கோழி குருமா

தேதி: July 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (10 votes)

 

கோழி கறி - அரைக் கிலோ
வெங்காயம் - 2 கைப்பிடி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப
புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு கைப்பிடி நறுக்கியது(1 அல்லது 2 பழம்)
தயிர் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - தேவையான அளவு
எலுமிச்சை - ஒரு பழம் (சிறியது)
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2


 

வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். கொத்தமல்லி புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிவப்பாக மாறும் வரை தாளிக்கவும். ஆனால் கருகவிடக் கூடாது.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு தடவை வதக்கி தக்காளி மற்றும் கோழி கறி சேர்த்து ஒரு தடவை கிளறவும்.
பிறகு தூள் வகைகள், தயிர், உப்பு சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும்.
எண்ணெய் பிரிய தொடங்கியதும்,உருளைக்கிழங்கு சேர்த்து 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.(கோழி கறி என்பதால் சீக்கிரம் வெந்துவிடும்)
கறி வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். தேவைப்பட்டால் அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கலாம்.
தேங்காய் விழுது, சிறிதளவு கரம் மசாலா சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடலாம் அல்லது மேலும் ஒரு விசில் விடலாம்.
சுவையான கோழி குருமா தயார். இது பரோட்டா, குஸ்காவுடன் சுவையாக இருக்கும், வெள்ளை சாதத்திற்கும் நல்லதொரு காம்பினேஷன். தேவையானால் தேங்காய் விழுதுடன் முந்திரி, கசகசா சேர்த்தும் அரைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீமுக்கு மிக்க நன்றி

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

parkkavey romba nalla iruku. sapta romba nalla irukkum illa?

ஹாய் shariz உங்களுடைய கோழி குருமா செய்வதற்க்கு ஈஸியாக இருப்பதால் உடனே print out எடுத்து வைத்து கொண்டேன்

ஹாய் ரிஸ்.
விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன். பாக்கவே அருமையா இருக்கு. இப்ப தான் பார்க்குறேன். டின்னர்க்கு புரோட்டா கூட வச்சு சாப்பிட்டுட்டு இன்னைக்கே எப்படி இருக்குண்ணு சொல்றேன்.தெளிவான படங்கள். என் செல்ல குட்டிய கேட்டதா சொல்லுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பார்க்கவே...சப்பு கொட்ட வைக்கிறது...நான் நான்வெஜ் வீட்டில் சமைப்பதில்லை..அதனால எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க...:-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரிஸ்வானா மேடம்,
அருமையான குறிப்பு உங்களுடைய கோழி குருமா பார்க்கும் போதே செய்யணும் போல இருக்கு
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
மேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையான குறிப்பு..... பார்க்கும் போதே சூப்பரா இருக்கு.... கண்டிப்பா நாளைக்கு செய்து பார்த்துடறேன்...... படங்களும் நல்லா தெளிவா இருக்கு.... நல்ல குறிப்பு கொடுத்ததற்கு நன்றி......

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் ரிஸ்வானா
கோழி குருமா சூப்பர். எலுமிச்சம்பழம் சேக்கல. அதற்கு பதிலா தயிர் போட்டேன். ரொம்ப அருமையா,அதைவிட ஈசியா இருந்துச்சு.பூரியோட சூப்பர் காமினேஷன். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரிஸ்வானா... பார்க்கவே ஆசையா இருக்குங்க. சூப்பரா இருக்கு. நிச்சயம் செய்யறேன். தெளிவான படங்கள், அருமையான குரிப்பு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi nepherthy,rpanitha பின்னுட்டம் அனுப்பியமைக்கு ரொம்ப நன்றிபா செய்து பாருங்கள் ரொம்ப நல்லா இருக்கும்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi amina
assalamu alaikum
குறிப்பு அனுப்பிய அன்னைக்கே குருமா செய்து பார்த்து பின்னுட்டம் அனுப்பியமைக்கு ரொம்ப நன்றி ஆமினா,எல்லா புகழும் கடவுளுக்கு அப்புறமா என் மாமியாருக்கும் என் அம்மாவுக்கும் தான் இந்த புகழ் அனைத்தும் போக வேண்டும்,ஏன்னா அவுங்க தானே எனக்கு சொல்லிகொடுத்தாங்க.எலுமிச்சை சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும் அவ்வளவுதான்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

இளவரசி அடுத்த முறை என் வீட்டில் கோழி குருமா செய்யும்போது இளவரசிக்கு ஒரு பார்சல்(சர்வர் பாணியில் சொல்லி பாருங்கள்.ok wa.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் கவிதா கோழி குருமா செய்து பருங்க ரொம்ப நல்லா இருக்கும்.செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் vidhya,
குருமா செய்து பருங்க ரொம்ப நல்லா இருக்கும்.செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் vanitha,
ரொம்ப நன்றி குருமா செய்து பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

I have very less exprience in cooking. But i tried this 2 days back as side dish to parata. It was really good. My husband told it is like hotel receipe. My son liked it very much.We all enjoyed a lot.

Hello Shariz,

Hope u are doing well.Recipe is too good.Great combination with Idly/Dosa.Everyone in my home liked it.Thanks for sharing this recipe.GREAT JOB

"Happiness is a habit, cultivate it"