28வது வாரம் கர்ப்பம் , உதவுங்கள் தோழிகளே.....

அன்பு தோழிகளே, நான் இப்போது 28வது வாரம் கர்ப்பமாக இருக்கிறேன். கடந்த 2 நாட்களாக குழந்தையின் அசைவு நாள் முழுவதும் அதிகமாக இருகிறது. இப்படிதான் இருக்குமா? ப்ளீஸ் சொல்லுங்கள்...

இந்த மாதத்தில் அசைவு இருப்பது இயல்பு தான். குழந்தையின் கை,கால் நகங்கள் வளர்ந்திருப்பதால் கீறிக்கொண்டே இருக்கும். அது புழு நகர்வது போன்ற உணர்வு கொடுக்கும். முடியும் வளர்ந்திருப்பதால் நம் வயிற்றின் சதை பகுதியில் உரசும் போது கூசிக்கொண்டே இருக்கும்.உங்கள் குழந்தைக்கு நகமும்,முடியும் அதிகமா இருக்கும் போல. உங்களோட பேசணும்னு ஆசைபடுது போல. எஞ்ஜாய் பண்ணுங்க.

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா அக்கா. எனக்கு இது முதல் குழந்தை. அதனால் பயமாக இருந்தது.

லக்ஷ்மி மேடம்,
இப்போது அப்படி தான் இருக்கும்
என் மகளும் வயிற்றில் இருக்கும் போது நிறைய அசைவு தெரியும்
எனக்கும் முதலில் ரொம்ப பதட்டமாக இருந்தது அப்புறம் சரியாகிவிட்டது கவலை படாதீங்க உங்க பிள்ளை ரொம்ப சுட்டியாக இருப்பாங்க போலும்
நிறைய இசை கேளுங்க,நல்ல விஷயங்களை படிங்க,உங்க கனவுகளை பாப்பாகிட்ட சொல்லுங்க
கண்டிப்பா வெளியே வந்தால் அதையெல்லாம் நீங்க பார்க்கலாம்..
என்னுடைய சொந்த அனுபவம்...என் மகள் வயிற்றில் இருக்கும் போது நிறைய இசை கேட்பேன்,புத்தகம் படிப்பேன் இப்போ என் குட்டியும் அதையெல்லாம் செய்வாள்

என்றும் அன்புடன்,
கவிதா


அன்பு லஷ்மி,
இதில் பயப்பட ஒன்றுமே இல்லை.எனது 2-வது மகள் வயிற்றில் இருந்தபோது ஒரு இடத்தில் இருக்க மாட்டாள்.ஒரு நிமிடம் வலது புறம் இருப்பாள்.மறு நிமிடமே இடதுபுறம் சென்று விடுவாள்.பயங்கற சுட்டி.பிறக்கும் போதும் சீக்கிரமே பிறந்து விட்டாள்.(நார்மல் டெலிவரிதான்).

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரொம்ப ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ். உங்களுடைய பதில் ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது.

மேலும் சில பதிவுகள்