Kavithai Poonga

குற்ற உணர்வு

வீட்டின் எதிரேயுள்ள
புறம்போக்கு நில
குடிசை வீட்டு சிறுவர்களின்
ஒரு மாலைநேர விளையாட்டு நேரம்....

அவர்களின்
டயர் உருட்டும் விளையாட்டின்
உச்சகட்ட போட்டி......

இரு சட்டை இல்லா சிறுவர்கள்
குச்சி கொண்டு
டயர் உருட்டி ஓட...

ஓர் அழுக்கு சிறுமி
ஆர்ப்பாட்டமாய் குதித்து
அவள் முத்து அண்ணனை
உற்சாகப்படுத்த....

இறுதியாய் வந்த
முத்து அண்ணாவின்
தோல்வியில்
சிறுமியின் வெடித்த அழுகை
பார்த்து விட்டு...

கணினியில் விளையாடும்
என் ஒத்தை பிள்ளை கண்டு
எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு!!!!

- ஆனந்தி

விட்டு விடு என்னவளை..

நீ நெற்றியில் முத்தமிட்டு
காதோரம் குறுகுறுத்து
மெதுமெதுவாய்
கண்ணிமை தொடுகின்றாய்...

கன்னக்கதுப்புகளில்
பதுங்கி பதுங்கி
உதட்டின் வெப்பத்தை
உறிஞ்சி உறிஞ்சி எடுக்கின்றாய்..

வேகத்தடை இல்லா மிடுக்கில்
உருண்டு உருண்டு ஓடி
ஒளிந்து கொள்ள
இடம் தேடுகிறாய்...

கிடைத்து விட்ட
மத மதர்ப்பில்
இன்னும் இன்னுமாய்
இறுக்கிக்கொள்கிறாய்...

ஜெயித்து விட்ட
ஆளுமையில்
ரகசியமாய் மார்பில்
படர்ந்து கொள்கிறாய்...

தாபம் அடங்காது
இடுப்பின் விளிம்பில்
மையலிட்டு இதமாய்
ஊடுருவி..
பிடிக்க முடியாத
ஜீவ நதியானாய்..

இரகசிய லயிப்பில்
இருக்கும்...
இனிய மழை நீரே ...
விட்டுவிடேன்
என்னவளை...!!!!

- ஆனந்தி

 
பூத்ததாம் பூ..

அவளின்
வேர்வை துளியொன்று ..
சுற்று(ம்)பயணத்தில்-அவள்
சுண்டுவிரல் பட்டு
மண்ணில் விழுந்ததாம்..
விழுந்த இடத்தில்
விதை இருந்தது போலும்..
அட...
உடனே பூத்ததாம் பூ..

- ஆனந்தி

 


4.272725
(22 votes)
Your rating: None






ஆனந்தி மேடம்
உங்க கவிதைகள் மூன்றுமே அருமை. குற்ற உணர்வு கவிதை எத்தனை முறை படித்தாலும் சளிக்காதது. இன்னும் பல கவிதைகள் தந்திட வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆனந்தி ...

அட்டகாசம் உங்களின் கவிதை..ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.. விட்டுவிடு என்னவளை சான்ஸே இல்ல.. குற்ற உணர்வு அருமை.. பூ கவிதையும்..
ரொம்ப நல்ல கவிதைங்க... எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை..;-)

Ramya Karthick B-)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

ஆனந்தி மேடம்,
கவிதை ரொம்ப அற்புதம்
மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்

அன்புடன்,
கவிதா

ஆனந்தி மேடம்.கவிதைகள் மூன்றும் முத்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்புள்ள தோழி ஆமினாக்கு..நன்றிகள் பல..நேற்று நீங்கள் இருந்த மனநிலை இன்று எனக்கு..பாராட்டுக்கள் பலசமயங்களில் போகும் தடத்தை செம்மை செய்யும்..அப்புறம் ஆமினா...உங்கள் ஒரு கதையில் ஒரு பாவப்பட்ட மருமகளாக ஆனந்தி வந்துச்சு..அடுத்த கதையில் ஆனந்திய வில்லி மாமியார் ஆக்கிடுங்க அல்லது ஆனந்திய வில்லி மருமகள் ஆக்கிடுங்க.."எத்தன நாள் தான் நல்லவ மாதிரி நடிக்கிறது...." ஓகே வா தங்கமே..

