இதற்கு மேல் என்ன செய்வது? - அறுசுவை கட்டுரை பகுதி - 15554

Selvi akka

இதற்கு மேல் என்ன செய்வது?

அன்புள்ள அம்மா,

என் பெயர் வ............. நான் எங்கள் வீட்டில் முதல் பெண். எனக்கு இரண்டு சகோதரிகள். எனது தந்தையார் ஒரு லாரி இஞ்சின் மெக்கானிக். வருமானம் அதிகம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவர் அதிகம் ஸ்மோக் செய்வதால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். எங்க அம்மா அந்த நேரங்கள்ல கடன் வாங்கித்தான் குடும்பத்தை ஓட்டினாங்க. எங்க அம்மாவுக்கு அவங்க ப்ரதர் சப்போர்ட் பண்றாரு. அவர் உடல் ஊனமுற்றவர். அரசாங்க வேலை பார்க்கிறவர். என்னை படிக்க வச்சதெல்லாம் அவர்தான். நான் பி.காம் படிச்சு மூணு வருசம் வேலைப் பார்த்து என் குடும்பத்தை கவனிச்சுக்கிட்டேன். இப்ப எனக்கு திருமணம் ஆகி 8 மாசம் ஆகுது. என் கணவர் மிகவும் நல்லவர். என் அம்மாவுக்கு நான் மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் அனுப்பறேன். என்னோட சம்பளம் 3500 தான். ஆனா, எங்க அம்மா என்கிட்டே அதிகமா எதிர்பார்க்கிறாங்க. எங்க அப்பாவுக்கு 10 லட்ச ரூபாய்க்கு சொத்து இருக்கு. இருந்தாலும் எங்க அம்மா ஒரு மாமியார் மாதிரி எங்கூட சண்டை போடுறாங்க. என் கணவரும் ஒரு அரசாங்க வேலையிலத்தான் இருக்காரு. மாமியார் ரொம்ப நல்லவங்க. எங்கிட்டே எதுவுமே எதிர்பார்க்க மாட்டாங்க. எங்க அம்மா, நான் நல்லா இருக்கேன்.. ஆனா அவங்களுக்கு செய்ய மாட்டேங்கிறேன்னு
நினைக்கிறாங்க. நான் ரொம்ப சிக்கனமா இருப்பேன். எங்க அம்மா அதிகமா செலவு பண்ணுவாங்க. இதுக்கு தயவுசெஞ்சு ஒரு வழி சொல்லுங்க. எங்க அம்மாவால எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் ப்ராப்ளம் வரும். என்னை ஆயிரம் கொடுக்க விடுறதே பெரிய விசயமா நினைக்கிறேன். தயவுசெஞ்சு உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க..

செய்வதே பெரிய விசயம்..

அன்பு வ........,

அப்பாவும் ஓரளவு சம்பாதிக்கிறார். மாமாவும் உதவுகிறார். நீங்களும் கொடுக்கறீங்க. உங்க சகோதரிகள் என்ன செய்யறாங்க? படிச்சிருக்காங்கன்னா அவங்களும் ஏதாவது வேலைக்குப் போய் குடும்பத்திற்கு உதவலாமே! திருமணம் ஆகி இருந்தாலும், அவர்களும் கொஞ்சம் உதவலாமே!

எப்போதுமே அதிகமாக செலவு செய்பவர்களின் கையில் எவ்வளவு கொடுத்தாலும் போதாது. செலவு செய்து கொண்டே இருப்பார்கள். என் அனுபவத்தில் நிறைய பேரை அது போல் பார்த்திருக்கிறேன். நீங்கள் திருமணம் ஆகியும் இவ்வளவு உதவுவதே பெரிய விஷயம். அதற்கு உங்கள் கணவரும், மாமியாரும் ஆதரவாக இருப்பது நீங்கள் செய்த பாக்கியம். செலவை குறைத்து சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்று அம்மாவிடம் எடுத்து சொல்லுங்கள். இதற்கு மேல் உதவினால் என் குடும்பத்தில் பிரச்னை வரும் என்று சொல்லுங்கள். ரொம்ப பிரச்னை செய்தால், இப்போது கொடுப்பதையும் நிறுத்துவது போல் ஆகிவிடும் என்றும் சொல்லுங்கள்.
சரிவரவில்லை என்றால், அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். விட்டுவிடுங்கள்.

உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கை என்று யோசிக்காத அம்மாவுக்கு இவ்வளவு செய்வதே பெரிது. கவலைப்படாமல் நீங்கள் உங்கள் குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பாருங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.


எடை குறைக்க வழி கூறுங்கள்..

அன்புள்ள செல்வி அம்மா,

என் பெயர் ஆ......, நான் 2009 ல் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் முடித்திருக்கின்றேன். வயது 23. உயரம் 145செ.மீ. உடல் எடை 82.2. அறுசுவைக்கு நான் புதிய உறுப்பினர் எனது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்து, எனது எதிர்காலத்திற்கு நல்ல வழி காட்டுங்கள்.

எனக்கு ஹார்மோன்கள் பிரச்சனை எதுவும் இல்லை. என்னுடைய பரம்பரையால் உடல்வாகு குண்டாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் ப்ராப்ளமும் இருக்கிறது. டாக்டர் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று சொல்கிறார். என்னுடைய சிறு வயதிலேயே நிறைய மருந்துகள் சாப்பிட்டு இருக்கின்றேன். என்னுடைய 14 வது வயதில் எனக்கு அப்பெண்டிஸ் ஆபரேசன் நடந்தது. சென்ற நவம்பர் மாதம் ஒரு விபத்தில் என்னுடைய கால் எலும்பில் ப்ராக்சர் ஏற்பட்டது. எனவே என்னால் பெரிதாக உடற்பயிற்சியோ, அதிக தூரம் நடப்பதோ இயலாது. நான் ஒரு மருந்து சாப்பிட்டதில் எனது எடை 4 கிலோ அளவில் குறைந்தது. அதை நிறுத்தியவுடன் மீண்டும் எடை பழையபடி வந்துவிட்டது. ஒரு மாதத்தில் 6-8 கிலோ வரை எடை குறைக்க விரும்புகின்றேன். இதற்கு ஏதேனும் வழி உள்ளதா? Herbalife, gettrim மாதிரியான மருந்துகள் எடுக்கலாமா? தினமும் 4ல் இருந்து 5 லிட்டர் தண்ணீர் குடிக்கின்றேன்.

என்னுடைய இந்த உடல் அமைப்பினால் வெளியில் செல்வதற்கு கூட தயக்கமாக இருக்கிறது. இப்போது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்திருக்கின்றார்கள். தயவுசெய்து எனக்கு நல்லதொரு ஆலோசனை வழங்கவும்.

உடல் எடை குறைக்க..

அன்பு மகள் ஆ.... க்கு,

முதலில் குண்டாக இருப்பதை ஒரு பெரிய பிரச்னையாக நினைக்க வேண்டாம். முயற்சி செய்தால் எடையை குறைக்கலாம். அதற்கான மாத்திரைகள் எடுப்பது ரொம்பவே ஆபத்தான விஷயம். சினேகிதி இதழில் கூட அதைப் பற்றி வந்துள்ளது. முடிந்தால் படித்துப் பார்.

ஹார்மோனல் இம்பேலன்ஸ் இல்லையென்றால், பீரியட்ஸ் சரியாக வராமல் இருக்காதே. அதனால், தைராய்டு ஒரு முறை செக்கப் செய்து பார்க்கவும். பரம்பரையாக கொஞ்சம் குண்டான உடல்வாகு என்றால், அதுவும் இருக்கும். டயட்டை ரொம்ப கடுமையாக பின்பற்ற வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் காரட் ஜூஸ் தேன், மிளகுத்தூள் கலந்து குடிக்கவும். உடன் யோகா, உடற்பயிற்சி செய்யவும். தரையில் படுத்துக் கொண்டு கால்களை மேலே தூக்கி, இறக்கி தினமும் பயிற்சி செய்து வந்தால் வயிற்றுப்பகுதி சதை குறையும். முறையான டயட்டீசியணை அணுகி என்னென்ன உணவு, எப்ப சாப்பிடணும்னு கேட்டு அது போல் செய்யவும். ஐஸ்கிரீம், சாக்லேட், ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டம்ஸ், பொரித்த உணவுகள் அறவே சாப்பிடக் கூடாது.

யோகா நல்ல சிறந்த வழி. நல்லதொரு யோகா சென்டரில் சேர்ந்து முயற்சிக்கலாம். ஹோமியோபதியில் எடை குறைப்பதற்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்து இருக்கிறது. ஆரம்பத்தில் பலன் குறைவாக இருப்பது போல் இருந்தாலும் பொறுமையாக முயற்சித்தால் பலன் கிடைக்கும். குண்டாக இருக்கோம்னு கவலைப்பட வேண்டாம். நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைத்தால், வாழ்வில் முன்னேறவே முடியாது. நம்பிக்கையுடன் முயற்சித்து,
எடையை குறைக்க எனது வாழ்த்துக்கள்

அன்புடன்
செல்வி
பெற்ற மகளின் வாழ்க்கையை விட

பெற்ற மகளின் வாழ்க்கையை விட பணமே பெரிது என்று இருக்கும் இவர் போன்ற தாய்க்கு உதவுவதைவிட உதவாமல் இருப்பது எவ்வளவோ மேல். பெற்ற தாய் தந்தையரை தவிக்க விடுபவர்களும் சிறந்த பிள்ளைகளாக இருக்க முடியாது, பெற்ற பிள்ளைகளின் நல்ல வாழ்க்கையை பார்த்து சந்தோஷப்படாதவர்களும் சிறந்த பெற்றோராக இருக்க முடியாது.தாய் தந்தையர் ஒரு பெண்ணை 20 வருடமோ 30 வருடமோ வைத்து பார்ப்பார்கள். ஆனால் திருமணம் முடித்தவுடன் அவர்களை வாழ்நாள் முழுவதும் வைத்து பார்க்கபோவது கட்டிய கணவன் தான். அதிலும் கணவன் அன்பை பொழிபவனாக வாய்த்துவிட்டால் அவளை போன்ற பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது. அந்த விஷயத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தோழி வ................. அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். நல்ல கணவர் நல்ல மாமியார் கிடைத்துள்ளனர். அவர் அவருடைய வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்வது நலம். உங்களை உங்களுடைய தாய்க்கு உதவ வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் உதவி செய்துகொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த பாசமும் பற்றும் உங்கள் தாய்க்கும் இருந்திருந்தால் இவ்வளவு நாளும் உங்களை பண உதவி பண்ணவிட்டிருக்க மாட்டார். ஒரு நல்ல தாய் தான் எவ்வளவு தான் கஷ்டத்தை அனுபவித்தாலும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார். நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் செல்வி மேடம்

டியர் செல்வி உங்ககிட்ட வேலை வாய்ப்பு,படிப்பு சம்பந்தமான கேள்வி கேட்கலாமா?எனக்கு MT(Medical Transcript) படிக்க ஆசை அது வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் ஆன்லைனில் கற்க ஏதாவது Suggestion சொல்ல முடியுமா?

அன்பான செல்வி !


ஒங்க போட்டோ பாத்தேன்.நீங்க ரொம்ப அழகாருக்கேள்.எல்லாருக்கும் பொறுமையா தெளிவா பதில் சொல்றேள்.ஒங்கள நேக்கு ரொம்ப புடிச்சுருக்கு

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

weight reduce

எடை குறைக்க

தினமும் பிராணயாமா செய்யுங்கள்
1. வலது பக்க மூக்கின் துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுத்து இடது புறமாக விடவும்.

2. இடது பக்கம் மூச்சை இழுத்து வலது புறம் விடவும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்ய வேண்டும். 10ல் இருந்து 20 எண்ணிக்கை செய்யலாம்.

3. வயிற்றை உள்ளுக்கு இழுத்து மூச்சை வெளி விடவும். இந்த முறையில் மெதுவாக ஆர்ம்பித்து வேகம் அதிகரிக்கவும். 10 நிமிடத்தில் 30 மணி வரை செய்யலாம்
இதை தினமும் செய்யவேண்டும். காலை மாலை இரு வேளை செய்யவும்.

குறிப்பு

பிராணயாமா மூச்சி பயிற்சி வெறும் வயிற்றில் பழகவும். யோகா ஆசிரியரிடம் கற்று கொள்ளுங்கல் ( பிராணயாமா மூலமாகவே உடல் எடையை நன்றாக குறைத்து விடலாம்).

weight reduce

எடை குறைக்க

1. தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜுசுடன் தேன் கலந்து அருந்தவும்.

2. வாரம் ஒருமுறை பாலில் 10 பல் பூண்டு வேகவைத்து இரண்டையும் சேர்த்து சாப்பிடவும்
.
3. தினமும் ஆலிவ் எண்ணைய் உடல் முழுவதும் தேயித்து குளிக்கவும்.

4. இரவு உணவு இட்லி, கேழ்வரகு புட்டு போன்ற ஆவியில் வேகவைத்த உணவு எடுக்கவும்.
(இரவில் எண்ணை மற்றும் மசாலா உணவுகள் வேண்டாம்).

Under eye

I'm working in software industries. so my eyes get black ring around eye. Its looks very bad, So pls give me simple exercise for reducing that also give me simple exercise for reducing stomach

eatai kuraikka

pall, muttai sappituvathai kuraikkaum

உதவி

என்னக்கு இதில் எப்படி சந்தேககேள்வியை கேட்பது என்று தெரிய வில்லை,எப்படி கேட்பது???

என் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தது இல்லை,அண்ணல் 4 மாதமாக பருக்கள் இருக்கிறது,இப்பொழுது பருக்கள் போக ஆரம்பித்ததும் பனி நாளில் வருவது போல் முகத்தில் தோல் உரிகிறது,இதை எப்பட சரி செய்வது சொல்லுங்கள்....

Weight Loss

Hi ,

Have a strict diets like Green Salads for lunch & Brown or Wheet bread for dinner. Avoid taking oily food and Rich carbohyterate foods. First dont have the mind set that you are fat, you cannot walk etc etc.... You dont have to walk everyday for an hour, rather you can just start with 5 mins everyday and gradually you can increase the time, so that your body will adapt to it easily.

Regards,
Vidhya

Weight loss around your tummy

Hi Gowri,

Try to do push ups, i know it is very hard to do, but start with 5 times a day then gradually increase it. Make sure you do the push ups when your stomach is empty.

Regards,
Vidhya