மஷ்ரூம் குழம்பு

தேதி: July 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

1. மஷ்ரூம் - 200 கிராம்
2. கறிவேப்பிலை - 200 கிராம்
3. புளி - எலுமிச்சை அளவு
4. உளுந்து - 1 மேஜைக்கரண்டி
5. மிளகு - 10
6. மிளகாய் வற்றல் - 10
7. தக்காளி - 1/2
8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
9. உப்பு
10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - சிறிது
12. கடுகு - 1/4 தேக்கரண்டி


 

எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகு, பாதி வெந்தயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து மிக்சியில் போட்டு தேவைக்கு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்த புளி கரைசல், மஷ்ரூம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசம் போன பின் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

I have gone through the recipe. It is not mentioned what to do with mushroom.
How to wash? how to be cooked? and when to add with the kuzhambu? etc.

இந்திரா... மன்னிக்க வேண்டும். கவனிக்கவில்லை. இப்போது திருத்திட்டேன். பார்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க. :)

சுத்தம் செய்வது வழக்கம் போல் தான்... நன்றாக கழுவி, அடி காம்பை நீக்கி விட்டு நறுக்குங்க. வேக வைப்பது தனியா வேக வைக்க தேவை இல்லை. சாதாரணமாக புளி கரைசலில் சேர்த்தால் கூட 10 நிமிடத்தில் வெந்துடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா