MENU OF THE DAY(இன்றைய மெனு)

சும்மா டெய்லி காலையிலனா இட்லி தோசை, சப்பாத்தி, இடியாப்பம். மதியம்னா சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், வறுவல், பிரியாணி, புளிக்குழம்பு, கூட்டு இப்படியே இத விட்டா வேற யோசிக்கவும் முடியல செய்யவும் முடியல. இப்படியே செய்து செய்து ரொம்பவே போர் அடிக்குது. நான் அந்த அளவுக்கு சமையல்ல எக்ஸ்பேர்ட்டும் கிடையாது. தோழிகள் நீங்கள் உங்க வீட்டில் மெனுவயும் வித்தியாசமான சைட் டிஷ்களையும் பகிர்ந்துக் கொண்டால் என்னை போன்ற கத்துக் குட்டுகளும் பயன் பெறுவாங்க. தோழிகள் உதவுவீர்களா ப்ளீஸ். காலைல, மதியம், இரவு என்ன மாதிரியான உணவு செய்யலாம்னு கொஞ்சம் ஐடியாஸ்ம் கொடுங்களேன்.
நான் இன்னக்கி எங்க வீட்டுமெனு சொல்லி ஆரம்பிச்சு வைக்கவா?
காலைல:
தோசை, வெங்காய சட்னி
மதியம்:
வற்றல் குழம்பு, பருப்பு துவையல் அப்பளம், மோர்
இரவு:
திரும்பவும் அதே தோசை வேற ஏதாவது சட்னி

தோழிகள் தொடரவும்.

Hi friends,
தாங்க்ஸ் பா. எனக்கும் அதெ பிரச்சனை தான். இரவு உண்வுக்கு என்ன என்ன டிபன் அயிட்டம் என்று யாராவது suggest . pls பண்ணுங்கப்பா .

லஷ்மிஸ்ரீ நல்ல தலைப்பு, ஆமாம் நீங்க சொல்வது சரிதான் செய்ததே செஞ்சா நமகே போர் அடிக்குது அப்ப சப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் பாவம்தான் கணவன்மார்கள் சரி விஷயதிர்க்கு வரேன்
எங்க வீட்டு மெனு
1.காலையில்- தோசை வெங்காயம்,தக்காளி சட்னி,பொடி.
2.மதியம்-புளிசாதம், தயிர்சாதம், வழைக்காய் வறுவல்,ஊறுகாய்.
3.இரவு இட்லி எதாவது ஒரு சட்னிதான்.
ரொம்ப எதிர்பார்திங்கலோ........................ என்ன பன்றது நானும் கற்றுகுட்டிதான் மனச தளரவிடாம பருங்க லெஷ்மி நிறையபேர் இப்ப வந்துடுவாங்க வந்து பதுவுகளை அள்ளி விடுவாங்க நம்ம தோழிகள், அதனால என்னோட இரவு சமையலையும் முடிவு பன்னிடுவேன்:) (பொடி, ஊறுகாய் எல்லாம் ஒரு டிஸுனு சொல்லராலேனு பாக்ரிங்கலா ஏன்னா அது எல்லாம் சமயத்தில கைகொடுக்கும் தெய்வம் அதான்)

எப்படி இருக்கீங்க, நீங்க சிற்றுண்டி பிரிவு மாதிரி பிரிவுகளை பார்த்தால் நிறைய குறிப்பு கிடைக்கும்.இல்லையென்றால், கூட்டாஞ்சோறு பகுதியில் பாருங்கள். சாரி ஆமி, நான் ஆபீஸில் இருந்து கிளம்ப போறேன், அதான், இந்த இழை கண்ணில்பட்டது, அதான், உங்களுக்கு முன்னாடி பதிவை போட்டுவிட்டேன்.

அன்புடன்
பவித்ரா

கீதா நீங்களும் நம்ம கேஸ் தானா வாங்க வாங்க. நம்ம தோழிகள் நிச்சயம் பதிவு கொடுப்பாங்க வெய்ட் பண்ணுங்க.

நித்யா சேம் பின்ச். நானும் நீங்களும் தோசை தானா. நம்மளும் சீக்கிரமே நல்ல expert cook ஆகிடுவோம் ஒருநாள் பாருங்களேன்.

சரி பவித்ரா நான் பார்குறேன் நன்ரி உங்க ஐடியாவுக்கு. நான் இங்க கேட்டதுக்கு காரணமே நிச்ச்யம் நம்ம அறுசுவை தோழிகள் ஏதாவது வித்தியாசமான காம்பினேசனோட தான் செய்வாங்க அத பகிர்ந்துகிட்ட நாமளும் அதுப் போல் ட்ரை பண்ணலாமேன்னு தான்.

எங்க வீட்ல ப்ரெக் ஃபாஸ்ட் ஹெவியா இருக்காது. ரொம்ப
லைட் டிஃபந்தான். கார்ன்ஃப்ளேக்ஸ், வித் மில்க் அண்ட் ஆப்பிள்.
மதியம் லஞ்ச்சப்பாத்தி ஒரு லூஸ் பாஜி, ஒரு சுக்கா பாஜி.
கொஞ்சூண்டு ரைஸ்+ தால். இரவும் ஏதனும் டிஃபன் ஐட்டம்தான்.
சேமியா உப்மா, குருணை உப்மா இட்லி தோசை இப்படித்தான்.
பிறகு ஒரு க்ளாஸ் மோர் குடிச்சுடுவோம்.

திங்கள்:
காலை-சேமியா
மதியம்-சாம்பார்,உருளை கிழங்கு கறி,முட்டை,அப்பளம்
இரவு-சப்பாத்தி, சன்னா மசாலா

செவ்வாய்:
காலை-ரவை உப்புமா
மதியம்-ரசம், கோவக்காய் பொரியல், பருப்பு கடைந்தது
இரவு- பூரி, முட்டை பொடிமாஸ்

புதன்:
காலை- ரவ பாயாசம்
மதியம்- புளி குழம்பு, பருப்பு கீரை, அவித்தமுட்டை
இரவு - மைதாவில் வெங்காயம் சேர்த்து தோஸை, நிலக்கடலை சட்னி

வியாழன்:
காலை -பாம்பே பிரட் அல்லது சைனீஸ் நூடுல்ஸ்
மதியம்-புளி சோறு, நேற்று வைத்த புளி குழம்பு சுண்ட வைத்தது,வடகம்,பூண்டு ஊறுகாய்
இரவு- இட்லி, தக்காளி சட்னி

வெள்ளி:
காலை- தோசை,நிலக்கடலை சட்னி
மதியம்- கோழி க்ரேவி, நெய்சோறு, தாளிச்சா, வெங்காய ரைதா
இரவு- இடியாப்பம், பாலில் வாழைபழம் போட்ட இனிப்பு காம்பினேஷன்

சனி:
காலை- மீந்து போன இடியாப்பத்தில் மசாலா இடியாப்பம்
மதியம்- தக்காளி சோறு, பாகற்காய் வருவல்(மீன் மசாலா போட்டு),அவித்த முட்டை
இரவு- வெஜிடபிள் சப்பாத்தி, நிலக்கடலை சட்னி

ஞாயிறு:
காலை- லீவ்(தூங்கிற்வேன்)
மதியம்- மீன்குழம்பு, தேங்காய் போட்ட கீரை,பொரிச்ச மீன்
இரவு- இடியாப்பம்,மீன் குழம்பு

பௌர்ணமி அன்று புளிச்சோறும், மொச்சைபயறு புளி குழம்பை சுண்ட வைத்தது, அவித்த முட்டை

மாலை வேளைகளில் முடிந்தால் குளோப்ஜாமூன், பிரட் அல்வா,காரட் அல்வா, ரவா கீர், பால் திரட்டு, வாழை போண்டா,பஜ்ஜி,ரசகுல்லா
( எப்பவாவது அவரோட சண்ட போட்டு கடைல சப்பிடுவோம்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹலோ ஆமினா நலமா ?மெனுவெல்லாம் சும்மா கலகுரிங்க வந்துறவேண்டியதுதான் உங்க வீட்டுக்கு

ஆமி உங்க பதிவை பார்க்கும் போதே யப்பா இப்பவே கண்ண கட்டுதே, முடியல, இன்னும் செய்தால் ஆஹா, ஓஹோதான் போங்க.

அன்புடன்
பவித்ரா

தேங்க்ஸ் பவி & நஸ்ரின்

நான் இந்த மெனுவை கிச்சனில் அப்படியே ஒட்டி வச்சுற்கேன். அப்ப தான் யோசிக்க வேண்டிய வேல மிச்சம்ல!தேவையானதை அதை பார்த்து முதல் நாளே வாங்கிற்வேன். எப்பவாவது ஒரு வேளைக்கு மெனு மாறலாம். மத்தபடி இது தான் ரொட்டின்னா செஞ்சுட்டிருக்கேன். ஒரே மாதிரி செஞ்சுட்டிருக்கோமேன்னு சளிப்பும் வராது.(எங்கக்கா கிட்ட இருந்து காப்பியடிச்சது!)

நஸ்ரின் எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க!
அசத்திற்லாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா மேடம் ரொம்பவே அழகா லிஸ்ட் போட்டுருகிங்க என் கணவர் அடிகடி சொல்லும் விஷயம் ஆனால் நான் செய்ய மாட்டேன் ஆனா உங்களுடைய அட்டவணை அருமையா இருக்கு இதில் உள்ளபடி நானும் என் கணவரும் ஒரு அட்டவனை தயார் செய்ய முயர்சிக்கிரோம். உங்க மெனு வித்தியாசமா இருக்கு நிலக்கடலை சட்னி எப்படினு சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்