second pregnancy,help me friends.

என் மகன் 3 ஆண்டுகளுக்கு முன் சிசேரியன் மூலமாக பிறந்தான். இப்போது நான் 4 மாதம் conceive ஆக உள்ளேன். ஒரு வாரமாக சில சமயம் படுக்கும் போதும், எழும் போதும் c-section scar உள்ள இடத்தில் சுருக்,சுருக் என்று குத்துகிறது. இது நார்மல் தானா? இல்லை உடனே டாக்டரை அணுக வேண்டுமா? எனக்கு 10 நாட்கள் கழித்து தான் doctor's appointment உள்ளது. தோழிகள் பதில் போடவும்.please.

ஹர்ஷா அவர்களுக்கு நான் கேள்விபட்ட வரைக்கும் இது நார்மலா முதல் குழந்தை சிசேரியன் பன்னினவங்களுக்கு இருக்கும்.ஆனால் எல்லாருக்கும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை.எனது உறவினர் ஒருவருக்கு சிசேரியன் பன்னிதான் குழந்தை பிறந்தது.அவங்க சொல்லி நான் கேட்டிருக்கேன்.குழந்தை வளர வளர உடல் தசைகள் விரிவடையும்.அதனால் அப்படி இருக்கும்.நீங்கள் உங்க மருத்துவரிடம் கேட்பதே சிறந்தது.பயப்பட வேண்டாம்.சந்தோசமாக இருங்கள்.குழந்தை நல்லபடியாக பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

hello shahubanath,
யாருமே பதிவு போடவில்லையே என்று இருந்தேன். உங்கள் பதிவுக்கு நன்றி.
இது நார்மல் தான் என்று தெரிந்தால் பயப்படாமல் இருக்கலாம். அதற்காக தான் இந்த கேள்வியை கேட்டேன்.உங்கள் பதில் எனக்கு கொஞ்சம் தைரியம் கொடுக்கிறது. அடுத்த முறை டாக்டரிடம் செல்லும் போது இதை பற்றி கேட்கிறேன். உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

மேலும் சில பதிவுகள்