குழந்தைக்கு முதல் மொட்டை

என் குழந்தைக்கு முதல் மொட்டை கோவிலில் அடிக்க போகிறோம்.என்ன என்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் தோழியரே.

குழன்தைக்கு மொட்டை அடிதவுடென் ஜுரம் வர வாய்பு உள்ளதால் crocin அல்லது paracetomol இருதல் நலம்.
நல்ல சந்தநம் வீட்டில் இருன்து கொன்டு செல்லவும்.அதிக வேலைபாடு இல்லாத உடை மட்ரும் பருத்தி உடைகளை கொன்டு செல்லவும்.

raji

# பொதுவாகவே கோடையில் குழந்தைக்கு மொட்டை போடவே கூடாது. காய்ச்சல் வரும் வாய்ப்பு மிக அதிகம். இப்போது மழை அதலால் காய்ச்சல் வர வாய்ப்பு குறைவு தான். எனினும் எச்சரிக்கையாக இருங்கள்..
# சவரம் செய்ய பயன்படுத்தும் கத்தி சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
# பாக்கெட் சந்தன பவுடர் சூடு. எனவே கட்டையில் இருந்து அரைத்து எடுத்த சந்தனம் பூசுங்கள்.

பொதுவாகவே குழந்தைகள் முதல் மொட்டை அடிக்கும் போது பயந்து அழுவார்கள். சில குழந்தைகள் அழுது வாந்தி கூட எடுப்பார்கள். அதனால் மொட்டை அடிக்கும் முன் 2 மணி நேரத்துக்கு முன்பே உணவு கொடுப்பது நல்லது. தண்ணீர் மற்றும், ஸ்னாக்ஸ் ஏதேனும் கொண்டு செல்லுங்கள்.
மொட்டை அடித்து முடித்ததும் குளிக்க தேவையானவை, மாற்று உடை கொண்டு செல்லவும்.
முக்கியமானது, மொட்டை அடிக்கும் போது குழந்தைகள் எழுந்து கொள்ள முயலும் போது வெட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அழுதாலும் பரவாயில்லை என்று குழந்தையை அசையாமல் பிடித்து கொள்ள வேண்டும்.

மொட்டை போட தேவையான கத்தி அல்லது பிளேடை நாமே வாங்கிச்செல்லலாம்.

thanks to all. Successfully completed mundan ceremony.

மேலும் சில பதிவுகள்