நெய் முறுக்கு

தேதி: March 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பச்சரிசி - ஒரு கிலோ
பொரிக்கடலை - அரை கிலோ
எள் - ஒரு மேசைக்கரண்டி அல்லது சீரகம்
தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்
நெய் - 50 கிராம்
உப்பு - தேவைகேற்ப


 

அரிசியை ஊறவைத்து உரலில் மாவாக்கி ஈரப்பசை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பொரிகடலையை உரலில் இடித்து மாவாக்கிக் கலந்து கொள்ளவும்.
உப்புத் தண்ணீர் தெளித்து எள் போட்டு நெய்யைக் காயவைத்து மாவில் ஊற்றி கட்டியாகப் பிசையவும்.
பிசைந்த மாவை முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்து எண்ணெயில் முறுக்குப் பிழிந்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்