Madurai Always Rocks...

நன்றி ரம்யா..அறுசுவையில் தங்கள் ஊக்கங்கள் நான் மட்டும் அல்லாது ..நிறைய தோழர்,தோழியர் உணரந்திருப்பர்..அனைவர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்

Madurai Always Rocks...

மிக்க நன்றி கவிதா

Madurai Always Rocks...

தோழர் ஷேக் அவர்களுக்கு...தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி..

Madurai Always Rocks...

அறுசுவையின் கவிதை பூங்கா பகுதியில் உங்களின் முதல் படைப்பாக அழகான கவிதையோடு வந்து இருக்கீங்க. வாழ்த்துக்கள் ஆனந்தி நிறைய கவிதைகள் எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ளனும். குற்ற உணர்வு கவிதை சூப்பர்.

நன்றி வினுஜா..

Madurai Always Rocks...

அன்பு ஆனந்தி,

கவிதைகள் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

இங்கே இருக்கிற கவிதைகள் தவிர, 2-3 வாரங்களுக்கு முன்னால் இன்னும் ஒரு கவிதை வேற ஒரு இழையில் பதிவு செய்திருந்தீங்களா? படித்த மாதிரி ஒரு நினைவு.

இன்னும் நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துகள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி சீதா மேடம்...நீங்க சரியா கவனிச்சுருக்கிங்க..அது நான் அறுசுவையில் சேர்ந்த அன்று நிகழ்ந்தது..திருவிழாவில் தொலஞ்சு போன மனநிலையில் இருந்தேன் அப்போ..எங்க,எப்படி கவிதை அனுப்பனும் தெரியலே..அதான் ஏதோ ஒரு இழைக்கு அனுப்பிருக்கேன் கைப்புள்ள கணக்கா...இப்போ கொஞ்சம் அறுசுவை அமைப்பு புரிகிறது...மீண்டும் நன்றி மேடம்...

Madurai Always Rocks...

மூன்று கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்க. அழகா எழுதி இருக்கீங்க. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

அன்புடன்,
இஷானி

மூன்றுமே..முத்தான கவிதைகள்.....

அவ்வளவு அருமை....

படிக்க மிக இனிமையாக உள்ளது.......

மேலும் மேலும் எழுதி...ஆனந்தபடுத்துங்கள் எங்களை

வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இஷானிக்கு...ஒரு கவிதையே பாராட்டும்போது சிலிர்க்கத்தான் செய்கிறது..நன்றி கவிதாயினி இஷானி மேடம்..

Madurai Always Rocks...

இளவரசி..!!!
இதம்..என்
இனிப்பான..
நன்றிகள்..!!

Madurai Always Rocks...

கவிஞர் ஆனந்தி அவர்களே
குற்ற உனர்வு படித்தபின் எனக்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன்.
நாம் தொலைத்தவை
துயில் எழும் போது கூவும் குயிலோசை,விடியற்காலை சங்கீதம் பாடும் பறவைகள்.எனது தோட்டத்தின் மரங்களில்,சிட்டுகளின் தேன் சிட்டுகளின் கூடுகள், எச்சங்களை உருட்டும் வண்டுகள், சிற்றாறுகளின் சலசலப்புக்கள்,அதில் துள்ளும் மீன்கள்,நாம் சிறுவர்களாய் பாரத்து இரசித்த இவைகளை நமது குழந்தைகள் எப்போது காண முடியும் இதில் ஆறு தவிர மற்றவை எல்லாம் விவசாயத்துக்குஅடித்த பூச்சி மருந்துகளால் அழிந்தவை சகோதரி ஆனந்தி. உங்கள் கவிதைகள் எனது கடந்த காலத்திற்குள் செல்ல வைத்தன.உங்களுக்கு என் நன்றி.
WHAT NEXT

அன்புடன்
THAVAM

மூன்று கவிதை களும் முத்துப்போல பிரகாசிக்கிரன.
அருமையானகவிதை. எதைப்பாராட்டுவது எதை விடுவது?
மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

நன்றி கோமு மாமி

Madurai Always Rocks...

ஆனந்தி,
புத்தகங்கள் பகுதியில் என்னுடன் பேசிய ஆனந்தியா நீங்கள்? இல்லாவிட்டாலும் பரவாவில்லை.உங்கள் கவிதைகளை படிக்கக்கூடிய சந்தர்ப்பம் இன்றே எனக்கு கிடைத்தது.அனைத்தும் மிக அருமை .எப்படிங்க இப்படி எல்லாம்.கலக்குறிங்க.இன்றைய யதர்த்தத்தை குற்ற உணர்வில் மிக அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.என் மகனை பார்க்கும்போது இது உறைக்கிறது.குழந்தைகள் கூட செலவழிக்கும் நேரம் குறைவு எனும்போது மனதிற்கு கஷ்டமாகவே இருக்கிறது.keep it up ......

அன்புடன் அனு.

ஆமாம் டாக்டர் அனு..அதே ஆனந்தி தான்..என்ன வைரஸ்,எறும்பு,கொசு எதுவும் இன்னும் புடிச்சு போடலையா?நன்றி டாக்டர் அனுஷா..I am gr8 pleasure 4 ur Ncouragement N Comments ..Thank U...

Madurai Always Rocks...

டியர் ஆனந்தி,
உங்க கவிதை அதாங்க அந்த
விட்டுவிடு என்னவளை
படிச்சேன்...
RUM மயமா இருந்துச்சு
சாரி RUMமியமா இருந்துச்சு
ச்சே..
ரம்மியமா இருந்துச்சுனு சொன்னேங்க
அது ராவோடு ராவா
இருந்து எழுதினதா?
அத படிக்கும்போது
இந்த அருசுவைலையே
தட்ப வெப்ப நிலையில்
கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கனும்
இல்லையா?
எதோ பாக்யராஜ் முருங்கைக்காய்
யாவாரம் பாத்த மாதிரி ஒரு ஞாபகம்.
ஹும்..மழைனு சொன்னதால் பிழைத்தீர்கள்
சாமார்த்தியமான கவிதை
எப்படியெல்லாம் Escape ஆகுறாங்ஙெய்யா!
இப்படியும் ஒரு வண்முறை, ம்...நடத்துங்க.
அது சரி எழுதிட்டு அப்படியே ஒரத்துலேயே
இருந்தா எப்படி? அப்படியே அம்மா மேடம்னு
வரிசையா வாக்கு சேகரிக்க போகலையா?
அட மச மசனு நிக்காம புறப்படுங்க.
இல்லேனா தமிழரசிய கூப்பிட்டு
வாழ்த்த சொல்லிருவேன் b careful
அது சரி நல்ல கவிதைக்கு
எதுக்கு கள்ள ஓட்டு என்ன? ம்?

b Cheerful!! Ananthi
என்றும்: தோழமையுடன்
ஆஷிக்

ஆனந்தி, உங்க கவிதை சூப்பரோ சூப்பர்பா. எனக்கு உங்களை பார்த்தா பொறாமையா இருக்குப்பா. கதை யார் வேண்ணாலும் எழுதலாம். ஆனா, கவிதை ஒரு சிலரால மட்டும் தான் எழுத முடியும். நீங்கலாம் அதுல ஒரு சிலர்தான். தொடரட்டும் உங்கள் கவிதைப் பணி :) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

சிறப்பான சிந்தனா சக்தி! எனவே தோண்ட தோண்ட புதையலாக கவிதை ஊற்று! தங்களது கவிதை எழுதும் திறன் மேலும் வளம் பெற இறைவன் அருள்புரிவாராக!