கறிவேப்பிலை குழம்பு - 2

தேதி: July 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

1. கறிவேப்பிலை - 1 கப்
2. மிளகாய் வற்றல் - 6
3. மிளகு - 2 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. புளி - சின்ன எலுமிச்சை அளவு
6. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு
11. பெருங்காயம் [விரும்பினால்]
12. சின்ன வெங்காயம் - 10
13. பூண்டு - 10 பல்


 

கறிவேப்பிலை, மிளகு, சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எண்ணெய் தனியாக வரும்போது எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
இதே முறையில் தான் நானும் கருவேப்பிலை குழம்பு செய்வேன்
இங்கே கருவேப்பிலை தான் விலை ரொம்ப அதிகம்
அதனாலே செய்வதே இல்லை இப்போ கண்டிப்பாக செய்து பார்க்கணும் என்று தோன்றிவிட்டது
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா... மிக்க நன்றி. கறிவேப்பிலை வாசம் பிடிக்கும் என்றால் இப்படி செய்வது தான் நல்லது. விலை அதிகம் என்றாலும் கிடைக்கிறதே என்று சந்தோஷப்படுங்க. சில நாடுகளில் கிடைப்பதே இல்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா