அன்னையர் தினம் - வாணி - அறுசுவை கதை பகுதி - 15593 - பக்கம் 2

Stories

அன்னையர் தினம் - வாணி

காலை 6:30 மணிக்கு கண் விழித்தார் பரிமளா. கண்கள் தானாகவே பக்கத்து கட்டில் பக்கம் தாவியது. அங்கு ஜெனிபஃரைக் காணவில்லை. வழக்கமாக 7:30 தாண்டியும் எழும்பாமல் கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும் ஜெனிஃபர் எங்கே என்று கண்கள் தேடின.

ஜெனிபஃர் மட்டுமல்ல மேரி, இஸபெல்லா, ரோஸ், ஆன் என்று யாருமே கண்களில் தட்டுப்படவேயில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை.. எங்கே போயிருப்பார்கள் என்று வினா எழுந்தது.

அப்போது அங்கே வந்த ஸ்டெல்லா, "மேரி குளிக்கிறார்" என்று தகவல் சொன்னார். மேரி வாரத்தில் ஒரு நாள் குளிப்பதே அதிசயம். வெள்ளிக்கிழமை தானே மேரி குளித்தார். இன்று மீண்டும் ஏன் குளிக்கிறார் என்று கேள்வி எழுந்தது.

"இன்று அன்னையர் தினம். அதனால்தான் இன்று மேரி குளிக்கிறார்", என்று மேலதிக தகவலும், பரிமளத்தின் பல கேள்விகளுக்கான விடையும் ஒரே நேரத்தில் கிடைத்தன.

"ஓ! அப்படியா! தகவலுக்கு மிக்க நன்றி" என்று சொல்லி விட்டு நகர்ந்தார் பரிமளா.

"பரி, ஏன் உன்னைப் பார்க்க யாரும் வரமாட்டார்களா?" என்று வினவினார் ஸ்டெல்லா.

"தெரியாது" என்றுவிட்டு அறையில் நுழைந்து கொண்டார் பரிமளா.

வருடத்தில் ஒரு நாள் வரும் அன்னையர் தினத்திற்காக ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறார்கள் என்று தோன்றியது பரிமளத்திற்கு. மகன், மருமகள், குறிப்பாக பேரப்பிள்ளைகள் இன்று தன்னைப் பார்க்க வருவார்களா என்று மனதின் ஓரத்தில் ஆசை எட்டிப்பார்த்தது.

பரிமளா இந்த முதியோர் காப்பகத்திற்கு வந்து 1 1/2 வருடங்களாகிவிட்டது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. எல்லோரும் வெள்ளைத் தோலினர் பரிமளாவைத் தவிர. சாப்பாடு, கலாச்சாரம் என்று நிறையவே வித்தியாசங்கள் இருந்தாலும் பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள் என்று பொதுவான அறிமுகம் இருந்தது. இந்த அறிமுகம் எல்லோரையும் நெருங்கி, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கச் செய்தது. நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றது.

ஊரில் இருக்கும் வரை பரிமளா பெரிய கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகள். கணவரின் பெற்றோர்களை நன்கு கவனித்து கொண்டார். கணவரின் தம்பி, தங்கைகள் எல்லோருக்கும் தாய் போல இருந்து படிக்க வைத்தார். எல்லோருக்கும் திருமணம், சீர் என்று சிறப்பாகவே செய்து முடித்தார். கணவரின் பெற்றோரும் பரிமளாவை வாயார வாழ்த்தியபடியே இருந்தார்கள்.

ஒரே மகன் ப்ரவீன். திருமணம் ஆனதும் ப்ரவீன் வெளிநாடு வந்துவிட்டான். நல்ல வேலை, சம்பளம் என்று சொன்னாலும் பரிமளாவிற்கு மகனை பிரிந்திருக்க கஷ்டமாக இருந்தது. கணவரின் உடன்பிறப்புகள் எல்லோரும் திருமணமானது பிரிந்து சென்று விட்டார்கள். பரிமளாவிற்கு ஆதரவாக இருந்த கணவரும் 12 வருடங்களின் முன்பு காலமாகி விட்டார். பரிமளா ஆதரவில்லாமல் மகனுடன் வந்து விட்டார்.

மருமகளுக்கு பிரசவங்கள் கவனித்து, பேரப்பிள்ளைகளை வளர்த்து, சமையல் வேலைகள் என்று பம்பரமாக சுழன்று வேலைகள் செய்தார். தொடக்கத்தில் அன்பாகவே இருந்தார் மருமகள். முதுமையின் வாசலை அடைந்த போது மருமகள் தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுவார். பரிமளாவை அணைத்துக் கொள்ள மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ நேரம் இருக்கவில்லை. முதியோர் காப்பகம் தான் சரியான தீர்வு என்றார்கள். பரிமளா எவ்வளவோ கெஞ்சியும் அவர்களின் மனம் இரங்கவேயில்லை. பேரப்பிள்ளைகளும் ஓரளவிற்கு வளர்ந்து விட்டபடியால் இவரின் தயவு அவர்களுக்கு தேவைப்படவில்லை.

மணி 9 யை நெருங்கியதும் காப்பகமே களைகட்டியது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று எல்லோருமே பெரிய புன்னகையுடன் வந்தார்கள். கட்டியணைத்து, முத்தங்கள் பரிமாறிக் கொண்டார்கள். எல்லாமே செயற்கையாகவே தோன்றியது பரிமளத்திற்கு.

வரவேற்பறை எங்கும் பூக்கள் இரைந்து கிடந்தன. ஊரில் இருக்கும் வரை பெரிய தோட்டத்தில் பல விதமான பூச்செடிகள் வைத்து, நீர் ஊற்றி, அவை செழித்து வளரும் போது மகிழ்ச்சி அடைவார். பூக்கள் பறிப்பதற்கல்ல என்று செடிகளிலே விட்டு அழகு பார்த்தவர். காப்பகத்தின் தரையெங்கும் இரைந்து கிடந்த பூக்களைப் பார்த்து ஆதங்கப்பட்டார்.

குளித்து விட்டு வரவேற்பறையில் போய் அமர்ந்து கொண்டார். காப்பகத்தில் பெரும்பாலனவர்கள் ஊர் சுற்ற கிளம்பிவிட்டார்கள். அவர்கள் வந்து சேர இரவாகி விடும். பரிமளா மணியைப் பார்ப்பதும், வாசலைப் பார்ப்பதுமாக இருந்தார். மகன் இன்றாவது வருவானா என்று கேள்வி மட்டும் மனமெங்கும் வியாப்பித்து இருந்தது.

நேரம் மாலை 6 மணியை நெருங்கியது. ஆனால், பரிமளாவை பார்க்க யாருமே வரவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இரவு எட்டு மணியானது. பார்வையாளர்கள் நேரம் முடிவடையும் நேரம். பரிமளா வெறுப்புடன் எழுந்து கொண்டார்.

அறையை நோக்கி நடக்க எத்தனித்தவரின் கால்களில் ஏதோ மிதிபட்டது. குனிந்து பார்த்தார். கீழே அழகிய ஒற்றை ரோஜா. பூச்செண்டிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்து கிடந்தது. வரவேற்பறை எங்கும் இரைந்து கிடந்த பூக்களை சேகரித்தார். அங்கிருந்த பெரிய கண்ணாடிச் சாடியில் தண்ணீரை நிரப்பி, பூக்களை அழகாக அலங்கரித்தார். பூக்கள் இவரைப் பார்த்து புன்னகைத்து நன்றி சொன்னதைப் போல இருந்தது. பதிலுக்கு பரிமளாவும் புன்னகைத்தார். மனது நிறைவாக இருந்தது.

மதியம் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்தது. டைனிங் ஹாலை நோக்கி விரைந்தார்.




நன்றி!

கோமு, மிக்க நன்றிங்க. நேரம் கிடைக்கும் போது கட்டாயம் எழுதுகிறேன். நீங்களும் கலக்கிறீங்க.

வனி, மிகவும் நன்றி. உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகமாக இருக்கு.

ஷேக் அண்ணாச்சி, என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? மிகவும் சந்தோஷம். நீங்களும் எல்லா ஏரியாவிலும் கலக்கிறீங்க.
மிக்க நன்றி.

கவிதா, நல்ல கொள்கை. மனம் இருப்பவர்கள் கட்டாயம் உதவி செய்வார்கள். இவர்களுக்கு பணத் தேவையை விட ஆறுதல் வார்த்தைகளே அதிகம் தேவை.
மிக்க நன்றி.

அமீனா, உண்மைதான். இங்கு வெளிநாட்டில் நிறைய முதியோர் காப்பகங்கள் இருக்கு. நல்லாவே கவனித்தாலும் பிள்ளைகளின் அருகில் இருப்பது போல வராது .
மிக்க நன்றி.

இளவரசி, மிக்க நன்றி. உற்சாகமான பின்னுட்டம்.

வினோஜா, மிக்க நன்றி.

நன்றி!

கௌரிலஷ்மி, உண்மைதான். பெற்றோர் தங்களின் பிற்காலத்திற்கு சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகள் பார்த்தாலும் பெற்றோர்களிடம் பணம் இருந்தால் நல்லது.
மிக்க நன்றி.

ரம்யா, மிக்க நன்றி. மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் நீங்களும், ஆமினாவும், வனியும் சிறப்பாக செய்கிறீர்கள். நானும் நினைப்பதுண்டு. ஆனால், பிள்ளைகளோடு நேரம் போய் விடும்.

பவித்ரா, மிகவும் நன்றி.

வாணி

அன்பு வாணி,

கதையும் அருமை. பெற்றோர்கிட்ட பணம் இருக்கணும்னு நீங்க சொல்லியிருப்பதும் உண்மை. பிள்ளைகள் எந்த மனக் குழப்பமும் இல்லாமல் பிரியத்துடன் பெத்தவங்களைப் பாத்துகிட்டாலும், நாம் அவங்களுக்கு சுமையாக இருக்கோமே என்ற எண்ணமே பெற்றவர்களை தடுமாற்றத்துக்கு உள்ளாக்குகிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வானதி

கதை மிகவும் நன்றாக உள்ளது. எப்போதும்போல் சிறந்த எழுத்து நடை. உங்களின் நிறைய கதைகள் விரும்பிப் படிப்பதுண்டு. தொடர்ந்து எழத வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

வாணி,

அன்னையர் தினம் கதை நன்றாக இருக்கிறது.

பாராட்டுக்கள்,நன்றி சகோதரி

பாராட்டுக்கள்,நன்றி சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுக்கு.

காலம் கண் போன்றது,
கடமை பொன் போன்றது.

நன்றி!

சீதாலஷ்மி மேடம், பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

இஷானி, மிக்க நன்றி. என் கதைகள் படிதிருக்கிறீர்களா? சந்தோஷம். அமெரிக்காவில் எங்கு இருக்கிறீங்க?

செபா ஆன்டி, மிக்க நன்றி.

பேரின்பராணி, மிக்க நன்றி.

வாணி

GOOD NIGHT 2 USA!


வா...வா...வாணி மற்றும் USA-ல இருக்கறவாளுக்கு GOOD NIGHT!இலா, நேக்கு ஒங்க ஊர் நேரப்படி ஒங்களுக்கு GOOD NIGHT சொல்ல ஆசையா இருக்கு.எப்போன்னு சொல்லுங்கோளேன்....... ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ளிளிளிளிளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

பி.கு:
தப்பா அரட்டை 2010ல சொல்லவேண்டியத இங்க சொல்லிட்டேன்........சாரி......

ஒங்க கதைக்கு நான் நாலு ஸ்டார் கொடுத்துருக்கேன் தெரியுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Excellent, touchable story

Excellent, touchable story and i have enjoyed it.

வாணி, கதை

வாணி, கதை மிக அருமை.எல்லாரையும் சிந்திக்கவைக்கும் கருத்து.வாழ்த்துக்கள்.