கறிவேப்பிலை குழம்பு - 1

தேதி: July 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

1. கறிவேப்பிலை - 1 கப்
2. துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
3. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 6
5. மிளகு - 2 தேக்கரண்டி
6. தேங்காய் - சிறிது [விரும்பினால்]
7. புளி - சின்ன எலுமிச்சை அளவு
8. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
12. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
13. உப்பு
14. பெருங்காயம் [விரும்பினால்]
15. சின்ன வெங்காயம் - 10
16. பூண்டு - 10 பல்


 

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு வறுத்து எடுக்கவும்.
பின் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்.
இதே கடாயில் கறிவேப்பிலையும் வறுத்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
விரும்பினால் கடைசியில் தேங்காய் அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
நல்ல குறிப்பு
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
இப்போது தான் உங்க கறிவேப்பிலை குழம்பு செய்தேன். நன்றாக வந்தது. இந்த குழம்பை நான் செய்து இருக்கிறேன், ஆனால் ingredients மறந்து விட்டது. உங்க குறிப்பை பார்த்ததும் வெகு நாட்கள் கழித்து, இன்று தான் செய்தேன். அதனால் தான் உடனே வந்து பதிவு போட்டேன். குறிப்புக்கு நன்றி.

ஹர்ஷா... ரொம்ப ரொம்ப நன்றிங்க. இனி அடிக்கடி செய்வீங்க தானே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா