masoor dal recipes..

hi

i picked masoor dal for toor dal thinking they are both same. can i make sambar with masoor dal? give me some recipes with masoor dal. can i cook, mash and give masoor dal to my 15 months old boy.

மசூர் தாலில் சாம்பாரும் செய்யமுடியும். துவரம் பருப்பை விட
அளவில் கொஞ்ச்ம் கூடப்போடனும். ஹோல் மசூர் தால் அதாவது
தோலுடன் இருக்கும் முழு மசூர். குழந்தைகள் வளர்ச்சிக்கு மிகவும்
நல்லது.மசூரை குக்கரில் நன்கு குழைய வேக விடவும். ஒரு கடாயில்
ஆயில் விட்டு பொடிதாக அறிந்த வெங்காயம், தக்காளி, 2பச்சை
மிளகா, 2 பூண்டுப்பல் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் பாதி
கேரட்டை துருவிப்போட்டு 1 நிமிடம் வதக்கவும்.கரம் மசாலா வாசனை
பிடிக்குமென்றால் ஒரேஒரு, டீஸ்பூன் கரம் ம்சாலா பொடி, ஒரு டீஸ்பூன்
மஞ்ச்ள் பொடி ஒரு பிஞ்ச் மிளகுபொடி உப்பு, ஒருஸ்பூன் ஜீனியும் போட்டு
வெந்து வைத்திருக்கும் தாலையும் கொட்டி ஒர்கொதி வந்ததும் இறக்கி
கொத்துமல்ல தழைகளை மேலாக தூவி அலங்கரிக்கவும்.

thank you mrs.komu..

எனக்கும் இதை கடையில் பார்க்கும்போது கலரை பார்த்து வாங்க ஆசையாக இருக்கும்.

ஆனால் இதுவரை முயற்சிக்கவில்லை
இதுவும் துவரம்பருப்பை போல் சுவை கொடுக்குமா?அதைவிட நல்லா இருக்குமா?
என் யாரும் சொல்லுங்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்த மசூர் தால் துவரம் பருப்பைப் போல சுவை கொடுக்கரதில்லை.
ஆனா டேஸ்ட் டிபரெண்டா நன்றாகவே இருக்கு. சாம்பாரில் போட்டு
செய்யும்போது திக்னெஸ் இருக்காது. அதனாலதான் கொஜ்சம் கூடப் போடனும் என்று சொல்லி இருந்தேன். வட நாட்டில் சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தாலும்
கூட ஆஹா, சூப்பர், ரொம்ப நன்னா இருக்குன்னு தான் சொல்வார்கள் .ஆனா
நாமெல்லாம் அப்படி இல்லையே நமக்கெல்லாம் டேஸ்ட் பர்ஃபெக்டா இருகனுமே.
துவரம் பருப்பை விட இது விலையும் சற்று மலிவுதான்..

தகவலுக்கு நன்றி கோமு..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மைசூர் தால் பற்றி எனக்கும் ஒரு சந்தேகம் புது இழை அரம்பிப்பதற்க்கு இந்த இழையிலே கேள்வி கேக்கலாம்மென்றுதான் வந்தேன் மசூர்தாலில் சாம்பாரைத் தவிர வேறு என்னென்ன சமையல்கள் செய்யலாம் மைசூர்தாலில் என்ன சத்துக்கள் உள்ளது இதில் கலோரி குறைவாக உள்ளதா? தோழிகள் என் சந்தேகத்தை தீர்க்கவும்.

அன்புடன்
நித்யா

நித்யா மைசூர் பருப்பு சாம்பார், ரசம் இதுமட்டும் தான் எனக்கு தெரியும். மைசூர்தால் ரெசிப்பி கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் கொடுத்து இருப்பாங்க. மைசூர்தால் பி வைட்டமின்கள், தாதுக்கள், பாஸ்பரஸ், இரும்பு, புரதச்சத்து முக்கியமான சத்துக்கள் இந்த பருப்புல இருக்கு. கலோரியும் குறைவுதான். சீக்கிரமா ஜீரணமாயிடுமாம். எனக்கு தெரிந்த தகவல். மற்ற தோழிகள் உங்கள் சந்தேகத்தை தீர்பார்கள்.
நித்யா என்னால இந்த இரண்டு ரெசிப்பி மட்டும்தான் கிடைத்தது.பிறகு உங்களுக்கு தேடி தருகிறேன்.
http://www.arusuvai.com/tamil/node/6096
http://www.arusuvai.com/tamil/node/7552

வினோஜா பதிலுக்கு நன்றி நானும் தேடுகின்றேன் சத்துக்கள் நிறைய இருப்பதால் கண்டிப்பா உபயோகிக்கலாம்? நன்றி வினோ

அன்புடன்
நித்யா

பருப்பு இல்லாமல் ஒரு சமையலா? பருப்பு என்றால் எங்கள் பக்கம் மைசூர்ப்பருப்பு மட்டும் தான். துவரம்பருப்பு சமைப்பதே இல்லை. எப்படி சமைத்தாலும் சுவைதான். சாதாரணமாக சமைக்கிறது போல் சமைக்கலாம்.

சுவை பற்றிச் சொல்வதானால்... எல்லாம் பழக்கதோஷம்தான் என்பேன். ;) எங்கள் வீட்டில் துவரம்பருப்பு சமைத்தால் நான் தனியாகத் தான் சாப்பிட வேண்டும். ;)

மைசூர்ப்பருப்பில் குழம்பு, வெள்ளைக்கறி (மஞ்சள்தூள் போட்டு) தான் அடிக்கடி சமைப்போம். பருப்பு ரசம், சாம்பார் சுவையாக இருக்கும்.

சொதி - பருப்பு சொதி தனியாகவும் வைக்கலாம். பருப்பு + மாசி, பருப்பு + கிழங்கு, பருப்பு + அவித்த முட்டை சேர்த்து, இப்படி விதம் விதமாகச் சமைக்கலாம். இடியப்பத்துக்கு பருப்புச்சொதி நன்றாக இருக்கும்.

கிழங்கும் பருப்பும் சேர்த்துக் கறி வைக்கலாம். கொஞ்சம் மாசி சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும். பருப்பும் பீர்க்கங்காயும் நன்றாக இருக்கும். கீரை சேர்ப்பதானால், பருப்புக்கறி இறக்கும் முன்னால் பசளி, கங்குன், மணித்தக்காளி இப்படி விரும்பிய கீரை சேர்க்கலாம். என் ஃபேவரிட் கங்குன் + பருப்பு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்