நெல்லிக்காய் சட்னி

தேதி: July 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.4 (5 votes)

 

பெரிய நெல்லிக்காய் - 4
மிளகாய் வற்றல் - 5
உளுந்து - 6 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது [விரும்பினால்]


 

நெல்லிக்காயை விதை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் விதை நீக்கின நெல்லிக்காயை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், விரும்பினால் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு சிறிது தேங்காய், புளி, உப்பு, நெல்லிக்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான சட்னியாக அரைத்து எடுக்கவும்.
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். விரும்பினால் தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் துவையலாகவும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சத்துள்ள சட்னி...நல்ல குறிப்பு...ஒரு இடைவெளிவிட்டு உங்கள் குறிப்பை பார்த்ததில் மகிழ்ச்சி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனிதா மேடம்,
அருமையான குறிப்பு
நெல்லிக்காய் சட்னி பார்க்கவே அருமையா இருக்கு
மேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல சுலபமான சத்தான குறிப்பு.... இந்த பெரிய நெல்லிக்காய் மட்டும் எந்த விதத்தில் சமைத்தாலும் இதில் உள்ள சத்துக்கள் வீணாகாது என்று ஒரு நாட்டு மருத்துவர் சொல்லி கேட்டிருக்கிறேன்.... தினமும் 1 அல்லது 2 பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.... எனக்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிட பிடிக்காது.... இந்த சட்னியை செய்து பார்த்து உங்களுக்கு சொல்கிறேன்.....

வித்யா பிரவீன்குமார்... :)

இளவரசி... மிக்க நன்றி. :) உங்களை தான் நீண்ட நாட்களாக காணவில்லை. நலம் தானே??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா... சில நாட்களாக ஆசியாவை காணவில்லை. அவர் போல் இப்போதெல்லாம் என்னுடைய எல்லா படைப்புகளிலும் உங்களது பதிவை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யா... உண்மை தான். நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரும், ரத்த சோகை இருப்பவர்கள் தினமும் சாப்பிடுவது நல்லது என்று சொல்ல கேட்டிருக்கேன். செய்து பார்த்து, ;) சாப்பிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
சட்னி பார்க்க ஆசையாக இருக்கு. பார்க்க மட்டும் தான் முடியும். ;)
உளுந்து, மிளகாய் வற்றல் தாளித்து இருக்கும் ஸ்டைல் சுப்பர். ;))

‍- இமா க்றிஸ்

வனிதா உங்க குறிப்புப்படியே நெல்லிக்கா சட்னி செய்தேன்.
அதைபற்றிய பின்னூட்டம்மும் வேர பக்கம் கொடுத்திருந்தேன்.
சூடு, சூடு சாதமுடன் சிறிது நல்லண்ணை விட்டு நெல்லிக்காய்
சட்னி பிசைந்து சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கு.

உங்க நெல்லிக்காய் சட்னி சூப்பர் டேஸ்டுங்க. அதுவும் சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்வதற்கு பெஸ்ட் காம்பினெஷனா இருந்தது. உடம்புக்கும்
நல்லது.

இமா.. மிக்க நன்றி. தாளிப்பில் ஏதும் சொதப்பிட்டேனா??? உள்குத்து ஏதும் இல்லையே ;) ஹிஹீ.... செபா ஆன்ட்டி பதிவு போட்டிருக்காங்க... பயங்கர சந்தோஷம் எனக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோமு... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றிங்க. வேறு எங்கு போட்டிருந்தீங்க... கவனும் இல்லை :(. உங்களுக்கு பிடிச்சிருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. நானும் சப்பாத்தியுடன் சாப்பிடுவேன், ரொம்ப பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


நெல்லிக்காய் சட்னி பார்க்கவே ரொம்ப நன்னா இருக்கு.நான் நாளை செய்து பார்த்து விட்டுத்தான் மறு வேலை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


அன்பு வனிதா மேடம்,
நெல்லிக்காய் சட்னி பார்க்கவே ரொம்ப நன்னா இருக்கு.நான் நாளை செய்து பார்த்து விட்டுத்தான் மறு வேலை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா... அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. காத்திருக்கேன் உங்க பின்னூட்டத்துக்கு :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்றே செய்து பார்த்துட்டேன்.... இட்லி கூட சாப்பிட்டேன்.... ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.... நெல்லிக்காய் பிடிக்காத நானே விரும்பி சாப்பிட்டேன்.... ஒரு நல்ல குறிப்புக்கு ரொம்ப நன்றி...... :-)

வித்யா பிரவீன்குமார்... :)

வித்யா... மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லும் பின்னூட்டங்கள் படிக்கவே மகிழ்ச்சி தான்!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக சத்தான குறிப்பு. நன்றி ஏன் நெல்லிக்காயை வேக வைக்க வேண்டும். அப்படியே அரைத்தால் நன்றாக இருக்குமா?

அன்புடன்
லதா

லதா... மிக்க் அனன்றி. வேக வைத்து அரத்தா சுவை நன்றாக இருக்கும். ரொம்ப பச்சை வாசம் இருக்காது. விரும்பினா வேக வைக்காம அரைங்க. அதுவும் நல்லா தான் இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உளுந்து - 6 தேக்கரண்டி

white உளுந்து or vera ennappa please help me

வனிதா

உளுந்து - 6 தேக்கரண்டி

எந்த‌ உளுந்து இட்லி போடும் உளுந்து or வேர‌ என்ன‌ உளுந்து please help me vanitha

வெள்ளை உளுந்து தாங்க. சாரி நான் நீங்க கேட்டதை கவனிக்கல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா