பாராட்டுக்கு நன்றி ரம்யா.

காஞ்சீபுரத்தில் இருப்பவர்கள் கால் ஆட்டியே பிழைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதன் பொருள் வெட்டியாக கால் ஆட்டுவது இல்லை. காஞ்சீபுரத்தில் பட்டு நெசவு முக்கியமான தொழில். நெசவு நெய்யும் போது காலால் நெசவு கட்டையை ஆட்டினால் தான் நெசவு நெய்ய முடியும். அதைதான் நம் முன்னோர்கள் அவ்வளவு அற்புதமாக கூறியுள்ளனர்.

கல்பனா என்றால் கற்பனை அதிகம் கொண்டவள் என்று பொருள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் பாராட்டுக்கு நன்றி ரம்யா.

காஞ்சீபுரத்தில் இருப்பவர்கள் கால் ஆட்டியே பிழைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதன் பொருள் வெட்டியாக கால் ஆட்டுவது இல்லை. காஞ்சீபுரத்தில் பட்டு நெசவு முக்கியமான தொழில். நெசவு நெய்யும் போது காலால் நெசவு கட்டையை ஆட்டினால் தான் நெசவு நெய்ய முடியும். அதைதான் நம் முன்னோர்கள் அவ்வளவு அற்புதமாக கூறியுள்ளனர்.

கல்பனா என்றால் கற்பனை அதிகம் கொண்டவள் என்று பொருள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பன்னாடை என்பதை திட்டும் வார்த்தையாக சிலர் உச்சரிப்பது வழக்கமாயிடுச்சு. அவங்க கிட்ட என்னன்னு கேட்டா சொல்ல தெரியாது.

அர்த்தம்: பனை மரத்தில் உள்ள வலை போன்ற(பேர் சரியா சொல்ல தெரியல) அமைப்பின் பெயர் தான் பன்னாடை. இப்போ தானே வடிகட்டி.அப்பலாம் மக்கள் அதை தான் உபயோகிப்பார்களாம்.
நல்லதை வெளியேற்றி கெட்ட கழிவுகளை(சக்கை) மட்டும் தன்னுள் வைத்திருப்பதால் அத்தகைய மக்குகளை பன்னாடை என்று சொல்வார்கள்.

பின்குறிப்பு:என் தமிழாசிரியர் சொன்னது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு ரம்யா

நல்ல இழை ஆரம்பிச்சிருக்கீங்க.

சீரகம் - உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, அகத்தை சீராக வைக்கும், அதனால் சீர் + அகம்.

இன்னும் ஞாபகம் வர வர பதிவு போடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அடடா..ஆமின்

நல்ல ஒரு விளக்கம்...;-)
இதை போல அரிய விளக்கம் கொடுக்க ஆமினுக்கு நிகர் ஆமின் தான் ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாலக்ஷ்மி

நன்றி நல்ல விளக்கம். இன்னும் உங்களிடம் நிறைய விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்..;-) எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் நபர் தான் நீங்கள். ;-) அதனால்தான்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பெயர் காரணம்

தோழிகளே ....மீண்டும் உங்களுக்காக

1 பாப் மியூஸிக் (POP Music) என்றால் பாப்ளர் மியூஸிக் (Poplar Music) என்று பெயர்.

2.மொஃபட் (Moped) என்றால் மோட்டரலைஸ்டு பெடலிங் (Motorized Peddling) என அர்த்தம்

3.பஸ் (Bus) என்பது ஒம்னிபஸ்சின் (Omnibus) ஷார்ட் நேம்.. ஒம்னிபஸ்சின் என்றால் எவிரிபடி(Everybody) என பொருள்.

4.TIPS என்றால் To Insure Prompt Service என அர்த்தம்

5.QUEUE என்பது Queen's Quest.ராணியை பார்க்க நீளமான வரிசையில் நிற்பதால் இந்த பெயர் வந்தது.

6.ஜீப் (Jeep) என்பது தனித்தனமை வாய்ந்த கியர் ஸிஸ்டம் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம். General Purpose vehicle.. GP என்பது பின்னாளில் (Jeep) ஜீப் என மாறியது.

7.NEWS என்பது NORTH,WEST,SOUTH & EAST.அனைவருக்கும் தெரிந்தது என நினைக்கிறேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ரம்யா

ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்த போது அரசாங்க தபால்களில் தபால் தலை ஒட்ட மாட்டார்களாம், ON COMPANY SERVICE என்ற முத்திரை மட்டும் இருக்குமாம். அதனால்தான் பணம் செலுத்தாமல் கிடைப்பதற்கு ஓசி என்று சொல்கிறார்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்