பரங்கிக்காய் சட்னி

தேதி: July 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3.7 (3 votes)

 

பரங்கிக்காய் - ஒரு துண்டு
காய்ந்த மிளகாய் - 4
உளுந்து - கால் கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் பரங்கிக்காயின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி விட்டு நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கின பரங்கிக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக புளி, பெருங்காயம் சேர்த்து லேசாக வதக்கி ஆற வைக்கவும்.
உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். சுவையான பரங்கிக்காய் சட்னி தயார்

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, நாண் ஆகியவற்றிற்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும். பரங்கிகாயை அதிகம் வதக்கினால் அதில் இருக்கும் தாது சத்துக்கள் அழியும் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் மட்டும் நன்கு வதக்கலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கவிதா
இந்த குறிப்பு வழக்கம் போல ரொம்ப எளிமையா இருக்கு. வாழ்த்துக்கள். மேலும் பல குறிப்புக்கள் தர வாழ்த்துக்கள்.

(இங்கே கிடைக்காது. புட்பஜார்ல தேடி பாக்கணும். கிடைத்ததும் செஞ்சுட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா,
குறிப்புகளா கொடுத்து அசத்துறீங்க. வாழ்த்துக்கள். எனக்கு பரங்கிக்காயில் பொரியல் மட்டும் தான் செய்ய தெரியும். உங்கள் குறிப்பினை நிச்சயம் செய்து பார்க்கிறேன். இது போன்று நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி மேடம்,
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
நீங்க கண்டிப்பாக செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா மேடம்,
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
உங்களுக்கு பரங்கிக்காய் கிடைக்காதா?
கிடைத்தால் நீங்க கண்டிப்பாக செய்து பாருங்க

என்றும் அன்புடன்,
கவிதா


எங்க் பாட்டி பரங்கிகாய் தொகையல் பண்ணுவா. நன்னாருக்கும்.ஆனா சட்னி பண்ணதில்ல. பண்ணி பாத்துட்டு சொல்றென்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா மாமி,
உங்களை அப்படி கூப்பிடலாம் இல்ல?
உங்களை விட நான் ரொம்ப சின்னவ...மேடம் எல்லாம் வேண்டாம்
ரொம்ப நன்றி ... நீங்க செய்து பாருங்க ...

என்றும் அன்புடன்,
கவிதா


//மோகனா மாமி,
உங்களை அப்படி கூப்பிடலாம் இல்ல?
உங்களை விட நான் ரொம்ப சின்னவ...மேடம் எல்லாம் வேண்டாம்
ரொம்ப நன்றி ... நீங்க செய்து பாருங்க ...//

என்னது இது?இன்னைலேந்து ஒரு கண்டிஷன் போடறென்.என்ன மாமின்னு வாய் நேறய கூப்பிடாதவாளோட டூ விட்டுடுவேன் தெரியுமோல்யோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் உன்காண்ட பேசுறது இதுதான் முதல் தடவை மாமி நல்லா இருக்கேள

ஹாய் கவி எனக்கும் பரங்கிகாய்ல சட்னி பண்ணுறது தெரியாது பரங்கிக்காய் வாங்கி செய்துடு சொல்லுறன்

nasreen மேடம்,
செய்து பாருங்க மேடம்
ரொம்ப நல்லா இருக்கும்
பரங்கிக்காயோட இனிப்பு பொறுத்து மிளகாய்,புளி சேர்த்து செய்யுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா மேடம் என்ன நீங்க நஸ்ரின்னே சொல்லுங்க இல்லன நான் உங்கக்குட பேசமாட்டேன் ஆமா

ஹாய் கவிதா உங்க பரங்கிக்காய் சட்னி செய்தேன் நன்றாக இருந்தது