மட்டன் கபாப்

தேதி: July 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ப்ரெட் க்ரம்ஸ் - சிறிதளவு
அரைக்க வேண்டியவை:
வெங்காயம் - ஒன்று (நடுத்தரமான அளவு)
பூண்டு - 6
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கேற்ப )
தேங்காய் (துருவியது) - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - கால் தேக்கரண்டி
மல்லிதூள் - கால் தேக்கரண்டி
கபாப் மசாலா - தேவையென்றால்
கரம் மசாலா - சிறிதளவு
மிளகு, சீரகம் சேர்த்து பொடித்தது - கால் தேக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். கொத்துக்கறியை 2,3 தடவை அலசி தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் மசாலா கலவையுடன் கொத்துக்கறியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கொத்துக்கறியுடன் தேவையான அளவு முட்டை சேர்த்துக் கொள்ளவும். ரொம்ப கொழகொழவென்று ஆகாமல் பார்த்துக் கொள்ளவும். கடைசியில் ப்ரெட் க்ரம்ஸ் சேர்த்துக் கொள்ளவும். கலவை, உருண்டை பிடிக்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.
கொத்துக்கறி கலவையை ஒரு உருண்டை குச்சியில் படத்தில் இருப்பதுபோல அழுத்தி வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொத்துக்கறி கலவையை மெதுவாக இழுத்து விடவும். பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறவும். கொத்துக்கறி கலவையை உருண்டையாகவும், தட்டையாகவும் எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
சுவையான மட்டன் கபாப் ரெடி. மட்டன் கபாபை மாலை நேர சிற்றுண்டியாகவும் பரிமாறலாம். கபாபை ஸ்லைசாக நறுக்கி ப்ரெட்டுடன் சாஸ் வைத்து சாண்ட்விட்ச் போல குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரிஸ்வானா மேடம்,
மட்டன் கபாப் இப்படி தான் செய்யணுமா?
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
ரொம்ப அருமையா கொடுத்து இருக்கீங்க
மேலும் பல நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரிஸ் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. குச்சில தான் போட வரல. அதுனால கட்லெட் மாறி பொறிச்சு எடுத்தேன். சாம்பார் சாதத்துடன் நல்லா இருந்துச்சு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் கவிதா எப்படி இருக்கிங்க
பொண்ணு எப்படி இருக்காங்க!பின்னூட்டம் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி.இது கடையில் ஷீக் கபாப் விற்குமே அது but என்னுடைய ஸ்டைலில்.செய்து பாருங்க நல்லா வரும்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi amina
assalamu alaikum
ரொம்ப நன்றி ஆமினா என்னுடைய குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு.அடுத்த முறை குச்சியில் செய்து பாருங்கள் ரொம்ப நல்லா வரும்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

குச்சில சரியா வரல பா. கொஞ்சம் தண்ணி அதிகமாச்சுன்னு நெனைக்கிறேன்.
கண்டிப்பா அடுத்த தடவ செஞ்சுட்டு சொல்றேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா