இஞ்சி குழம்பு - 1

தேதி: July 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

1. இஞ்சி - 50 கிராம்
2. பூண்டு - 3 முழு சின்ன பூண்டு
3. சின்ன வெங்காயம் - 15 - 20
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. தக்காளி - 2
6. புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
7. மிளகாய் வற்றல் - 12
8. மல்லி - 3 மேஜைக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு
11. தேங்காய் துண்டுகள் - 1 கைப்பிடி
12. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
15. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
16. உளுந்து - 1/2 தேக்கரண்டி


 

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல், தனியாவும் தனி தனியாக வறுத்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
புளியை கரைத்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கவும்.
மிச்சம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் திரண்டதும் எடுக்கவும்.


நெய் விட்டு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து செய்வதால் மிகவும் நல்லது. 1 வாரம் கூட வைத்து சாப்பிடலாம். விரும்பினால் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். அல்லது இஞ்சுடன் சேர்த்தும் அரைத்து ஊற்றலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
இஞ்சி குழம்பு புதுமையா தேங்காய் சேர்த்து செய்து இருக்கீங்க நான் தேங்காய் தவிர்த்து மற்ற பொருள் சேர்த்து இதே போல் தான் குழம்பு செய்வேன்
வாழ்த்துக்கள்
மேலும் பல குறிப்புகள் தாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.. மிக்க நன்றி. குறிப்பில் சொல்லிருக்கனே தேங்காய் இல்லாமலும் செய்யலாம்'னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இன்னிக்கு இஞ்சி குழம்புதான் செய்தேன், சாப்பிட்டேன் அக்கா
நல்ல டேஸ்ட்
எனக்கு ஒரு சந்தேகம், பால் எடுத்த பிறகு நான் அந்த தேங்காய் துருவலை யூஸ் பண்ண மாட்டேன், ஆனா அதை முழுசா வேஸ்ட் பண்ற மாதிரி இருக்கும். அதை வைத்து எதாவது செய்ய முடியுமான்னு சொல்லுங்களேன்

அன்புடன்
பவித்ரா

Dear pavi
after extracting the milk from coconut dry the waste in sunlight

and adding colours as you like and use for rangole kolams instead of

salt and mud.

anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ஐஷ்வர்ய லக்ஷ்மி ... உங்கள் தோழியிடன் என் நன்றியை தெரிவியுங்கள். பின்னூட்டம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி. :)

பூங்கோதை... மிக்க நன்றி. நானும் நீங்க சொன்னதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பவித்ரா... மிக்க நன்றி. தேங்காய் துருவல் பால் எடுத்ததும் என்ன செய்வதென்று எனக்கும் தெரியல பவி, நானும் பல முறை வீனாக்கினதா உணர்வேன். பூங்கோதை சொன்ன மாதிரி வேணும்'ன முயற்சி செய்து பார்க்கலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வானி

என் தோழி இதை சமைதால்

நன்றாக இருந்தது

நேற்று இரவு இன்று மதியத்திற்கு என்ன சமைப்பதுன்னு யோசிச்சி யோசிச்சே டைம் போயிடுச்சு வீட்டுல vegetables எதுவும் இல்ல அந்த நேரத்தில உங்கள் இஞ்சி குழம்பு கண்ணில் பட்டது. இரவே அரைக்கவேண்டியத எல்லாம் அரைத்து, தேங்காய் பால் எடுத்து fridge ல வைத்துவிடு காலையில் எழுந்து குழம்பு செய்துட்டு வேலைக்கு போய்விட்டேன்
வேலையில் இருந்து திரும்பி வந்து இப்போதான் சாப்பிட்டோம் taste ரொம்ப different டா ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் vanivasu

ponni

செய்து பார்த்து வரும் பின்னூட்டங்களுக்கு மகிமையே தனி தான். :) மிக்க மகிழ்ச்சி, நன்றி பொன்னி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நீங்க தான் வாணிவாசு வா ரொம்ம taste ஆ இருந்ததுப்பா குழம்பு

ponni

நானே நானே நானேதான். :D வனிவசு

மிக்க நன்றி பொன்னி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா