கறிவேப்பிலை குழம்பு

தேதி: July 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

 

கறிவேப்பிலை - ஒரு கப்
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
மிளகு - 2 தேக்கரண்டி
தேங்காய் - சிறிது [விரும்பினால்]
புளி - சின்ன எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - விரும்பினால்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்


 

மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
இதே கடாயில் கறிவேப்பிலையும் வறுத்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
விரும்பினால் கடைசியில் தேங்காய் அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi vani ,

i wrote thiis recipe .

i am going to India for 1 month .

i will do this there .

i am sure , it will be nice .

thanks for healthy recipe,

bye bye ,
priya.

பிரியா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் கறிவேப்பிலை குழம்பு செய்து பார்த்தேன் . ரொம்ப நன்றாக இருந்தது

வனி கறிவேப்பில்லை பொடிதான் செய்வேன் ஆனாகுழப்பு வித்யாசமாகதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன் செய்துட்டு சொல்றேண்டா