உணவு கொடுக்கும் முறை சரியா தவறா?

அன்னிவருகும் என் அன்பான வணக்கம்,

யாராவது என்னுடைய சந்தேகத்துக்கு பதில் கூறுங்களேன். என் 6 மாத குட்டி குழந்தைக்கு 9 .00 மணிக்கு morning cerelac or raggi பிறகு 11 .00 மணிக்கு பால் பிறகு 1 .00 மணிக்கு afternoon vegetable paste (home preparation )பிறகு 4 .00 மணிக்கு பால் கொடுக்கிறேன் பிறகு office லிருந்து வந்ததும் தாய் பால் கொடுக்கிறேன் பிறகு இறவு ரைஸ் கஞ்சி அம்மா prepare செய்து கொடுத்தது கொடுக்கிறேன். இந்த மாதரி
உணவு கொடுக்கும் முறை சரிதானா?

அனால் என் friend குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது only milk மட்டும் தான் கொடுக்கிறாள் குழந்தை மிகவும் புஷ்டியாக கொழுகொழு என்று வுள்ளது. ப்ளீஸ் யாராவது உங்களுடைய அறிவுரையும் கூறுங்களேன்.
நன்றி
பிரியா.
நலம் பெருக!!! வளம் பெருக!!!!

ரொம்ப தேங்ஸ் பா......

அன்புடன்
மகேஸ்வரி

Hello Amina mam,
என் பையனுக்கு ஒரு வருடம் ஆறு மாதம் முடிந்து eaவது மாதம் ஆரம்பிச்சுருக்கு. அவன் பிறந்தது ல இர்ருந்து ஒழுங்காவ சாப்பிடுவது இல்லை. மிகவும் ஒள்ளிய வ இருக்குக்கான் . டாக்டர் கிட்ட காட்ட அவன் ஆக்டிவ இருக்கான் ல அதுவா போதும் என்று சொல்றாங்க. எனக்கு என் பையனை கொஞ்சமாவது குண்டா பார்க்கணுமுன்னு ஆசை யா இருக்கு. ரம்ப வாண்டாம் கொஞ்சம் குண்டா ஆனா போதும். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க மேடம். ப்ளீஸ்

நித்யா

உங்க குழந்த சாப்பிட வில்லை என்றால் முதல் காரணம் அந்த சாப்பாடில் அவனுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அவனின் சுவை வேருபட்டிருக்கலாம். ஸ்நாக்ஸ் ரொம்ப பிடிக்கும் என்றால் உருளைகிழங்கில் ஆலு பிங்கர்ஸ் செய்து கொடுங்க. வனிதா அக்கா குறிப்புல உருளைகிழங்கு அல்வா எப்படி செய்வது என்று சொல்லியிருப்பாங்க. அது ரொம்ப சத்தானது. பிரட் அல்வா,கேரட் அல்வா செஞ்சு கொடுங்க. வாழைபழ போண்டா செஞ்சா கொழந்த நல்லா சாப்பிடும். முட்டை சோற்றில் மசித்து கொஞ்சமா சீனி போட்டு கொடுத்துபாருங்க. பருப்பு சாதம் ரொம்ப நல்லது. சத்துமாவில் கட்லெட், உருண்டை செய்து கொடுக்கலாம்.

2வது காரணம்
வயிற்றில் பூச்சி இருந்தால் குழந்தை ஒழுங்காக சாப்பிடாது. அந்த டானிக் கொடுத்துற்கீங்களா? இல்லை என்றால் முதலில் அதை கொடுங்க.

அவன் நேரம் எடுத்தாலும் பரவாயில்லை. நீங்கள் சிரிது சிறிதாக உணவினை கொடுங்க. அவனுக்கு பிடித்த கார்ட்டூன் சேனல் போட்டுவிட்டு சுவாரசியமாக அவன் பார்க்கும் நேரத்தில் கொடுக்கலாம்.(என் பையனுக்கு டாம் & செரி இல்லைனா சாப்பிட மாட்டான்)

மேடம்லாம் சொல்லாதீங்க ப்ளீஸ்

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டியர் நித்யா,

என் பையன் 5 வயது முடிந்து விட்டது 13 கிலோ தான் இருக்கான் தினமும் சாப்பாடு கொடுகரதுகுல என்னக்கு போதும் போதும் என்று ஆகி விடும். அமீனா மேடம் சொன்ன மாதிரி டாம் & செரி பார்த்துகொண்டு தான் சாப்பிடுவன். School கு போகும்போது சொல்லவா வேண்டும். எப்படியும் கொஞ்சம் quantity போட்டுகொண்டு 2 hours ஆனாலும் வஊட்டி விட்டு தான் விடுவேன். அப்பொழுது தான் எனக்கு மனது சாந்தம் அடையும். so don't வொர்ரி.

அன்புடன்
பிரியா.

ஆமினா ,
மிகவும் நன்றி ப்பா. நீங்க சொன்னதுல பல விஷயம் நான் கொடுத்துக்கிட்டு தான் irrukkan. ஆனாலும் அவன் சாப்பிடவ மாட்டங்கிறான் . என்ன பண்றது ந thariyala

http://www.arusuvai.com/tamil/node/14967

இந்த லிங்க்ல நல்ல பயனுள்ள தகவல்கள் இருக்கு. இதுல போய் பாருங்களேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என் குழந்தை ஆப்பிள் வேகவைத்து மசித்து கொடுத்தால் சாப்பிட மாட்டேன் என்கிறாள். அதில் பால் கலந்து கொடுக்கலாமா? ஆனால், வீட்டில் ஆரோக்யா பாக்கெட் பால் தான் யூஸ் பண்றேன். அவளுக்கு இந்த பால் கொடுக்கலாமா? இப்பொழுது, டெக்ஸ்லோக் மில்க் பவுடர் தான் கொடுக்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

தோழிகளே பதில் கூறுங்கள் பிளீஸ்.

அன்புடன்
மகேஸ்வரி

Anaivarukkum Vanakkam

Ennudaya Magalukku 6 vayadhu Aagiradhu avaladhu Edai 12 Kg dhan irukkiral idhanaal yennakku migavum varuthamaga vullathu parpavargal ellam Enna Un magal ivvalvu olliyaga irukkiral endru ketkindranar en mana varuthathirku yerenum Alosanai vazhangungalen aval edai Kooda naan yenna madhiriyana Unavu vagaigalai kodukkalam.

மேலும் சில பதிவுகள்