கொள்ளு சுண்டல்

தேதி: July 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

1. கொள்ளு - 2 கப்
2. வெங்காயம் - 1/4
3. பச்சை மிளகாய் - 2
4. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. உளுந்து - 1/2 தேக்கரண்டி
8. கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை
11. உப்பு


 

ஊற வைத்த கொள்ளை வேக வைத்து வைக்கவும்.
நீரை வடித்துவிட்டு இதில் உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வேக வைத்த கொள்ளை சேர்த்து 5 நிமிடம் கிளரவும்.
முடிந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி எடுக்கவும்.


வடித்த நீரில் ரசம் செய்யலாம். இதே போல் கொள்ளை முளைகட்ட வைத்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
கை வலி எப்படி இருக்கு?
நல்ல குறிப்பு
கொள்ளுக்கு ஆங்கிலத்தில் horsegram தானே?
கிடைக்குதான்னு பார்க்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.... கை வலி குறைந்திருக்கு. மிக்க நன்றி :) horsegram தான்.. செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா