கடலைப் பருப்பு பொடிமாஸ்

தேதி: July 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கடலைப் பருப்பு - 1 கப்
2. சர்க்கரை - தேவைக்கு
3. ஏலக்காய் - 3
4. தேங்காய் துருவல் - 1/2 கப்
5. எண்ணெய், நெய் - தேவைக்கு
6. முந்திரி - தேவைக்கு


 

தேங்காய் துருவலை வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்.
கடலைப் பருப்பை ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
மாவை தோசை கல்லில் அடையாக தட்டி எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடித்து எடுக்கவும்.
கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து தனியாக எடுக்கவும்.
இதே கடாயில் கடலைப் பருப்பு பொடியை கொட்டி கிளறவும்.
பொடி நிறம் சிவக்க வந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், முந்திரி, நெய், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கலந்து எடுக்கவும்.


விரும்பினால் சர்க்கரை ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடித்து சேர்க்கலாம். இன்னும் நனறாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
எளிமையான இனிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு கடலைப்பருப்புல வடை பண்ணிட்டு இந்த ஸ்வீட்டும் பண்ணப்போறேன்.
வனி சின்னதிருத்தம் மடலைப் பருப்பு என்று இருக்கே. கவனிக்கவில்லையா?

Don't Worry Be Happy.

ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி. நீங்க சொன்ன பிறகு தேடி பிடிச்சுட்டேன் ;). திருத்திட்டேன். செய்துட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா